Archive For பிப்ரவரி 25, 2021
சென்னை புத்தகக் கண்காட்சி 2021 நேற்று, பிப்ரவரி 24 2021 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடந்து வருகிறது. கண்காட்சியில் என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகம் (நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம்) F 7 அரங்கில் காட்சிக்கு / 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைத்துள்ள ஏராளமான நூட்களில் என்னுடையவையும் உண்டு. அவற்றில் சில இந்தப் பதாகை எடுத்துக் காட்டுகிறவை. வாங்கிப் படித்து வாசிப்பனுபவம் பகிர நண்பர்களை அன்போடு வேண்டுகிறேன்.
என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுப்பில் இருந்து (அச்சுப் பதிப்பு, கிண்டில் மின்நூல்) எங்க ஊரில் (ஹாலி·பாக்ஸ், மேற்கு யார்க்ஷயர், இங்கிலாந்து) இருக்கப்பட்ட தொண்ணூறு சதவிகிதக் கட்டிடங்கள் விக்டோரியா மகாராணி காலத்துப் பழையவை என்றால், அவற்றுக்கெல்லாம் பாட்டியம்மாவானது, தொழில் புரட்சி காலத்துப் புராதனக் கட்டடமான பீஸ்ஹால். (Piece Hall) 1766-ல் வீட்டில் தறிநெய்து துணி தயாரித்துக் கொண்டுவந்து இங்கே நெசவாளர்கள் விற்கும்போது வாங்கக் கூட்டம் அலைமோதுமாம். கட்டடத்தின் பெயரில் இருக்கும் பீஸ், துணிப்பீஸ்தான். நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்)…
என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுப்பு (அச்சு நூல், மின்நூல்) புத்தகத்தில் இருந்து – என்னை வரைந்த படம் – உரைவெண்பா கனமான லெதர் ஜாக்கெட்டில் ஒட்டிய பனியைத் தட்டி விட்டபடி, காசிப்பாட்டி முக்காடு போல் தலைக்கு மேலே கவிந்த தலைக் கவசத்தைப் பின்னால் தள்ளிக்கொண்டு ஹாலிபாக்ஸ் நகரில் கம்ரான் என்ற பாக்கிஸ்தானி ரெஸ்தாரண்டில் மாடிப்படி ஏறுகிறேன். காதைப் பிளக்கும் பஞ்சாபி பங்க்ரா இசை. உள்ளே நுழைந்ததும் கட்டியணைத்து வரவேற்கிற ஓட்டல் முதலாளியும், உணவு பரிமாறும்…
என் கட்டுரைத் தொகுதி ‘ராயர் காப்பி கிளப்’ மின்நூல், அச்சு நூல் கட்டுரை இது இடாகினிப் பேய் இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன். ‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு. சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப்…
Jaipur Literature Festival 2021 has gone digital in an awesome manner. The festival site is fabulously organized.. it is a pleasure to go thru – a shade better than Music Academy site during Dec 2020 Music Festival. It is a delight to ‘wander and hang around’ at the patio and the pavilion – Front lawn,…
என் கட்டுரைத் தொகுப்பான ‘ராயர் காப்பி கிளப்’ அச்சுப் புத்தகம், கிண்டில் மின்நூலில் இருந்து- எழுபது ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்டது தமிழ்த் திரையிசை. அதில் தோய்ந்து தகவல் சுரங்கமாக, ஆழ்ந்த புலமையோடு ரசனையைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் அபூர்வம். ‘ஸ்கிரீன்’ பத்திரிகையில் திரை இசை பற்றித் தொடர்ந்து எழுதி வந்த வி.ஏ.கே ரங்காராவ் இவர்களில் முன்னோடி. இந்தித் திரையிசைக்கு ராஜு பரதன், தற்போது வி.கங்காதர் போல் . (இது 2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. திரை இசை என்சைக்ளோபீடியாவான…