Archive For ஆகஸ்ட் 30, 2021
2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 கண்ணன் பிறந்த நாளில் நான் என் வேம்பநாட்டுக் காயல் blog-இல் எழுதியது இது – கோகுலாஷ்டமி வாழ்த்துகள் ———————————— கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் சென்னை மகாலிங்கபுரம் கிருஷ்ணன் அம்பலத்தில் சற்று நேரம் முன் தொழுது வந்தேன். செத்தி மந்தாரம் துளசி பிச்சக மாலகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம். நான் போன நேரம் கண்ணனுக்குத் திருமஞ்சன வேளை. தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்துபோய் பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ….
வேகமாக முன்னேறி வரும் மிளகு நாவலில் இருந்து அரசூர் சங்கரனும் அடல்ட் டயாபரும் வசந்தி கையை இறுக்கமாகப் பிடித்தபடி சங்கரன் இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ள முடியாது என்று குழந்தை மாதிரி பிடிவாதம். விமானத்துக்குள் ஓட வேண்டியிருந்தது என்றால் இப்படிக் கட்டிப் போட்டபின் செய்ய முடியாது என்பது அவர் வாதம். உயிர் முக்கியமில்லியா என்று தெரிசாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் விசாரிப்பது போல் கேட்டபோது அவர் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் எல்லாவற்றையும் மறந்து…
an excerpt from my forthcoming novel MILAGU அடக்கியும் அன்றியும் மிளகுராணி சென்னபைரதேவியும் அபயராணி அப்பக்கா தேவியும் இருக்கும்வரை டச்சுக்காரர்களின் ஏகாதிபத்யமோ இங்கிலீஷ் ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் குள்ளநரித் தந்திரங்களோ இங்கே எடுபடாது என்றார் ஸாமுரின். போர்த்துகீசியர்களும் இந்தப் பட்டியலில் உண்டு என்பதை அவர் தற்காலிகமாக மறந்திருந்தார். பெத்ரோவும் தான். திடீரென்று ஸாமுரின் எழுந்தார். எல்லோரும் எழுந்து வணங்கித் தலை தாழ்த்தி இருக்க அவர் பின் அரங்கத்துக்கு நடந்தார். போகும்போது யாரிடமோ காதில் ஏதோ சொல்லிப்…
”ஜனவரியில் புறப்பட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா? அல்லது மாட்ரிட் முதலில் வருவீர்களா?” ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார். “இருங்கள் சின்ஹோர் இமானுவல் பெத்ரோ. இந்தப் பயணம் உடனே முடிவெடுத்து அடுத்த நாள் நாலு துணிமணியை மடித்து சஞ்சியில் வைத்துக்கொண்டு கிளம்பி விடுகிற சமாசாரம் இல்லையே. நான் இல்லாதபோது இங்கே காரியங்கள் நான் இல்லாதது குறையாகத் தெரியாமல் நடந்தேறத் திட்டமிட வேண்டும். பயணம் போனால், எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறேனோ…
ஸாமுரின் இடுப்பில் அவசரமாக உடுத்தியதுபோல் ஒரு பட்டுத் துணியை இறுக்கக் கட்டி இருக்கிறார். அதற்கு மேல் உடை ஏதும் இல்லை. பரந்த மார்பும் கரளை கரளையாகக் கையும் காலும் வாய்த்து இரு பக்க கை அமரும் இடங்களிலும் சிங்க உருவங்கள் வடித்து நிறுத்திய அரியணையில் அமர்ந்திருக்கிறார் ஸாமுரின். மேலுடம்பில் துணி போர்த்தாததைக் குறையாக்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான, குறைந்த நீளத்தில், மத்திய நீளமாக முத்துமுத்தாகப் பதித்த மாலைகளும் காசுமாலைகளும் அழகான ஆபரணங்களாக அவர் நெஞ்சில் தவழ்கின்றன….
மிளகு நாவலில் இருந்து கோரன் போனபோது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது என்றார் பரமேஸ்வரன். “பின்னே இல்லையா? ரெபல்லியஸ் லெஃப்டிஸ்ட் அப்படித்தான் கவிதைப் புத்தகத்து அட்டையிலே போட்டிருக்கார். காண்பிக்கறேன் பாருங்கோ”. அவர் காஃபி டேபிள் கீழ் வரிசையாக வைத்திருந்த புத்தகங்களை குவியலாக அள்ளி எடுத்து உரக்கப் பெயர் குறிப்பிட்டார். “எதுக்கு திலீப்? நான் மலையாளம் படிக்கலே. தமிழும் இங்க்லீஷும் மராத்தியும் கொஞ்சம் இந்தியும் தெரியும். அவ்வளவுதான்”. புத்தகத்தைத் தேடி எடுத்து தூசி தட்டி ஓரமாக ஜன்னல்…