Archive For ஜனவரி 31, 2021

ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.

By |

ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.

நான் பிறந்த தினத்தில், லந்தன்பத்தேரியின் கிழக்கிலும், மேற்கிலும் ஓடும் சிற்றாறுகளில் தெளிந்த நீர் ஓடியது. தீவுக்காரர்களின் பேச்சு வழக்கில் அதை ‘தண்ணி மாறிடுச்சு’ என்பார்கள். பெரியாறு அதன் நீர்ப் பெருக்கில் கலந்த உப்பைக் கடலுக்கே திருப்பி அனுப்பும்போது இது நடக்கும். தொடர்ந்து வெள்ளத்தில் பெரும் இடப்பெயர்ச்சி உண்டாகும். சாத்தானின் அம்புமுனை போன்ற வாலோடு திரண்டிமீன் கூட்டங்கள் முதலில் சிற்றாற்றிலிருந்து புறப்பட்டுப் போகும். மேற்கோள் குறிகள் போல் சுருண்டிருக்கும் இறால்கள் நீர்ப்பரப்பில் நீண்ட வசனம் எழுதிப் போகும். அயிரை…




Read more »

2011-இல் வெளியான ஒரு நேர்காணல்

By |

2011-இல் வெளியான ஒரு நேர்காணல்

இரா. முருகன் – நேர்காணல் எண்பதுகளின் தொடக்கத்தில் சிறுபத்திரிகை களில் நவீன கவிஞராக அறிமுகமான இரா. முருகன், பின்னர் சிறுகதையாசிரியராக- நாவலாசிரியராக- கட்டுரையாளராக இலக்கிய வடிவங்களின் அனைத்து நீட்சிகளை யும் தொட்டு நிற்கும் சம கால நவீனப் படைப்பாளி யாவார். “ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ இவரது முக்கியமான கவிதைத் தொகுதியாகும். இதுதவிர, “தேர்’, “ஆதம்பூர்க் காரர்கள்’, “சிலிக்கன் வாசல்’, “முதல் ஆட்டம்’, “ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்’, “மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’, “சைக்கிள் முனி’ போன்ற…




Read more »

a personal bereavement

By |

என் வாழ்க்கைத் துணைவி திருமதி கிரிஜா முருகன், ரத்தப் புற்றுநோயால் (Acute Myeloid Leukemia) பாதிக்கப்பட்டு டிசம்பர் 30, புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். டிசம்பர் 31 வியாழனன்று இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. கிரிஜாவின் ஆன்மா சாந்தியடைய நண்பர்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன். ஓம் சாந்தி




Read more »