Archive For அக்டோபர் 15, 2020

மலர்ந்தும் மலராத காலைப் பொழுதாக – பாண்டி பஜார் இன்று

By |

மலர்ந்தும் மலராத காலைப் பொழுதாக – பாண்டி பஜார் இன்று

Excerpts from my fourth Arasur novel ‘Vaazhnthu Pothire’ இங்கிலீஷ்காரி. அகல்யாவுக்குத் தெரியும். இந்தப் பெண் அங்கே, லண்டனோ, வேறே பட்டணமோ, இங்கிலாந்தில் இருந்து வந்து இறங்கி இருக்கிறாள். கறுப்பு தான். சரி, மாநிறம். அகல்யா சிவப்பு. சரி, சரி, கூடுதல் மாநிறம். அகல்யாவுக்கு, கற்பகம் பாட்டி சொல்வது போல, கொடி போல் உடல்வாகு. பிள்ளை பெற்றால் ஊதிப் போகலாம். இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும் என்று தோன்றவில்லை. உருண்ட தோளோடு கன்னம் வழுவழுத்து, மார்பு…




Read more »

இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுஜாதாவின் நாடகங்கள் பற்றி

By |

தமிழில் நடிப்பதற்காக எழுதப்பட்ட நாடகங்களே பெரும்பான்மையானவையும். எனில் படிப்பதற்காக எழுதப்பட்ட நாடகங்களும் உண்டு. உதாரணமாக, மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் எழுதிய ‘நினைக்கப் படும்’. படிப்பதற்கான நாடகங்களையும் மனதில் நிகழ்த்தித்தான் வாசகர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது. சுஜாதாவின் நாடகங்கள் நிகழ்த்தப் பட்டாலும், படிக்கப் பட்டாலும் அலாதி நாடக அனுபவத்தைத் தர வல்லவை. ’கடவுள் வந்திருந்தார்’, ’டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, ’ஊஞ்சல்’, ’அன்புள்ள அப்பா’, ‘வந்தவன்’ என்று அவர் எழுதிய பல நாடகங்களும் அறுபது வயது கடந்த…




Read more »

’இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூலில் இருந்து – ஸ்ரீரங்கத்துக் கதைகள்

By |

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் பற்றி – ஸ்ரீரங்கத்து மனிதர்களுக்கு ஒரு பொதுத் தன்மை உண்டு என்கிறார் சுஜாதா ஒரு கதையில் – ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் அக்காரவடிசலும், அதிரசமும், குஞ்சாலாடும் சாப்பிட்டே பலருக்கும் டயாபடிஸ். இதைத் தவிர இவர்களில் பலருக்கும் ரத்தத்தோடு கலந்த நகைச்சுவை உணர்ச்சி. ஸ்ரீரங்கம் கோவில் மேல் அபரிமிதமான ஈடுபாடு. திருவரங்கன் மேல் என்றும் மாறாத, குறையாத பக்தி. ஸ்ரீரங்கத்தை விட்டுப் பிரிய மனமின்றி அமெரிக்கா போய், பிணமாக வந்து இறங்கும் சேச்சாவும், அம்மா…




Read more »

இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா (சாகித்திய அகாதமிக்காக நான் எழுதியது)

By |

இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா (சாகித்திய அகாதமிக்காக நான் எழுதியது)

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சுஜாதா பற்றி நான் எழுதி, சாகித்திய அகாதெமி பதிப்பாக வந்திருக்கும் நூலில் இருந்து – ’சுஜாதா’வின் தகப்பனார் தன் உப அதிகாரியான, திருமதி சுஜாதாவின் தகப்பனாரிடம், ’இவர்களின் திருமணத்தை நடத்தலாமே’ என்று யோசனை தெரிவித்தார். இருவருக்குமே அந்த யோசனை பிடித்திருந்தது. இரண்டு குடும்பங்களும் நன்கு பழகி நல்ல நட்பில் இருப்பதால் புதிய அறிமுகம் என்று தேவைப்படாமல் போனது. எனினும் திருமதி சுஜாதா குடும்பத்தில் அவரை ’சுஜாதா’வின் மூத்த சகோதரருக்குத் திருமணம் செய்து…




Read more »

சாகித்ய அகாதமிக்காக நான் எழுதிய நூல் – இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை : சுஜாதா

By |

சாகித்ய அகாதமிக்காக நான் எழுதிய நூல் – இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை : சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா குறித்து நான் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப் பட்டிருக்கிறது. நண்பர்கள் படித்துக் கருத்துச் சொல்லக் கோருகிறேன். The monograph I wrote on Tamil author Sujatha (commissioned by Sahitya Akademy) has been published by the Academy.




Read more »

சின்னத்தம்பி அண்ணாவி மெமோரியல் சவிட்டுநாடகக் குழுவின் காந்தி சரித்திரம், சவிட்டுநாடகம்

By |

Excerpt from the famous Malayalam novel LanthanBatheriyile Luthiniakal by N S Madhavan – translated into Tamil as Beerangi Paadalkal by Era Murukan காந்தி சரித்திரம் வேணுமா? இந்தா பிடியுங்க காந்தி சரித்திரம். சின்னத்தம்பி அண்ணாவி மெமோரியல் சவிட்டுநாடகக் குழுவின் காந்தி சரித்திரம், சவிட்டுநாடகம்.”. கள்ளுக்கடையில் பின்பகுதியில் இருந்து யாரோ பீங்கான் பாத்திரத்தில் அலுமினியக் கரண்டியால் தட்டியது கடை முழுக்க எதிரொலித்தது. சந்தியாகு காலடி எடுத்து வைத்து ஆடத் தொடங்கினார்:…




Read more »