Archive For மே 6, 2021
5) ஞாயிற்றுக் கிழமையும் பவுர்ணமியும் சேர்ந்து வந்தது விசேஷம். சீத்துவின் அம்மா அப்படித்தான் சொன்னாள். அவனுடைய ரெண்டு அக்காக்களையும் காலை ஐந்து மணிக்கே எழுப்பி விட்டாள். “பெண் குழந்தைகள் எண்ணெய் குளி நடத்தி பசுவன் கரைக்க கோலாட்டம் போட, பட்டாமணியம் வீட்டிலே ஆளுக்கு ஆழாக்கு செக்கெண்ணெய் கொடுக்கறா. ரெண்டு பேரும் போய் வாங்கிண்டு வந்துடுங்கோ. நாலு நாளைக்கு சமையலுக்காச்சு”. அவள் சொல்லி முடிக்கும் முன் சின்னக்கா, ”ஏம்மா தேய்ச்சு குளிக்க, எண்ணெய் கொடுத்தா சமையலுக்கு பதுக்கணும்கறியே” என்று…
4 சனிக்கிழமையும் ஞாயிறும் பள்ளிக்கூட விடுமுறை என்பதால் பசுவனுக்கு பஜனை மடத்தில் ஓவர்டைம் பார்க்க வேண்டி வந்தது. அது வேறொண்ணுமில்லை. காலையில் குளித்து விட்டு பஜனை மடம் போய்விட வேண்டும். சாப்பிடாம வந்துடு என்று வக்கீல் மாமி சொன்னாள். சனியும் ஞாயிறும் காலையில் நல்ல இட்டலியும், தோசையும், வடையும், பொங்கலும், காப்பியும் அவனுக்கு தாராளமாகக் கொடுத்து பஜனை மடத்தில் வைத்தே சாப்பிடச் சொன்னார்கள். தின்ன முடியாமல் மீந்து போனதை சீத்து வீட்டிலிருந்து ஏனம் எடுத்து வந்து அதில்…
3) குலாலர் தெருவில் ஆறுமுக வேளார் வீட்டுக்குப் பெருங்கூட்டமாகப் பெண்கள் புறப்பட்டபோது ராத்திரி ஏழு மணி ஆகியிருந்தது. எல்லா வயதிலும் பெண்கள். சீட்டிப் பாவாடையில் ஏழெட்டு வயசுப் பெண்கள் முதல் புதுப்பட்டுப் புடவையில் அறுபது வயது மூதாட்டிகள் வரை மெல்ல நடந்து வர, நடுவே கல்யாண ஊர்வலத்துக்கு மாப்பிள்ளையை உட்கார்த்தி வரும் பழைய ஃபோர்ட் காரில் சீத்து கழுத்தில் மல்லிகைப்பூ மாலையோடு மிரள மிரளப் பார்த்தபடி வந்தான். இன்றைக்கு அவனுக்குச் சாப்பிடக் கிடைத்தது வருடம் ஒரு முறை…
2) எல்லாப் பையன்களையும் போல யட்சி என்று யாராவது சொல்லிக் கேட்க சீத்துவுக்கும் மனசுக்குள் அதிகபட்ச குறுகுறுப்பு அலையடித்தபடி உற்சாகமாக இருந்தது. அவளைப் பற்றி முழுக்கத் தெரியாமல் சுகமான, பயமான சொப்பனம் வர ஆரம்பித்திருந்தது. யார் யாரோ வர்ணித்திருந்த யட்சி அவன் உதட்டில் தொடங்கி கீழே இறங்கி வந்து குறும்பு செய்யும் கனவின் சுகம், அவள் இடதுகை ஆள்காட்டி விரலை உறிஞ்சும் கோர சொப்பனத்தின் பயத்தில் முழுக்க அடங்குவதில்லை. முந்தாநாள் சாயந்திரம் அவளைப் பக்கத்தில் இருந்து உற்றுப்…
பசுவன் 1) காஞ்சங்காட்டு யட்சி. சத்தம் போட்டுச் சொன்னான் சிவராமன். அவன் என்ன சொன்னாலும் அதைத் திருப்பி ரெண்டு மூணு தடவை சொல்ல ஒரு கோஷ்டி காத்திருக்கும். இருந்தது. அந்தப் பையன்கள் பம்பரம் விட்டுக்கொண்டே, ”அச்சி காஞ்சங்காட்டு அச்சி”, என்றார்கள். ”அச்சி இல்லேடா. யட்சி”. சிவராமன் அவசரமாக அவர்களைத் திருத்தினான். அவனுக்கே சந்தேகம். அச்சி தானோ. போகட்டும். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்பார்கள். அவன் நில் என்றால் தரையில் மண்டி போட்டு நரநரப்பான மணல் முழங்காலில்…
என் ‘வேம்பநாட்டுக் காயல்’ மின்நூலில் இருந்து எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டர் குழுவின் பாஸ்ட் நாடகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இரண்டு பாகமாக அமைந்த நாடகம். ஒவ்வொரு பாகமும் இரண்டு, இரண்டேகால் மணி நேரம் நிகழக்கூடியது. ஒரே நாளில் நிகழ்த்தப்படும் போது பார்க்கப் போனால், பிற்பகலிலிருந்து ராத்திரி பத்து மணி வரை நாடகம் பார்க்க, கொட்டகைக் கடையில் பியர் குடிக்க, மூத்திரம் போக, சாயந்திரம் தட்டுக்கடையில் சூடாக டோநட், சாயா, பக்கத்து டிராவர்ஸ் தியேட்டரிலும், அஷர் ஹால்…