Archive For டிசம்பர் 5, 2021

MILAGU – not on a Sunday!

By |

MILAGU – not on a Sunday!

That’s a good picture (though the subject is not) clicked by my friend, the renowned poet Iyyappa Madhavan at yesterday’s book launch event (Zero Degree Publishing) Thanks Iyyappa Madhavan A respite from MILAGU being Sunday today. Writing the closing 20 chapters. With 110 chapters (with these 20 plus on the anvil ) editing will be…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – in which the Jerusoppa Administrative Council convenes an urgent meeting

By |

பெரு நாவல் ‘மிளகு’ – in which the Jerusoppa Administrative Council convenes an urgent meeting

Excerpts from my forthcoming novel MILAGU   மிர்ஜான் கோட்டை குதிரை லாயத்தில் பேராய  அவை கூடப்போகும் பின்மாலைப் பொழுது. இந்தக் கூட்டம்  இன்று இரவிலும் நீண்டு கொண்டு போகும். விடிகாலையிலாவது முடியுமா என்பது சந்தேகமே என்று வகுளாபரணன் நினைத்தான். ஜெருஸோப்பா அரசின் உப பிரதானிகளில் ஒருவன் வகுளாபரணன். பேரிளைஞன். சென்னபைரதேவி மேல் மதிப்பும் அன்பும் கொண்டவன். நேமிநாதனுக்கு உற்ற தோழன்.  ஜெரஸோப்பாவின் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் சிலரில் வகுளன் என்ற வகுளாபரணனும் ஒருவன். இன்றைக்கு…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – in which the Medicine Man attempts to contact his late wife

By |

பெரு நாவல் ‘மிளகு’ – in which the Medicine Man attempts to contact his late wife

An excerpt from my forthcoming novel MILAGU திடீரென்று ஒரு ராத்திரி தூங்கி எழுந்து முப்பது பெண்களை, யாரென்று தெரியாது, எல்லோரும் ஜெருஸோப்பா பிரஜைகள் அவர்களை கோட்டைக்கு காலை ஆகாரம் கூட இருந்து சாப்பிட அழைக்க ஏற்பாடு செய்யச் சொன்னாள் ராணி. மிங்கு தலையில் பெரும்பாலும் விழுந்த கடமை இது. வைத்தியா நீ ஏன் ஒண்ணும் சொல்லாமல் நிற்கிறே என்று கேள்வி வேறே. அப்போது வைத்தியர் சொன்னார் – அம்மா, இந்த விருந்துகள் பாதுகாப்பை பதம்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு – To feed a child gooey rice with milk and sugar

By |

பெரு நாவல் ‘மிளகு – To feed a child gooey rice with milk and sugar

An excerpt from my forthcoming novel MILAGU அரிசி வைத்த செப்புக்குடத்தில் இருந்து அரை ஆழாக்கு அரிசி எடுத்து சோறு பொங்க அடுப்பில் ஏற்றினார் வைத்தியர். நான் சொன்னா நீங்க எங்கே கேக்கப் போறீங்க என்று அலுத்தபடி வெற்றிலை இடிக்கத் தொடங்கினாள் அந்த முதிய மருத்துவச்சி. வைத்தியர் அவளுக்கு மிங்கு மேலும் குழந்தை மேலும் வைத்திருக்கும் அலாதி பிரியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க நெகிழ்ந்து போனார் அவர். ஒரு வேளை மட்டும் நாலு கவளம் சோறும் …




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – on the ripple effect of the transcription error that cost Minku’s life

By |

பெரு நாவல் ‘மிளகு’ – on the ripple effect of the transcription error that cost Minku’s life

an excerpt from my forthcoming novel MILAGU ஏனோ நெல்பரலி மேல் அதி உக்கிரமான கோபம் ஏற்பட்டது அவருக்கு. நெல்பரலி மேல் கோபப்படலாமா? ஆறறிவில் ஓரறிவும் இல்லாத வெறும் தாவரம் அது. வேறே யார் மேல் கோபப்பட? எப்படி வாய் திறந்து சொல்வார்? சென்னபைரதேவி மிளகு ராணி தன்முனைப்போடு செயல்பட்டு மிங்குவை அவளுடைய அன்புக் கணவர் பைத்யநாத் வைத்தியரிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டாள். சோறு போடும் கை அவளது. வைத்தியருக்கு மட்டுமில்லை, மெய்க்காப்பாளராக மிங்குவை நியமித்து…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – An error in writing that cost a life dearly

By |

பெரு நாவல் ‘மிளகு’ – An error in writing that cost a life dearly

An excerpt from my forthcoming novel MiLAGU அடர் சிவப்பில்   நனைந்து இருக்கிற மிங்குவின் வயிற்றை கண்ணீர் கண்ணில் மறைக்க உற்றுப் பார்க்கிறார் அவர். வயிற்றில் இருந்து குருதிப் பெருக்கு குறைந்து வருவதை அவருடைய வைத்திய அனுபவம் சொல்கிறது. கொலைபாதகம் நடத்த வந்த பெண்பிள்ளை ஓடி வந்து குறுவாளை அழுத்தப் பிடித்து ராணியின் தலையில் ஆழமாக வெட்ட உத்தேசித்திருந்தாள். அந்த வேகமும் அழுத்தமும் எல்லாம் குறுக்கிட்டுப் பாய்ந்து வந்த மிங்குவின் வயிறு வாங்கிக் கொண்டது. வைத்தியர்…




Read more »