Archive For டிசம்பர் 25, 2021
An excerpt from my forthcoming novel ‘MILAGU’ இனி உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலிறுப்பேன் என்று அடுத்து சொன்னாள் மகாராணி. எதுக்கு அவர்கள் ஏதும் பேச மேடை தரணும் என்கிற மாதிரி நஞ்சுண்டய்யாவும் சந்திரபிரபு பிரதானியும் சென்னாவைப் பார்த்தார்கள். நல்லா நடக்கும், கவலைப்படாதீங்க என்று கண் இமை தாழ்த்தி சமிக்ஞை கொடுத்தாள் மிளகு ராணி. ஒருவர், இருவராகக் கூட்டம் சேர்ந்தது. மனம் திறந்து பேசலாம். யாரையும் கேள்வி கேட்டதற்காகத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ போவதில்லை. விமர்சனத்தை ஐம்பத்தைந்து…
An excerpt from my forthcoming novel MILAGU அவன் நஞ்சுண்டய்யா பிரதானை விடுவதாக இல்லை. மேலும் கேட்டது இப்படி – சேனையில் இருக்கப் போகிறவர்களுக்கு ஒரே மாதிரி நீலக் குப்பாயம், காலில் செருப்பு எல்லாம் வந்து கொண்டிருக்கா? நஞ்சுண்டய்யா யோசித்து ஒரு நிமிடம் கழித்துச் சொன்னார் – ஆயிரம் ஜோடி செருப்பு தைக்க இந்த மாதம் முழுக்க ஆகும். அதற்காக போரை ஒத்திப் போடமுடியுமா?இதுநாள் வரை செருப்பு அணியாமல் இப்போது அணிந்து ஓடிக் குதித்து யுத்தம்…
Excerpt from my forthcoming novel MiLAGU நஞ்சுண்டர் இறங்க, சாரட் நேரே உள்ளே போய்விட்டது. நஞ்சுண்டருக்கு அப்போதுதான் அடிப்படையான தேவைகள் அவர் முக்கிய பிரதானி என்பதையும் மீறி முன்னால் வந்தன. சிறுநீர் கழிக்க வேண்டும். தாகத்துக்கு தண்ணீர் வேண்டும். சற்றே படுத்து எழ ஒரு படுக்கை வேணும். பசிக்கிறது. மதியத்துக்கு ஆகாரம் வேண்டும். சாயந்திரம் சென்னபைரதேவி கூட்டங்களுக்கு போய்ச்சேர வாகனம் வேண்டும். ஜெரஸோப்பாவில் யாரைக் கேட்க? ராஜமாளிகைக்குள் போகலாமா என்று மனதில் ஹொன்னுவைக் கேட்க பதிலே…
An excerpt from my forthcoming novel MILAGU காலை ஜெருஸோப்பா செல்லும் வழியில் மிர்ஜான் கோட்டைக்குப் போய் ராணியை நலம் விசாரித்தார் நஞ்சுண்டய்யா. நஞ்சுண்டரே வாரும், உம்மைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். யுத்தம் வந்தாலும் வராவிட்டாலும் நூறு ஆயுசு உமக்கு என்று முகத்தில் மலர்ச்சியை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு உபசார வார்த்தை சொன்னாள் மிளகு ராணி. ஏதாவது ராத்திரியோடு ராத்திரியாக நல்ல திருப்பம் உண்டாயிருக்குமோ என்று அறிய ஆவலம்மா என்று நிஜ ஆர்வத்தோடு கேட்டார் நஞ்சுண்டய்யா. அப்படி இருந்தால்…
An excerpt from my forthcoming novel எழுபத்தைந்து 1606 ஹொன்னாவர் கடந்த மார்க்கஷீர, புஷ்ய மாதங்களில் – தமிழ் மார்கழி, தை மாதங்கள் – தட்சிண கன்னடத்தில் மங்களாபுரி என்ற மங்களூரு, மைசூரு, , மலையாளக் கரையான ஆலப்புழை, திருவனந்தபுரம், தமிழ் பிரதேசங்களான மதுரை, தஞ்சாவூர், ஆந்திரத்தில் பெஜவாடா, கர்னூல், அனந்தபூர், உத்தர ஹிந்துஸ்தானமான அவத் என்ற லக்னௌ முதலான நகரங்களில் இருந்து ஜெருஸுப்ரா நகருக்கு வந்து போன நாட்டியக்காரிகளின் எண்ணிக்கை முப்பத்தேழு. இவர்கள் சதுர்,…
An excerpt from my forthcoming novel MILAGU இன்னொரு வெற்றிலையை காம்பு கிள்ளி மடித்து குல்கந்து தடவி வாயில் போட்டுவிட அடைப்பக்காரன் ஓடி வந்து ஓரமாக நின்றதை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டே மாமனாரே வாயை இன்னும் திறக்கணும். அவன் விரலை கடிச்சுடப் போறீங்க என்றார் திம்மராஜு. வெத்திலை மடிச்சுத்தர ரெண்டு பொண்ணுங்க உண்டு இன்னிக்கு ரெண்டு பேரும் வரல்லேன்னு இவனை அனுப்பிட்டாங்க. ஏண்டா எலும்பா நீ இது தவிர என்ன பண்ணிட்டிருக்கே அரண்மனையிலே என்று அந்த…