Archive For ஆகஸ்ட் 6, 2021
நடுராத்திரிக்கு ஓ என்று சத்தம் போட்டுக்கொண்டு சின்னச் சங்கரன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருந்தார். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. குளிர்காலம் வந்து கொண்டிருக்கும் நவம்பர் மாதம் என்றாலும் வியர்வை உடலிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது. மாதம் ஒரு தடவையாவது திரும்ப வரும் கனவில் வெளி எல்லாம் மிளகு வாசம் அடிக்கும். அத்துவானக் காட்டிலிருந்து ஒரு குழந்தைக் குரல் நிறுத்தாமல் கூப்பிடும் – அப்பா அப்பா அப்பா. பின் அழும். ’சுப் ஷைத்தான் மத் ரோ கோலி தேங்கே’ என்று கனமான…
கஜானன் விநாயக் மோதக் வருடா வருடம் இல்லாவிட்டாலும் முகம் மறந்து போகாமல் வைத்திருக்கத் தக்க விதமாக, அவ்வப்போது அம்பலப்புழைக்கு வந்துவிடுவார். அம்பலப்புழை கிருஷ்ணன் கோவிலில் பிரசாதமாக அளிக்கப்படும் பால் பாயசத்துக்கு மிகப் பெரிய ரசிகரும் கூட, மோதக். நாற்பத்தைந்து வருடமாக ஒரு மராட்டிக்காரருக்கும் ஒரு மலையாள பூமித் தமிழருக்கும் இடையே நிலவும் நல்ல நட்பும் இணக்கமும் இவர்களில் ஒருத்தர் மறைவது வரை கண்டிப்பாக இதே நிலையில் தொடரும். மும்பாய் பம்பாயாக இருந்த 1960-களில் தொடங்கிய பரிச்சயம் அது….
போன தடவை வந்தபோது சிரித்து மாளவில்லை ரெண்டு பேருக்கும். ஒரு கவிராயன் தெலுங்கில் துளுவ ராஜ்யகுமாரி என்று அப்பக்காவை விளித்து நாட்டியமாடத் தோதாகப் பாட்டு எழுதிக்கொண்டு வந்து பாடியும், அடவு கற்பித்து நாலைந்து கன்யகையரைக் கொண்டு ஆடச் செய்தும் அப்பக்காவுக்கு பாட்டும் ஆட்டமும் காட்சி வைத்தான். அப்பக்கா மகாராணியே நீ உலகாளுகிறாய். உன் கேசம் மணம் வாய்ந்தது, மேகம் போல் இருண்டிருப்பது. உன் கண்கள் கரியவை. பெரியவை. உன் தனங்கள் மாம்பழங்கள் மிருதுவானவை. பெரியவை. உருண்டு திரண்டவை….
பற்றிப் படரும் மிளகு நாவலில் இருந்து – கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவிலுக்கு வெகு அருகே மஹா கணபதி ஆலயத்தில் ரோகிணியை பரமன் திருமணம் செய்துகொண்டார். ரோகிணி இந்திய போர்த்துகீஸ் கலப்பினப் பெண். பரமனை விட நானூறு வயது மூத்தவள். ஊமத்தை யுத்தத்தில் முழு போர்த்துகீஸ் இனத்தவனான அண்டோனியோ சகாரியோவான தன் முதல் கணவனை இழந்தவள். அதற்கு அப்புறம் முழுக்க இந்திய வம்சாவளியினளாகத்தான் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறாள். லிஸ்பனில் வீடு, தோட்டம், உறவுக்காரர்கள் என்று இருந்தாலும் உத்தர…
மிளகு நாவலில் இருந்து – a small extract இவ்வளவு கிராமப் புறமாக, பெரிய கோவில்கள், மாளிகைகள் ஒரு பக்கம் இருக்க, மின்சாரத்தின் சுவடுகூட இல்லாமல், உடுப்பும் வேதகாலம் போல் பஞ்சகச்சமும் மூலக்கச்சமும் அணிந்து ஒரு பெரிய நகரமே மேடையில்லாத நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகத் திரும்பத் திரும்ப மனதில் வந்தது. வாசலுக்கு வந்த அந்தப் பெண் ஓய் வாரும் எப்படி இருக்கீர் என்றாள். பிரமாதம் என்று அவர் சொன்னது புரியாமல் மயங்கி அடுத்து உடனே வசீகரமாகச் சிரித்தாள்…
நான் எழுதி வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து ஒரு சிறு பகுதி அற்பமாக ஒரு இனிப்புப் பதார்த்தத்துக்கு இத்தனை பேர் உயிரை விடுகிறார்கள். நாலு நாளாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரத்தி செங்கல் மாதிரி பெரிய வில்லைகளாக நீளக் கத்தியால் வெட்டி, வாழைமட்டை பொதிகளாக அடுக்க, கையே தனியாகக் கழன்று விழப் போவதுபோல வலி. விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார்….