Archive For மே 23, 2021

New – from the new novel Milagu I am writing – வைத்தியன் வந்த நாள்

By |

New – from the new novel Milagu I am writing – வைத்தியன் வந்த நாள்

அரண்மனை வைத்தியன் ஒரு போத்தல் நிறைய அடைத்த முகர்ந்து பார்க்கும் உப்போடு சென்னபைரதேவியின் திருமுன்பு மரியாதை விலகாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கையைத் தள்ளி எழுந்திருக்கப் பார்த்தாள் சென்னு. அவனா விடாக்கண்டனாக அழிச்சாட்டியமாக அங்கேயே நின்றான். ”என்னை முதல்லே யானைக் காலாலே மிதிக்க வச்சுக் கொன்னுட்டு சர்பத் குடிக்க திருமனசு வைக்கணும் மகாராணி. இப்பவே கொன்னுடுங்கோ” வைத்தியனின் விநோதமான கோரிக்கையைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி. அவன் மேல் தப்பில்லை. சென்னுவின் நாக்கு தான் சின்னக் குழந்தை…




Read more »

எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து – வாழை இலைப் பெட்டி

By |

எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து – வாழை இலைப் பெட்டி

தலைநகர் ஜெருஸப்பா தெருக்களிலும், மிர்ஜான் கோட்டைக்குச் சுற்றிலும் உள்ள நெல் வயல்களைக் கடந்து நிறைந்துள்ள கிராமங்களிலும், மிர்ஜான் நகரிலும், இந்த மிர்ஜான் கோட்டைக்கு உள்ளே பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இன்று இதோ பாருங்கள் இந்தப் பொதியை ஆளுக்கொன்றாக அளிக்கிறோம். குழந்தைகளுக்குச் சற்றே சிறிய பொதியும் பெரியவர்களுக்குப் பெரிதுமாக அளிக்கப்படும் இதெல்லாம்” என்றபடி சிறு பேழை போல் மடித்து ஈர்க்கு குத்திய பச்சைப் பெட்டி ஒன்றைக் காட்டினான். “இதென்ன, வாழை இலையை வளைத்து நெளித்து ஈர்க்குச்சி செருகி,…




Read more »

எழுதிவரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – கர்கலா நான்கு வாசல் கோவில்

By |

எழுதிவரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – கர்கலா நான்கு வாசல் கோவில்

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’ – ஒரு சிறு பகுதி மற்ற கோட்டைகளுக்கு எல்லாம் இல்லாத வடிவ நேர்த்தியும், அழகான புல்வெளிகளும், நீரூற்றுகளும் மிர்ஜான் கோட்டையை வேறுபடுத்திக் காட்டுவதை சென்னு மனமெல்லாம் பெருமையோடு சுவரை அணி செய்த நீண்ட தீவட்டி வரிசையை நோக்கியபடி நினைத்தாள். அவளுடைய நுணுக்கமான திட்டப்படி தான் கோட்டை எழுந்து வந்தது. ஒவ்வொரு மலைக்கல்லாக, மரத் துண்டாக அந்தப் பெரிய கல் கட்டிடம் வெறும் வெளியில் இருப்பு உரைத்து ஓங்கி உயர்ந்து எழுந்தபோது முதலில்…




Read more »

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து

By |

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து

பிற்பகலில் கோமாளி வந்தான். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பகுதியாக, விருந்துக்கு அப்புறம் கோமாளி ஆட்டமும் பாட்டும் தொடங்கின. ஷெனாய், தெற்கத்திய ஊதுவாத்தியமான நாகசுவரம், மகுடி போல முகத்துக்கு நேரே பிடித்து வாசிக்கும் நீளமான குழல், தெற்கே எங்கும் வாசிக்கும் சிறு குழல், வீணை, சரோட் என்று வாத்திய இசையும், குரல் இசையும் வழங்க அடுத்து அடுத்து பிரபலமான இசைக் கலைஞர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய விருந்து. விதவிதமான உணவு வந்து கொண்டே இருந்தது. உண்ட மயக்கத்தில் எல்லோரும்…




Read more »

புதிது எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘மிளகு’ துவக்கம்

By |

புதிது   எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘மிளகு’ துவக்கம்

எழுதிக் கொண்டிருக்கும் ‘மிளகு’ நாவலின் தொடக்கம் இது – மிளகு ராணி விடிய வெகுநேரம் இருக்கும்போதே எழுந்து விட்டாள். மிளகு ராணி. ஒரு தடவை நிலைக் கண்ணாடியில் நோக்கிச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். கண்ணாடி பெல்ஜிய நாட்டில் செய்து அனுப்பியது. அடுத்து இருப்பது இங்கே மலையாள பூமியில் உலோகத்தைப் பளபளப்பாக்கிச் செய்த ஆரன்முளை உலோகக் கண்ணாடி. இரண்டிலும், வயதானாலும் உற்சாகமான ஒரு மூதாட்டி சிரிக்கிறாள். மிளகு ராணி. சளுவ வம்ச மகாராணி சென்னபைரதேவி. சென்னபைரதேவிக்கு தங்களுக்குள்…




Read more »

ராமோஜியம் நாவலில் உணவு

By |

ராமோஜியம் நாவலில் உணவு

ராமோஜியம் நாவல் உணவைக் கொண்டாடுவது. நாவலில் இடம் பெற்ற உணவு வகைகளில் சில பட்டியலாக்கப்பட்டு இங்கே – 1) வெண்பொங்கல் 2) மல்லிப்பூ போல சாதம், கிள்ளிப்போட்ட இஞ்சியும், பறித்துப் போட்ட கொத்தமல்லியும் அரிந்து போட்ட பச்சை மிளகாயும் துருவிப் போட்ட தேங்காயுமாக துவையல், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், பால் பாயசம், கெட்டித் தயிர், பப்படம், அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், நல்லெண்ணெயில் பொரித்த கிடாரங்காய் ஊறுகாய் 3)பால் பாயசம் 4) குளுகுளுவென்று மஞ்சள் பூத்த சிவப்பு…




Read more »