Archive For மே 19, 2021

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து

By |

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து

பிற்பகலில் கோமாளி வந்தான். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பகுதியாக, விருந்துக்கு அப்புறம் கோமாளி ஆட்டமும் பாட்டும் தொடங்கின. ஷெனாய், தெற்கத்திய ஊதுவாத்தியமான நாகசுவரம், மகுடி போல முகத்துக்கு நேரே பிடித்து வாசிக்கும் நீளமான குழல், தெற்கே எங்கும் வாசிக்கும் சிறு குழல், வீணை, சரோட் என்று வாத்திய இசையும், குரல் இசையும் வழங்க அடுத்து அடுத்து பிரபலமான இசைக் கலைஞர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய விருந்து. விதவிதமான உணவு வந்து கொண்டே இருந்தது. உண்ட மயக்கத்தில் எல்லோரும்…




Read more »

புதிது எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘மிளகு’ துவக்கம்

By |

புதிது   எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘மிளகு’ துவக்கம்

எழுதிக் கொண்டிருக்கும் ‘மிளகு’ நாவலின் தொடக்கம் இது – மிளகு ராணி விடிய வெகுநேரம் இருக்கும்போதே எழுந்து விட்டாள். மிளகு ராணி. ஒரு தடவை நிலைக் கண்ணாடியில் நோக்கிச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். கண்ணாடி பெல்ஜிய நாட்டில் செய்து அனுப்பியது. அடுத்து இருப்பது இங்கே மலையாள பூமியில் உலோகத்தைப் பளபளப்பாக்கிச் செய்த ஆரன்முளை உலோகக் கண்ணாடி. இரண்டிலும், வயதானாலும் உற்சாகமான ஒரு மூதாட்டி சிரிக்கிறாள். மிளகு ராணி. சளுவ வம்ச மகாராணி சென்னபைரதேவி. சென்னபைரதேவிக்கு தங்களுக்குள்…




Read more »

ராமோஜியம் நாவலில் உணவு

By |

ராமோஜியம் நாவலில் உணவு

ராமோஜியம் நாவல் உணவைக் கொண்டாடுவது. நாவலில் இடம் பெற்ற உணவு வகைகளில் சில பட்டியலாக்கப்பட்டு இங்கே – 1) வெண்பொங்கல் 2) மல்லிப்பூ போல சாதம், கிள்ளிப்போட்ட இஞ்சியும், பறித்துப் போட்ட கொத்தமல்லியும் அரிந்து போட்ட பச்சை மிளகாயும் துருவிப் போட்ட தேங்காயுமாக துவையல், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், பால் பாயசம், கெட்டித் தயிர், பப்படம், அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், நல்லெண்ணெயில் பொரித்த கிடாரங்காய் ஊறுகாய் 3)பால் பாயசம் 4) குளுகுளுவென்று மஞ்சள் பூத்த சிவப்பு…




Read more »

புதிய குறுநாவல் : பசுவன் – அத்தியாயம் 5 இரா.முருகன்

By |

5) ஞாயிற்றுக் கிழமையும் பவுர்ணமியும் சேர்ந்து வந்தது விசேஷம். சீத்துவின் அம்மா அப்படித்தான் சொன்னாள். அவனுடைய ரெண்டு அக்காக்களையும் காலை ஐந்து மணிக்கே எழுப்பி விட்டாள். “பெண் குழந்தைகள் எண்ணெய் குளி நடத்தி பசுவன் கரைக்க கோலாட்டம் போட, பட்டாமணியம் வீட்டிலே ஆளுக்கு ஆழாக்கு செக்கெண்ணெய் கொடுக்கறா. ரெண்டு பேரும் போய் வாங்கிண்டு வந்துடுங்கோ. நாலு நாளைக்கு சமையலுக்காச்சு”. அவள் சொல்லி முடிக்கும் முன் சின்னக்கா, ”ஏம்மா தேய்ச்சு குளிக்க, எண்ணெய் கொடுத்தா சமையலுக்கு பதுக்கணும்கறியே” என்று…




Read more »

புதிய குறுநாவல் – பசுவன் : அத்தியாயம் 4 இரா.முருகன்

By |

4 சனிக்கிழமையும் ஞாயிறும் பள்ளிக்கூட விடுமுறை என்பதால் பசுவனுக்கு பஜனை மடத்தில் ஓவர்டைம் பார்க்க வேண்டி வந்தது. அது வேறொண்ணுமில்லை. காலையில் குளித்து விட்டு பஜனை மடம் போய்விட வேண்டும். சாப்பிடாம வந்துடு என்று வக்கீல் மாமி சொன்னாள். சனியும் ஞாயிறும் காலையில் நல்ல இட்டலியும், தோசையும், வடையும், பொங்கலும், காப்பியும் அவனுக்கு தாராளமாகக் கொடுத்து பஜனை மடத்தில் வைத்தே சாப்பிடச் சொன்னார்கள். தின்ன முடியாமல் மீந்து போனதை சீத்து வீட்டிலிருந்து ஏனம் எடுத்து வந்து அதில்…




Read more »

புதிய குறுநாவல் – பசுவன் – அத்தியாயம் 3 இரா.முருகன் –

By |

3) குலாலர் தெருவில் ஆறுமுக வேளார் வீட்டுக்குப் பெருங்கூட்டமாகப் பெண்கள் புறப்பட்டபோது ராத்திரி ஏழு மணி ஆகியிருந்தது. எல்லா வயதிலும் பெண்கள். சீட்டிப் பாவாடையில் ஏழெட்டு வயசுப் பெண்கள் முதல் புதுப்பட்டுப் புடவையில் அறுபது வயது மூதாட்டிகள் வரை மெல்ல நடந்து வர, நடுவே கல்யாண ஊர்வலத்துக்கு மாப்பிள்ளையை உட்கார்த்தி வரும் பழைய ஃபோர்ட் காரில் சீத்து கழுத்தில் மல்லிகைப்பூ மாலையோடு மிரள மிரளப் பார்த்தபடி வந்தான். இன்றைக்கு அவனுக்குச் சாப்பிடக் கிடைத்தது வருடம் ஒரு முறை…




Read more »