Archive For டிசம்பர் 11, 2021
Excerpt from my forthcoming novel MiLAGU நான் ரோகிணி. இன்னும் இருக்கிறேன். இருப்பேன். ஜெருஸூப்பா அழிந்து போகும். ஆனால் நான் இருப்பேன். சென்னபைரதேவி மண்ணுக்குள் மண்ணாவாள். நான் இருப்பேன். அவளுடைய மிர்ஜான் கோட்டை காலத்தின் வேகத்தில் சிதைந்து போகும். நான் இருப்பேன். சென்னா மகாராணி என்ற மிளகு ராணியின் நாட்டில் மிளகு விளையாமல் போகும். ஆனால் நான் இருப்பேன். அவளுடைய வளர்ப்பு மகன், என் ஆசை நாயகன் நேமிநாதன் செதில் செதிலாகச் சிதைந்து அழுகி மண்ணில்…
An excerpt from my forthcoming novel MILAGU அவன் தொடர்ந்தான். மேலும் போர்த்துகல்லோடு மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய நாடுகளோடும் மிளகு கொள்முதல் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும். எப்படி கையெழுத்து இடப் போகிறீர் வகுளரே? நான் போட்டால் தான் கையெழுத்து. இல்லை என்றால் என் விரலை வெட்டி வைத்துத்தான் துணியில் தொக்கிப் பிடித்து அழுத்தி கட்டைவிரல் ரேகை வைக்க வேண்டும். செய்தாலும் செய்வீர். வன்மையாகக் கண்டிக்கிறேன். மகாராணியார் இதைக் கையாளும் விதம் தவறானது. உப பிரதானி…
An excerpt from my forthcoming novel MILAGU இவர்கள் கோரிக்கைதான் என்ன? பின்வரிசை பிரதானி ஒருவர், வேங்கடபட்டர் என்ற பெயர், குரல் கீச்சிட சொல்கிறார். மற்ற குரல்கள் தேய்ந்து மறைய, வகுளர் என்ன சொல்கிறார் கேட்போம் என்கிறாள் மகாராணி. அப்படியானால், கேட்க நேரமும் மனமும் இருந்தால் அன்போடு ராணியிடம் வைக்கும் கோரிக்கை வகுளன் ஆரம்பித்து ஒரு நொடி தாமதித்துத் தொடர்கிறான் – அரசாளும் பூமியில் ஒரு பகுதி நேமிநாதருக்குக் கைமாற்ற வேண்டும். ஜெருஸூப்பாவும், கோகர்ணமும் அரசியார்…
An excerpt from my forthcoming novel MILAGU “என்றால், நேமிநாதனிடம் சொல்லுங்கள்- அவர் வந்து கலந்து கொள்ளாமல் இந்த பேராயம் பாதி கிழித்த பட்டுத்துணியாகத்தான் தென்படுகிறதென்று. இனிவரும் கூட்டத்தில், அப்படி ஒன்று இருந்தால், அவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நான் அதற்குள் இறந்துவிட மாட்டேன் என்று நம்புகிறேன்”. மிளகுராணி வாழ்க என்று அவை முழுக்க முழங்கியது. அம்மா நீங்கள் ஒரு நூறும் இன்னொரு நூறும் காண்பீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் போதும். அரசாட்சி வேலைப் பளுவைக்…
An excerpt from my forthcoming novel MiLAGU ”அரசுத் தரப்பில் பேரிழப்பு என்பதோடு எனக்கு தனிப்பட்ட முறையில் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் இழப்பு மிங்குவின் இறப்பு” சென்னபைரதேவி சொல்லும்போதே குரல் நெருடியது. வைத்தியர் நிமிர்ந்து பார்த்தார். நடுங்கும் குரலில் சொன்னார் அவர் – ”அந்த விசுவாசம் மிக்க ஊழியை இறந்திருக்க வேண்டாம். அந்தக் கலந்துரையாடல் நடத்த வேண்டாம் என்று இங்கே இருக்கும் பலரும் சொன்னதைக் கேட்டிருந்தால். மிங்கு இன்னும் இருந்திருப்பாள். அப்படி நடக்க வேணும் என்று…
An excerpt from my forthcoming novel MILAGU குதிரை லாயம் முழுக்க கொள்ளு வாடையும் பன்னீர் வாடையும் சேர்ந்து மணத்தது. பின்னால் இருந்து கோட்டை உத்தியோகஸ்தர் ஒருவர் ஆடம்பரமில்லாத நாற்காலியைக் கொண்டு வந்து போட, சென்னா மகாராணி அமர்ந்தாள். “நான் எப்போதும் இந்த கூட்டத்தை நின்று கொண்டு தான் விளித்துப் பேசுவேன். இப்போது அமர்ந்திருந்து பேச உங்கள் அனுமதி கேட்கிறேன். கிடந்து பேசும் நாள் வந்தால் நான். பாதி சொல்லில் நிறுத்தி கூட்டத்தைச் சுற்றிலும் திரும்பிப்…