Archive For அக்டோபர் 6, 2021
Excerpt from my forthcoming novel MILAGU நான் அப்பக்கா. இப்படிச் சொன்னால் போதாது. எந்த அப்பக்கா? என் அம்மா பெயரும் அதேதான். போதாக்குறைக்கு என் தங்கையும் அப்பக்கா தான். உலகத்தில் புதிதாகச் சூட்டப் பெயர்களே இல்லாமல் அஸ்தமித்து, எல்லோரும் வேறு வழியின்றி அப்பக்கா என்று நாமகரணம் பெறவேண்டும் என்பது எழுதாவிதியோ என்னமோ. நான் மூத்த மகள் அப்பக்கா சௌதா. சௌதா என்பது வீட்டுப் பெயர். வடக்கு கர்னாடகத்தில் உள்ளால் மற்றும் புட்டிகே பிரதேசங்களுக்கு துளுவ வம்ச…
சாப்பிடாமல் வாருங்கள் என்று இரண்டு தூதர்கள் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பியிருந்தார் மதுரை மாமன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். சாயந்திரம் ஏழு மணிக்குச் சந்திக்கலாம் என்று செய்தி அனுப்பியிருந்தார் அவர். கோழிக்கோடு ஸாமுரின் போல் நல்ல உயரமும், கெச்சலான கருத்த உருவமும், மேலுடம்பு மறைக்கும் வெள்ளி, பொன் ஆபரணங்களுமாக நாயக்கரைக் கற்பனை செய்திருந்ததது தவறாகப் போனது. ஆகிருதி குள்ளமும் இல்லை உயரமும் இல்லை. இந்துஸ்தானத்தில் மேட்டுக்குடி இயற்கை உடலம்சமாகக் கருதும் சிவப்புத் தோல் என்ற கறுப்பு இல்லாத,…
வந்து விட்டேன் அம்மா. அந்தத் தெருவில் சாக்கடை மூடிகள் காணாமல் போனதால் நேற்று இரவு ஆறேழு வயதுச் சிறுமி ஒருத்தி சாக்கடைக்குள் விழுந்தாள். என்ன ஆச்சு அந்தக் குழந்தைக்கு? சென்னா பரபரப்பாகக் கேட்டாள். இன்று காலை அவள் இறந்து போனாள். அய்யய்யோ. ஆண்டவனே குயில்தோப்புத் தெருவின் சின்னக் குயில். நன்கு பாடுவாள். என் நல்ல சிறியபெண் சிநேகிதி அவள். போகட்டும். இப்போது மகாராணியிடம் ஒரு உள்ளூர் பிரச்சனையைச் சொல்லி விட்டேன். இதை உள்ளூராட்சிக்கு அனுப்பிக் கவனிக்க வைக்கலாம்….
யூத நண்பர்களிடம் கொடுத்து வைத்த தங்கத்தில் கொஞ்சம் போல் எடுத்துக்கொண்டு இந்துஸ்தானம் திரும்ப, நானே எதிர்பாராத விஷயமாக ராஜகுமாரர் நேமிநாதனின் நட்பு கிடைத்தது. லிஸ்பன் பணக்காரர்கள் போல் பணம் ஆனால் அவர்கள் வயசில் பாதி மட்டுமான இளமை. என்னை விடவும் ஐந்து வயது சின்னவன் நேமிநாதன். என்றால் என்ன? என்மீது காமம் மீதுர நான் வலையை விரிக்காமல் அவனே எடுத்து விரித்து தலைகுப்புற சந்தோஷமாக வீழ்ந்தான். ரோஜா அத்தரில் நீராடி வந்த முதல் ராத்திரி அது. ரோஜா…
இருட்டு அச்சமூட்டுவதாக என்னைச் சுற்றிச் சூழ்ந்து விழுங்க வருவதாக பிரமை. நான் ஓவென்று அழுதேன். லிப்ட் கதவுகளை தடதடவென்று அடித்தேன். இல்லை, யாருக்கும் கேட்காது. மின்சாரம் எப்போது வருமோ அப்போது தான் மற்றவர்கள் கவனத்துக்கு நான் வருவேன். அதுவரை? எப்போது அது நிகழலாம்? யாருக்குத் தெரியும்? மருதுவின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தால் என்ன? நேரம் பார்த்தேன் என் மொபைலில். சாயந்திரம் ஆறரை மணி. பாளம் பாளமாக சூழும் இரவு எங்கோ நாயோ பூனையோ கழிந்த வாடையோடு…
நாதா, எடோ நேமிநாதா. இந்த அழைப்பு அவனை இன்னும் காமாந்தகாரனாகி என் முழு அடிமையுமாக்கி ரசவாதம் புரிகிறது. எஜமானி என்று என் பாதங்களை முத்தமிட்டு அவன் சிரசில் வைத்துக்கொள்ள நான் உபசாரம் எல்லாம் பெற்றுக்கொண்டபடி உபதேசம் நல்கினேன் இப்படி- பில்ஜி அரசர் திம்மையராஜு உன்னை விட ஐந்து வயது பெரியவன். என்னைப் போல். அவனை சந்திக்க என்ன கொண்டு போகப் போகிறாய்? அப்பாவியாக நான் நேமிநாதனின் விரல்களைச் சொடுக்கியபடி கேட்டேன். என்ன எடுத்துப் போவார்களாம்? பழம். இனிப்பு….