Archive For ஜூன் 18, 2021
திலீப் திலீப் ராவ்ஜி ஆனது மலையாள பூமியில் வர்த்தகம் விருத்தியாகி பெரிய ஹோட்டல் உரிமையாளராக ஆன இந்த முப்பது வருடங்களின் மத்தியில் தான். கொஞ்ச நாள் அவரை திலீபன் பரமேஸ்வர ஐயர் என்று அழைத்தார்கள். இத்தனை நீளமான பெயர் எதற்கு என்று நடுவில் சுருக்கி திலீப் பி ஐயர் என்று அழைத்துப் பார்த்தார்கள். அது ஏனோ ஒட்டவில்லை. ஓட்டல் முதலாளிகள் அதுவும் பெரும் தோதில் சைவ உணவகம் நடத்துகிற வெற்றி பெற்ற ஹோட்டல்காரர்கள் எல்லாம் உடுப்பி பின்னணியிலிருந்து…
திலீப ராவ்ஜி தன் காலை நடைப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டு முன்பில் போட்டிருந்த தோட்டத்தில் ஒரு பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தோட்டத்தை கிட்டத்தட்ட தின்று தீர்த்திருந்தது அந்த மாடு. பசு மட்டுமில்லை. கூடவே ஒரு கிழட்டுக் காளையும் மேய்ந்து கொண்டிருந்தது. மாஞ்செடி பதியம் போட்டது, மூலிகை வளர்த்த புதர்வெளிகள், மல்லிகைக் கொடி என்று எல்லாவற்றையும் இந்தக் கால்நடைகள் வேட்டையாடிக் கொண்டிருந்தன. சாப்பிட்டு முடித்து இரண்டு மாடுகளும் வயிற்றுப் பசி தீர்ந்து உடல் பசி முன்…
கோழி மாமிசத்தில் பிரட்ட மிளகு விழுதை எடுத்தாள் கஸாண்ட்ரா. நல்ல வாடை இல்லையா? குசினிக்குள் எட்டிப் பார்த்த பெத்ரோ துரை விசாரித்தார். நல்ல வாடைதான். ஆனால் கோழிக்கு இந்தக் காரம் போதாது. வெங்காயமும், வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்த விழுது பூசி எண்ணெயில் பொறிக்க வேண்டிய மரியாதைக்குத் தகுந்தது கோழி மாமிசம். கஸாண்ட்ரா மாமிசத்தில் மசாலா சேர்த்துப் பிரட்டியபடியே சொன்னாள். எதிராளியைக் கீழே வீழ்த்தி தோளை இறுக்கிப் பிடித்துப் பிசையும் மல்லன் போல் கோழி மாமிசத்தைக் கால்களுக்கு…
ஹொன்னாவர் நகரின் பகல் நேரம் பொறுக்க முடியாத சூட்டோடு மெல்லக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஆயிற்று வெளியே போகிறபோது இந்தியர்கள் போல் மேல் குப்பாயத்தை, உள்சட்டையைத் துறந்து மாரில் சந்தனம் பூசிக்கொண்டு தெருவோடு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக, சுகமாக இருக்கும் என்று பெத்ரோ நினைத்துப் பார்த்தார். கள்ளிக்கோட்டை கிராமப் பகுதியில் பெண்களும் அப்படிப் போவார்களாம். மழைக் காலத்தில் கூடவா அப்படி நடந்து போவார்கள்? இன்னும் இரண்டு வாரம் போனால் மழைக்காலம் வந்து விடும். மழை வந்தாலும் அடித்து…
எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி (சீராக்கப்பட வேண்டிய பிரதி) குறிப்பு – இங்கே தரப்படும் சிறு நாவல் பகுதிகள் எந்த வரிசையிலும் வருகின்றவை அல்ல. ——————————————————- “மகாராணி அவர்களின் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. அந்த விருந்து என்ன சுவை இன்னும் நாவில் உண்டு.” பெத்ரோ நிஜமாகவே லயித்துச் சொன்னார். சென்னா தேவியின் முகம் மலர்ந்தது. கை இரண்டையும் கூப்பி எல்லாம் இறைவன் செயல் என்றாள். பிரதானி…
Excerpts from the novel MILAGU I am currently writing – தற்போது எழுதிவரும் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி (draft awaiting editing) ————————————————————————————————– திருவாளர் பெத்ரோவின் இரட்டைக் குதிரை வண்டி மிர்ஜான் துறைமுக நகர் கடந்து, மிர்ஜான் கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது காலை எட்டு மணி என்று அதிர்வேட்டு போட்ட சத்தம் காதில் விழ தன் கால்சராய் கடியாரத்தை எடுத்து மணி பார்த்தார். எட்டு அடிக்க இன்னும் பத்து நிமிடம்…