Archive For மே 29, 2021

மிளகு – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து : மிர்ஜான் கோட்டையில் நிர்மல முனி நிகழ்த்திய பேருரை

By |

மிளகு – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து : மிர்ஜான் கோட்டையில் நிர்மல முனி நிகழ்த்திய பேருரை

Draft of an excerpt from my novel Milagu – work in progress. All rights @era.murukan பிரபஞ்சத்தில் அனைவருக்கும், அனைத்துக்கும், என்றால், உயிருள்ள, உயிர் என்பது இல்லாத அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டென்று மொழிந்தருளினார் பகவான் மகாவீரர். ஒரு குக்கலை, என்றால் நாயைக் கல் எறிந்து காயப்படுத்தும் மூடர்கள் போல ஒரு செடியை இழுத்துப் காயும் பூவும் பறிக்கும் மூடர்களும் அந்தத் தாவரத்தை வலியால் துடிக்க வைக்கிறார்கள் என்று சொல்லியருளினார் அந்த மகான்….




Read more »

மிளகு ராணி சென்னபைரதேவிக்கு அறுபது வயது நிறைவு

By |

மிளகு ராணி சென்னபைரதேவிக்கு அறுபது வயது நிறைவு

“மிளகுப் பேரரசி நீடு வாழ்க. யக்‌ஷ தேவன் அருளுண்டாகட்டும்” போஜன சாலை என்ற விருந்து மண்டபம் நிரம்பி வழிந்தது. தலைவாழை இலைகள், கூட்டிப் பெருக்கி பன்னீர் கொண்டு மெழுகிய பளிங்குத் தரையில் வரிசையாகப் பாய் விரித்து இடப்பட்டன. முதலில் எலுமிச்சையும் இஞ்சியும் கலந்த ஊறுகாயும் உப்பும் பரிமாறப்பட்டது. அவரைக்காயும் உருளைக் கிழங்கும் கலந்த பொரியல் அடுத்துப் பரிமாறப்பட்டது. குழைய வேகவைத்த பருப்பும் தொடர்ந்தது. தொடர்ந்து வெல்லப் பாயசமும் மலையாளப் பிரதேசத்து பாலாடை பிரதமனும் இனிக்க இனிக்க இலையில்…




Read more »

‘ராமோஜியம்’ நாவல் அறிமுகம்-மதிப்புரை நண்பர் கடலூர் சீனு

By |

‘ராமோஜியம்’ நாவல் அறிமுகம்-மதிப்புரை நண்பர் கடலூர் சீனு

நண்பர் ஜெயமோகன் தன் இணையத் தளத்தில் இன்னொரு நண்பர் கடலூர் சீனு எழுதிய ‘ராமோஜியம் நாவல் நூல் அறிமுகம் – மதிப்புரை’க்கான சுட்டியைப் பதிப்பித்திருக்கிறார். நன்றி ஜெயன், நன்றி சீனு ஜெ.மோ இணையத் தளத்தில் கடலூர் சீனு கட்டுரை —————————————————————————————————- இரா முருகன் எழுதிய ராமோஜியம் ஒரு சமகாலவரலாற்று நாவல். 620 பக்க இந்த நாவலின் ஒன் லைனை சொல்லிவிட முடியும். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் பணியில் இருக்கும் ராமோஜிக்கும் அவன் மனைவி ரத்னாவுக்கும் இடையே வருகிறாள்…




Read more »

New – from the new novel Milagu I am writing – வைத்தியன் வந்த நாள்

By |

New – from the new novel Milagu I am writing – வைத்தியன் வந்த நாள்

அரண்மனை வைத்தியன் ஒரு போத்தல் நிறைய அடைத்த முகர்ந்து பார்க்கும் உப்போடு சென்னபைரதேவியின் திருமுன்பு மரியாதை விலகாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கையைத் தள்ளி எழுந்திருக்கப் பார்த்தாள் சென்னு. அவனா விடாக்கண்டனாக அழிச்சாட்டியமாக அங்கேயே நின்றான். ”என்னை முதல்லே யானைக் காலாலே மிதிக்க வச்சுக் கொன்னுட்டு சர்பத் குடிக்க திருமனசு வைக்கணும் மகாராணி. இப்பவே கொன்னுடுங்கோ” வைத்தியனின் விநோதமான கோரிக்கையைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி. அவன் மேல் தப்பில்லை. சென்னுவின் நாக்கு தான் சின்னக் குழந்தை…




Read more »

எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து – வாழை இலைப் பெட்டி

By |

எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து – வாழை இலைப் பெட்டி

தலைநகர் ஜெருஸப்பா தெருக்களிலும், மிர்ஜான் கோட்டைக்குச் சுற்றிலும் உள்ள நெல் வயல்களைக் கடந்து நிறைந்துள்ள கிராமங்களிலும், மிர்ஜான் நகரிலும், இந்த மிர்ஜான் கோட்டைக்கு உள்ளே பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இன்று இதோ பாருங்கள் இந்தப் பொதியை ஆளுக்கொன்றாக அளிக்கிறோம். குழந்தைகளுக்குச் சற்றே சிறிய பொதியும் பெரியவர்களுக்குப் பெரிதுமாக அளிக்கப்படும் இதெல்லாம்” என்றபடி சிறு பேழை போல் மடித்து ஈர்க்கு குத்திய பச்சைப் பெட்டி ஒன்றைக் காட்டினான். “இதென்ன, வாழை இலையை வளைத்து நெளித்து ஈர்க்குச்சி செருகி,…




Read more »

எழுதிவரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – கர்கலா நான்கு வாசல் கோவில்

By |

எழுதிவரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – கர்கலா நான்கு வாசல் கோவில்

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’ – ஒரு சிறு பகுதி மற்ற கோட்டைகளுக்கு எல்லாம் இல்லாத வடிவ நேர்த்தியும், அழகான புல்வெளிகளும், நீரூற்றுகளும் மிர்ஜான் கோட்டையை வேறுபடுத்திக் காட்டுவதை சென்னு மனமெல்லாம் பெருமையோடு சுவரை அணி செய்த நீண்ட தீவட்டி வரிசையை நோக்கியபடி நினைத்தாள். அவளுடைய நுணுக்கமான திட்டப்படி தான் கோட்டை எழுந்து வந்தது. ஒவ்வொரு மலைக்கல்லாக, மரத் துண்டாக அந்தப் பெரிய கல் கட்டிடம் வெறும் வெளியில் இருப்பு உரைத்து ஓங்கி உயர்ந்து எழுந்தபோது முதலில்…




Read more »