Archive For அக்டோபர் 18, 2021
கஸாண்ட்ரா முகம் பார்த்து கவுட்டின்ஹோ பிரபு உன்மத்தம் கொண்டு அவளை கட்டிலுக்கு தூக்கிப் போக யத்தனம் செய்தது, அவர் தரையில் மயங்கிக் கிடப்பதிலும், கொதிக்க வைத்திருந்த தண்ணீர் சிந்தி பேய் மிளகு ராட்சசத்தனமாக வளர்ந்து பிரபு காலைச் சுற்றி வளர்ந்ததிலும் முடிந்தது. தற்போது அவர் இன்னும் தரையில் கிடந்து உறங்கியபடி, மிளகுக்கொடி சுற்றி, கர்ப்பத்தில் சிசு போல் பிரசவிக்கப்படக் காத்திருக்கிறார். விக்ஞான உபாத்தியாயரிடம் ஒரு நாள்பட்ட பழக்கம் உண்டு. காலையில் ஐந்து மணிக்கும் சாயந்திரம் ஐந்து மணிக்கும்…
இருட்டுகிற வரை கவுட்டின்ஹோ பிரபு எழுந்திருக்கவில்லை. சுற்றி பேய் மிளகுக் கொடி பந்தலித்து அவர் கால்களை முழுக்கச் சூழ்ந்திருந்தது. பின்னால் இருந்து அது நீண்டு அவர் தலையைச் சுற்றிப் படர்ந்து இறுக்கத் தொடங்கியிருந்தது. வேலைக் காரர்கள், தோட்டக்காரன், சமையல்காரன், வீட்டு நிர்வாகி என்று எல்லோரையும் இன்று வரவேண்டாம் என்று சொல்லியிருந்ததால் அவருக்கு என்ன ஆனது என்று பார்க்க, தேவையானால் வேண்டிய உதவி செய்ய என்று கூட அடிப்படை கவனத்தை ஈயவும் யாருமே இல்லாமல் போனார்கள். அவரும் விக்ஞான…
அடுத்த ஆச்சரியகரமான அனுபவமும் இந்த அம்பலப்புழையில் தான் கிடைத்தது. அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம் தரிசித்த பகல் நேரம் பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு எல்லோரோடும் நானும் போகிறேன். திடீர்னு அந்த வீட்டையும் அசுர மிளகுக் கொடி சூழ்ந்து படர்ந்து வாடை கனமாகக் கவிந்து வருதுன்னு பிஷாரடி சொல்லி அந்த மிளகுக் கொடியின் பீஜத்தை பிடுங்கிப் போடுகிறார். அப்புறம் சொல்றார் – அது யார் அந்த சின்னப் பையன். மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கிய இடத்திலே இவன் என்ன பண்றான்?…
சாரதா – தெரிசாவும் அசுர மிளகும் – நீள்பதிவிலிருந்து ஒரு சிறு பகுதி முப்பது வருஷம் என் வாழ்க்கையில் அதிசயங்கள் ஏதும் நிகழவில்லை. கடந்த சில மாதங்களாக, குறிப்பாகச் சொல்லப் போனால் வருஷம் 2000 பிறந்தபின் ஆச்சரியகரமான நிகழ்வுகள் மறுபடி தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. டிசம்பர் 1999 இறுதியில் நான் என் மகன் மருதுவோடு கொஞ்சம் நாள் லண்டன் கருப்புக் குதிரை வீதி பலமாடிக் குடியிருப்பில் தங்கி இருந்து வர லண்டன் போயிருந்தேன். சின்னச் சங்கரன் காத்மாண்டுவில் இருந்து…
நான் சாரதா. நான் தெரிசா. நான் கொச்சு தெரிசா. நான் சாரதா தெரிசா. இன்றைக்கு என் பிறந்தநாள். ஜூலை 4 அமெரிக்காவுக்கு சுதந்திரதினம் என்பதோடு எனக்கும் விசேஷமான தினம். அறுபத்தைந்து வயது ஆகிறது. அம்பலப்புழை தேகண்ட என்றால் சமையல்கார பிராமணர்களின் கிட்டத்தட்ட நூற்றுநாற்பது வருட வரலாறு கொண்ட குடும்பத்தில் வந்தவள். அம்பலப்புழை தேகண்ட பிராமண குடும்பத்தில் இருந்து என் கொள்ளுத்தாத்தா மதம் மாறியதால் அவர் ஜான் கிட்டாவய்யர் ஆனார். நான் மறுபடி மதம் மாறி இந்துவாக, சாரதாவாக…
குதிரைகள் தண்ணீர் அருந்தவும் நாங்கள் சற்றே இளைப்பாறவும் சாலை ஓரத் தோப்பில் சாரட்கள் நிற்கின்றன. நேரம் என்ன என்று கேட்பதற்கு முன் பகல் ஒரு மணி ஆகப் போகிறது. உள்ளாலில் இருந்து ஒண்ணரைக்கல் வெளியே இருக்கிறோம் என்று பாதுகாப்பு வீரர் மரியாதையோடு சொல்லி நிற்கிறார் – எதாவது வேணுமா அம்மா? வேணும் என்று சொல்ல வாயெடுக்கிறேன். வேணாம். அவர்கள் அத்தனை ஆண்களும் தோப்பின் மரங்களுக்குப் பின்னாலும் கொஞ்ச தூரம் நடந்து பழைய ஆளில்லாத கட்டடங்களின் ஒரமாகவும் குத்தவைத்து…