Archive For டிசம்பர் 21, 2021
An excerpt from my forthcoming novel MILAGU போயிடாதீங்க மாப்பிள்ளை, இனிப்பு கொஞ்சம் மெல்ல எடுத்துவரச் சொன்னேன். கேலடி பேரரசர் வெங்கடப்ப நாயக்கர் கடைவாயில் வடிந்த எச்சிலை அவசரமாகத் துடைத்தபடி, ஒக்க மோதிசூரு லட்டு தீஸுகுரா என்று யாருக்கோ கட்டளையிட்டார். பில்கி அரசர் திம்மராஜு மனதுக்குள் ஆவலை மடித்து வைத்தார். இனிப்பு எப்பவும் கடைசியிலே தான் சாப்பிடுவான் வெள்ளைக்காரன். அப்போ தான் அளவுக்கு மேலே தின்னாம அளவா தின்னலாம். பாரு ரெண்டு பேருக்கும் மதுமேகம் இருக்கு….
An excerpt from my forthcoming novel MILAGU லிஸ்பன் பணக்காரங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து வாஸ்கோ ட காமாவுக்கு நூறு வருஷம் முந்தி பண உதவி செஞ்சமாதிரி இவனுக்கு, நேமிநாதனுக்கு உதவறதா சொல்லியிருக்காங்களாம். பில்கி அரசர் திம்மராஜு சிரித்தபடி சொன்னார் அது சரிப்பா அங்கே இருந்து இவன் கேட்டதும் வந்து சேர்ந்துடுமா என்ன? ஒரு மாசமாவது ஆகுமே ஓலைக்கு பதிலெழுத. கேலடி வெங்கடப்பர் வெற்றிலைக்காக அடைப்பக்காரனிடம் கை நீட்டியபடி சொன்னார். அப்போ தான் அவனோட வைப்பு…
An excerpt from my forthcoming novel MILAGU வேறே சிறந்த வைத்தியரைத் தேடி நாலு திசையிலும் அலைந்து கொண்டிருக்கிறார் பில்கி அரசர் திம்மராஜு. அவர் பார்க்கப் போன வைத்தியர்கள் எல்லாம் தெரிந்த ஆனால் அனுபவம் போதாதவர்களாகவோ, அரைகுறை வைத்திய அனுபவசாலிகளாகவோ அமைந்து போகிறார்கள். அனுபவமும் அறிவும் மிகுந்தவர் என்றால் கைராசி துளியும் இல்லாதவராக இருக்கிறார்கள். உடுப்பியில் ஐரோப்பிய மருத்துவர் புதுசாக வந்து இறங்கியிருக்கிறார். பெயர் விளங்காத மருந்து ஏதேதோ கொடுத்து ஜலதோஷத்திலிருந்து, லிங்கம் சிதைக்கும் பொம்பளை…
An excerpt from my forthcoming novel MILAGU பில்கி குறுநில மன்னர் திம்மராஜு பயணம் போவதை அவ்வளவாக விரும்பாதவர். கையிலே ஆயிரம் வேலை வந்து உக்கார்ந்திருக்கு கால்லே சக்கரத்தை மாட்டிக்கிட்டு ஊர் சுற்றக் கிளம்பிட்டா எப்போ முடிக்கறது? அவரானால் இப்போது இந்த கார்த்திகை மாதம் பிறந்ததும் சுறுசுறுப்பாக எல்லா திசையிலும் பயணம் போய்க் கொண்டிருக்கிறார். ஒற்றை சாரட் போதவில்லை. குதிரைகள் களைப்படைந்து விடுவதால் இரண்டு நாட்களுக்கு மேல் அவற்றை மாற்றி வேறு ஜதைகளைப் பூட்ட வேண்டியுள்ளது….
An excerpt from my forthcoming novel MILAGU ஒரு நிலத்தில் அல்லது வீட்டு முகப்பில் காலை ஆறு மணிக்கு ஒரு சிறு துணுக்கு, வேர் இருந்தால் சரிதான், இல்லையென்றாலும் சரிதான், அங்கே போட்டுவிட்டுப் போனால் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டு முகப்பை அடைத்துக்கொண்டு பேய் மிளகு வளர்ந்து உள்ளே போக ஆரம்பித்திருக்குமாம். மனுஷர்களை காலைக் கட்டி இறுக்குவது மூலம் கொல்லக் கூடிய பேய் மிளகை குழந்தைகள் தொட்டால் விரலை இறுக்கி இற்று விழ வைத்து விடும்….
An excerpt from my forthcoming novel MiLAGU சென்னபைரதேவி மகாராணி மேல், கோவிலும் பசதியுமாகக் கட்ட வாரி இறைத்து கஜானாவை காலியாக்குகிறதாக வெகுஜனக் கோபம் இருக்கிறது. அது நேமிநாதனுக்கு ஆதரவாக மாறவில்லை என்பதே உண்மை. இதைச் சொன்னால் கார்டெல் சும்பன்கள் கவனிக்காமல் என் கையிடுக்கு வியர்வை ஈரத்தில் ஒற்றி முத்தமிட காமம் மிகுந்து உதடு சுழிக்கிறார்கள். அல்வாரீஸ் தடியன், நேமி நாசக்காரன் பார்க்காதபோது, என் முலைகளைக் கசக்குவேன் என்று கண்ணடித்து சைகை காட்டுகிறான். காமத்தில் சுழலும்…