Archive For அக்டோபர் 11, 2021
என் பெருநாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி. வழக்கம்போல் ஊர்ப் பிரமுகர்கள் என்னிடம் பேசத் தயாராக மேல் துண்டால் வாய் பொத்தி நிற்கிறார்கள். துண்டை அகற்றித் தோளில் போட்டுக் கொண்டு சுருக்கமாக, வாழ்த்து எல்லாம் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து பேசச் சொல்கிறேன். கேட்டதின் சாரம் இதுதான் – இந்த ஏரியில் உத்தர கர்னாடாகப் பிரதேசத்தின் பல பகுதி நீர்நிலைகளில் இருப்பதுபோல் கோடையில் வெள்ளம் வடிவதும் மற்ற காலங்களில் கூடுவதும் சாதாரணமாக நடப்பதில்லை. மழைநீர் சேமிப்பு…
நான் பார்த்தபோது முழங்கால் வரை ஏரிநீரில் மூழ்க விட்டுக்கொண்டு பலபேர் எந்த காரியமும் இல்லாமல் ஏரிக்குள் இருந்து எல்லா திசையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏரிக்குள் இறங்கி நிற்கும் எல்லோரையும் இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து அவரவர்களுக்கான காரியங்களில் செயல்படுவதை தொடரச் சொல்லி உத்யோகஸ்தர்கள் பலமாகக் கூவுகிறார்கள். அப்படி வரவில்லை என்றால் முதலை ஊர்ந்து வந்து பிடித்துக் கொண்டால் மீட்க ஒரு முயற்சியும் செய்யப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள். ஏரிக் கரையில் நிற்பவர்கள் முதலையைப் பிடிக்க எடுக்கப்…
An excerpt from my mega-novel MILAGU இரண்டு நாள் முன்பு சென்னபைரதேவி அவளுடைய வளர்ப்பு மகனை மிர்ஜான் கோட்டையில் இருந்து வெளியேற்றிய செய்தி கொண்டு வந்த தூதன் ஏதாவது பதில் இருக்கிறதா அம்மா என்று கேட்டான். என் ஆதரவை சென்னபைரதேவிக்கு அளிக்கிறேன். ஜெர்ஸோப்பா நாட்டு மகாஜனங்களும் அவருக்கு பெரும் ஆதரவு தரவேண்டும் என்று விரும்புகிறேன் . உத்தர கர்னாடகா பிரதேசத்தின் வியாபார, பொருளாதார வளர்ச்சிக்கு அவருடைய பங்கு கணிசமானது. அவருக்கு எதிரான சிறு போராட்டங்கள்…
உடையாத பலூன் ————— போன வாரம், சரியாக எட்டு நாள் முன்பு பாப்பாவுக்குப் பிறந்தநாள் வீடு அலங்கரித்தோம் காகிதத் தோரணம் தொங்க விட்டோம் முகமூடி அணிந்து குழந்தைகள் ஆட பாட்டு ஒலிபரப்பினோம் அடுமனைக்கு தொலைபேசி கேக்கும், சமோசாவும், சர்பத்தும் வரவழைத்தோம் நல்ல விருந்து. பெரிய பலூன்களை ஊதி ஊதி குழந்தைகள் கையில் கொடுத்தோம் கதவிலும் ஜன்னல்களிலும் ஒட்டவைத்தோம் பாப்பா கையிலும் பலூன் பிடித்து அங்குமிங்கும் ஓடினாள் ரம்யமாக. எல்லா பலூனும் அப்புறம் உடைய பாப்பா கை பலூனுக்கு…
வழியில் தென்படும் முதல் சத்திரத்தில் சாரட் வண்டிகளை நிறுத்தச் சொல்கிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வல்லூர் ராமானுஜ கூடம் என்று பெயர் எழுதிய வழிப்போக்கர் சத்திரத்தை அடைந்து நிற்கின்றன. முதல் சாரட்டில் வந்த பாதுகாப்பு வீரர்கள் சாரட்டில் இருந்து கீழே இறங்கி சத்திரத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். வாசலில் இருந்து எட்டிப் பார்த்து விட்டு காலணிகளைக் கழற்றி உள்ளே ஓடுகிறதைப் பார்த்து புன்னகைக்கிறேன். நான் இது தொடர்பாகக் கொடுத்திருந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளே இருந்து நெற்றி நிறைய,…