Archive For அக்டோபர் 22, 2021
ஹொன்னாவர் ரதவீதியில் பரபரப்பு ஏற்படுவதற்கு முன் மாந்தோப்புத் தெரு இல்லத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று நேமிநாதன் தீர்மானம் செய்திருந்தது நிலைகுலைந்து போனதற்கு பாதிராத்திரிக்கு மேலும் விழித்திருக்க வைத்த ரோகிணி காரணம் இல்லை. மாந்தோப்புத் தெருவே மரங்களின் அணிவகுப்புக்கு இடையே இருப்பது. வேம்பும், மலை வேம்பும், நெடுநெடுவென்று நெட்டிலிங்க மரங்களும், அசோகமும், பலா மரங்களுமாக தெருவோரம் வரிசையாக நிற்கும். வீடுகளுக்கு நடுவே ஒன்றிரண்டு மாமரங்கள் தட்டுப்படாமல் இருக்காது. நாள் முழுக்க வெப்பம் தட்டுப்படாமலும் ராத்திரியில் குளிர் மிகுந்தும்…
படுக்கை அறைக்கு ஓரமாக ஜன்னல் வழியே பேய் மிளகுக்கொடி திரும்பவும் உள்ளே நுழைந்து படர ஆரம்பித்திருந்ததை சுபமங்களத்தம்மாள் திகிலோடு பார்த்து, குசினிக்காரனை விளித்து அதை வெட்டியெறியச் சொன்னாள். அவனும் பயப்பட, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டிக்குள் இருந்து பெரிய கத்தரிக்கோலை எடுத்து கொடியை சுபாவமாக நறுக்கித் தள்ளினார். என்ன செய்கிறது இவருக்கு என்று கட்டிலில் சுபமங்களா மேல் முகம் சாய்த்து சயனம் செய்திருந்த பிரபுவுக்கு தன் பிருஷ்டம் இடிபடும் தூரத்தில் நின்று விசாரித்தார் பைத்யநாத். பிரபு நல்ல…
an excerpt from MILAGU “வாத்தியாரே, இன்னும் தாமதிக்காமல் பெத்ரோ பிரபுவிடம் வந்து பார்க்கச் சொல்லி அவசரச் செய்தி அனுப்பினால் என்ன” என்று சுபமங்களத்தம்மாள் கேட்டாள். அதுவுஞ்சரிதான் என்று ஒரு சாரட் வண்டியில் தோட்டக்காரனையும், குசினிக்காரனையும் அனுப்பி வைக்கச் சொன்னார் விக்ஞான உபாத்தியாயர். அனுப்பி வைக்கப்பட்டது. போனவர்கள் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்கள். பெத்ரோ பிரபு கிழக்குக் கரையில் காளிகட்டம் பயணம் வைத்து நேற்றுக்காலைதான் புறப்பட்டுப் போனதாகவும் இன்னும் மூன்று வாரம் ஆகும் அவர் திரும்பிவர என்றும்…
”இன்னும் கூடுதல் குருதிப் பசியோடு இந்தக் கொடியை முன்னேற்றினால் அது கொடுக்கும் மிளகு அளவு மிகும். எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வளர்ந்து செழிக்க, கோழி, ஆட்டின் குட்டி, கன்றுக்குட்டி, எருமை என்று புலிக்கு இரை போடுகிறதுபோல் ஈய முற்பட்டால் மிளகிலேயே சிறந்ததாகி விடும் நம் பேய் மிளகு”. உபாத்தியாயர் பெருமையோடு சொன்னார். ”விக்ஞான உபாத்தியாயரே, கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த மிளகுக்கொடியை இன்னும் உக்ரமாக்குவோம் வாரீர்” என்று காலையில் தொடங்கி மயில்…
சுபமங்களத்தம்மாள் கஞ்சியோடு வந்து கட்டில் முனையில் உட்கார்ந்து, கவுட்டிங்ஹோவை தோளில் சாய்த்துக்கொண்டு உபாத்தியாயரைப் பார்த்துப் புன்சிரித்தாள். “இவர் அடிக்கடி இப்படி நினைவு இல்லாம போயிடுவார். ஆனா இன்னிக்கு பகல்லேயே போய் தரையிலே விழுந்து கிடந்தார். வாங்க வாத்தியாரே, நீங்க அந்தத் தோளைப் பிடிச்சுட்டு, அவர் தோளை சொன்னேன், கட்டிலுக்கு பின்னாலே நில்லுங்க. இன்னும் பத்து நிமிஷத்துலே கஞ்சி குடிச்சுடுவார்” என்றாள் சாதாரணமான தொனியில் சுபமங்களத்தம்மாள். ”அது என்னமோ செய்யலாம் தான். ஆனால் மயக்கம் தெளியாவிட்டால்?” விக்ஞான உபாத்தியாயரின்…
excerpts from the mega novel MILAGU ”பிரபு, வாசலில் விளக்கில்லேயே. உள்ளே மும்முரமாக வாசித்துக் கொண்டிருக்கிறீரா”? உபாத்தியாயர் உள்ளே நுழையும்போது அழைத்தபடி வந்தார். கீழே தரையில் கிடந்த ஏதோ அவர் காலில் தட்ட சுவரில் கையை வைத்து விழாமல் நின்று கொண்டார். சின்ஹோர் சின்ஹோர் என்று இரண்டு தடவை கூப்பிட கீழே இருந்து ஏதோ மிளகு வாசனையோடு அவர் காலில் ஏறத் தொடங்கியது. அவர் கைகளை மிகையாக அசைத்துக்கொண்டு வாசலுக்குத் திரும்ப ஓட, காலையிலேயே சகோதரி…