Archive For அக்டோபர் 1, 2021
ஒரு மௌனப் புயல்போல் ரோகிணி என் வாழ்க்கையில் பிரவேசித்தாள். யார் அவள்? எந்த ஊர்? பெற்றோர் யார்? உற்றோரும் தோழியரும் யாரார்? எனக்கு இளையவளா, மூத்தவளா?அகவை எத்தனை? எந்தக் கேள்வியும் கேட்காமல் ரோகிணி என்ற வசீகரமான பெண் பைசாசத்தின் பேரழகுக்கு ஆளானேன். அது ஆராதிக்கச் சொல்லும் அழகில்லை. போற்றிப் புகழ்ந்து புல்லரித்து அடுத்து நின்று பணிவிடை செய்ய, அடிமைத்தனம் பண்ண ஆசை எழுப்பும் அழகில்லை. நெருக்கி அணைத்து உடலைத் துன்பம் கொள்ள வைத்து கசக்கி முகரச் செய்யும்…
நான் ரோகிணி. நான் எல்லா மதப் பண்டிகைகளையும் இனிப்பு அங்காடியில் கொண்டாடுகிறேன். அங்கே வேலை பார்க்கிற யார் என்ன மதம் என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. அது அவர்கள் சொந்த விஷயம். தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. தெரியாததால் ஏதும் குறை வரவும் வாய்ப்பில்லை. மதம் இனிப்பு அங்காடியில் வேலை பார்ப்பதில்லை. ஆனால் எல்லாக் கொண்டாட்டத்த்திலும் ஏதாவது ஒரு மதம் மகிழ்ச்சியோடு பங்கு பெறுகிறது. அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் அங்காடியின் படி இறங்கிப் போய்விடுகிறது. அடுத்த கொண்டாட்டத்துக்கு…
நவம்பரில் அநேகமாக மிளகு பெருநாவல் பிரசுரிக்கத் தயாராக இருக்கும். மிளகு ஒரு சௌகரியத்துக்காக வரலாற்று நாவல் tag கொண்டுள்ளது. 1565-ம் ஆண்டு தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோல்வி கண்ட பிறகு வடக்கு கர்நாடகத்தில் ஹொன்னாவர், ஜெருஸோப்பா, உள்ளால் என்று மிளகு உற்பத்தியில் உலக அளவில் முக்கியத்துவம் வகித்த குறுநில ஆட்சியமைப்புகள் மகத்தான பொருளாதார வளர்ச்சி கண்ட காலகட்டத்தை, மிளகுராணி சென்னபைரதேவியின் காலத்தைச் சித்தரிக்கிறது மிளகு என்பது பகுதி உண்மைதான். யா.பெரல்மான். ஏ ஐ கிட்டகொரடஸ்கி போன்ற…
சாரட்டில் மனமே இல்லாமல் ஏறிக்கொண்டார் பரமன். குழந்தை மஞ்சுநாத் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லாவற்றையும் எல்லோரையும் உதறிவிட்டுப் போயிருப்பார். எங்கே? ஜெரஸோப்பாவில் கோவில்கள் நிறைந்த ராஜவீதிக்கு. அங்கே இருக்கவும் உண்ணவும் வண்டிக்காரன் சத்திரம் உண்டே, அங்கே வண்டிக்கார நண்பர்களும் உண்டே சீன மந்திரவாதியால் என்ன செய்ய முடியும் என்று பரமன் காத்திருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தார். புரியவில்லை. மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியின் கிளைமொழியில் மொழிபெயர்த்த இடதுசாரி பரமனா இப்போது சீன மந்திரவாதிக்காகக் காத்திருப்பது?…
அவர் இன்னும் அப்சர்வேஷன்லே இருக்கார். நிறைய ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கா. பழச்சாறு, ரசம் சாதம், குழம்புக் கருவடாம், அரிசிப் புட்டு இப்படி சாத்வீகமாக சாப்பிட, குடிக்கன்னு சீலம் மாற்றி வச்சுண்டா இந்த கர்க்கடகத்துலே சரியாயிடும்னு சொல்றா. பார்ட்டி எல்லாம் இப்போ கூப்பிட வேண்டாம் தயவு செய்து. கெட்டக் கனவு கண்டு டயாபரை மாத்தி விட நான் தான் கஷ்டப்படவேண்டி வரும். சின்னக் குழந்தை மாதிரி சுத்திவர மூச்சா போய் முழங்காலைக் கட்டிண்டே படுக்கையிலே உக்கார்ந்திருக்கார்”. ”வசந்தி உனக்கு…
அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அதிகாலை ஐந்து மணிக்குச் சுறுசுறுப்பாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தான். ஐந்து மணி காலை எல்லாம் ஒன்றுமே இல்லை இவனுக்கு. உறங்கினால் தானே புதுசாக விழிக்க. விடிகாலை அல்லது நடுராத்திரி கழிந்த மூன்று மணிக்கு மேல்சாந்தியையும், தந்த்ரியையும் எழுப்பி விடுவான் இவன். இந்த பூஜாரிமார் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு சம்பிரதாயத்துக்காக நீராடி, கோவில் பரப்பில் அருவி போல் மிதமான சூட்டோடு வெந்நீர் பிரவகிக்கும் நவீனமான குளிமுறியில், என்றால் குளியலறையில், கால்கேட் பற்பசையால் தந்தசுத்தி செய்து மைசூர்…