Archive For ஜூன் 6, 2021
நான் எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து மாஜி அரசப் பிரதிநிதி ஒரு வினாடி ஏதும் பேசாமல் நின்றார். “சென்னபைரதேவி என்னை மதிக்காமல் நடந்து கொண்டது பெத்ரோவே, உமக்குத் தெரியாதா அல்லது மறந்து போனீரோ?” தெருவில் அடுத்து மூன்று குதிரை பூட்டிய ட்ரோய்க்கா ஒன்று பாதையை விட்டு விலகிச் சற்றே ஓரமாக வர, அதன் மேல் மோதாமல் ஒதுங்கி நின்றபடி கேட்டார் மாஜி கவர்னர். “பிரபு, மன்னிக்க வேண்டும். பல ஆயிரம் இங்கிலீஷ் பவுண்ட் மதிப்புக்கு மிளகும்,…
பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை) ————————– கறுப்பு நிறப் படைவீரன் ஒருத்தனை சதுரங்கப் பலகையின் குறுக்கே அழைத்துப் போய் வெள்ளை முதல் வரிசையில் கொண்டு நிறுத்தினேன். ”நீ யாராக ஆக ஆசைப்படுகிறாய் சொல் உன்னை மாற்றுவேன்”- வரம் வழங்கும் கடவுளாக கருணையோடு அவனைப் பார்த்தேன். என்னை யானை ஆக்கினால் நேரே நடப்பேன் பக்கவாட்டில் கோணல் இல்லாது ஊர்வேன் வேண்டாம் அந்த சொகுசு அசைவு நடக்கவே மறந்து போகும். என்னைக் குதிரையாக்கினால் புத்திசாலியாக…
மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – Draft awaiting editing ஹொன்னாவர் நகரில் ஷராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து பெத்ரோ புண்ணியவாளனின் தேவாலயம் போகும் சாலை. புராதன மாளிகைகள் வரிசையாக நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் ஒன்று அது. போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி மேனுவல் அகஸ்டினோ பெத்ரோ வீட்டு வாசலுக்கு வந்து காத்திருந்த வெள்ளை நிற குதிரை பூட்டிய சாரட் வண்டியையும் சேணத்தைப் பற்றியபடி நிற்கும் கடைக்கீழ் உத்தியோகஸ்தனையும் மாறி மாறிப் பார்த்தார்….
Draft of an excerpt from my novel Milagu – work in progress. All rights @era.murukan பிரபஞ்சத்தில் அனைவருக்கும், அனைத்துக்கும், என்றால், உயிருள்ள, உயிர் என்பது இல்லாத அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டென்று மொழிந்தருளினார் பகவான் மகாவீரர். ஒரு குக்கலை, என்றால் நாயைக் கல் எறிந்து காயப்படுத்தும் மூடர்கள் போல ஒரு செடியை இழுத்துப் காயும் பூவும் பறிக்கும் மூடர்களும் அந்தத் தாவரத்தை வலியால் துடிக்க வைக்கிறார்கள் என்று சொல்லியருளினார் அந்த மகான்….
“மிளகுப் பேரரசி நீடு வாழ்க. யக்ஷ தேவன் அருளுண்டாகட்டும்” போஜன சாலை என்ற விருந்து மண்டபம் நிரம்பி வழிந்தது. தலைவாழை இலைகள், கூட்டிப் பெருக்கி பன்னீர் கொண்டு மெழுகிய பளிங்குத் தரையில் வரிசையாகப் பாய் விரித்து இடப்பட்டன. முதலில் எலுமிச்சையும் இஞ்சியும் கலந்த ஊறுகாயும் உப்பும் பரிமாறப்பட்டது. அவரைக்காயும் உருளைக் கிழங்கும் கலந்த பொரியல் அடுத்துப் பரிமாறப்பட்டது. குழைய வேகவைத்த பருப்பும் தொடர்ந்தது. தொடர்ந்து வெல்லப் பாயசமும் மலையாளப் பிரதேசத்து பாலாடை பிரதமனும் இனிக்க இனிக்க இலையில்…
நண்பர் ஜெயமோகன் தன் இணையத் தளத்தில் இன்னொரு நண்பர் கடலூர் சீனு எழுதிய ‘ராமோஜியம் நாவல் நூல் அறிமுகம் – மதிப்புரை’க்கான சுட்டியைப் பதிப்பித்திருக்கிறார். நன்றி ஜெயன், நன்றி சீனு ஜெ.மோ இணையத் தளத்தில் கடலூர் சீனு கட்டுரை —————————————————————————————————- இரா முருகன் எழுதிய ராமோஜியம் ஒரு சமகாலவரலாற்று நாவல். 620 பக்க இந்த நாவலின் ஒன் லைனை சொல்லிவிட முடியும். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் பணியில் இருக்கும் ராமோஜிக்கும் அவன் மனைவி ரத்னாவுக்கும் இடையே வருகிறாள்…