Archive For ஜூலை 31, 2021

நாவல் மிளகு : கொல்லைக்குப் போனாலும் கூட்டு வேண்டாம்

By |

நாவல் மிளகு : கொல்லைக்குப் போனாலும் கூட்டு வேண்டாம்

A small extract from my novel MILAGU on the anvil கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள். மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள். எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல்…




Read more »

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – லிஸ்பனுக்குப் பயணம், ஒரு திட்டம்

By |

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – லிஸ்பனுக்குப் பயணம், ஒரு திட்டம்

ஜனவரி, பிப்ரவரியில் தேசமே மிதமான குளிரும், பூப்பூத்த மரங்களும், பச்சைச் செடிகொடிகளுமாக சொர்க்கம் போல் காட்சியளிக்கும். மூன்று அல்லது நான்கு பாய்மரங்கள் உள்ள காரக் வகைக் கப்பல்களிலோ, சிறிய ஆனால் ஆழமில்லாத கடற்கரையை ஒட்டிய பிரதேசங்களிலும் எளிதில் பயணம் செய்யும் வேகம் மிகுந்த காரவேலா கப்பலிலோ நீங்கள் வரும் நவம்பர் மத்தியில் புறப்பட்டால் ஜனவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா?” ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார். “இருங்கள் சென்ஹோர் இமானுவல்…




Read more »

ஒரு குறுமிளகு ஒரு வால் மிளகு

By |

ஒரு குறுமிளகு ஒரு வால் மிளகு

“உன்னைக் கூட்டிப் போறதா எங்கே சொன்னேன்? உன் பெண்டாட்டி மிங்கு என்னோடு வருவா” என்று வைத்தியரின் ஆச்சரியத்தைக் கலகலவெனச் சிரித்து ரசித்தபடி சொன்னாள் சென்னபைரதேவி மகாராணி. வைத்தியர் மிங்கு வீட்டுக்காரனாக ஒரு நிமிஷம் மாறி அவளிடம், “ஆசிர்வாதம் வாங்கு” என்று சொல்ல, தம்பதியாக இருவரும் சென்னாவின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்கள். “பயணம் போனா, நீங்க ரெண்டு பேரும் உண்டு கட்டாயமாக” என்றாள் ராணி. ”பத்து சிமிழ் மருந்து வேணுமா?” வைத்தியரை ஆர்வத்தோடு கேட்டாள் அவள்….




Read more »

மிளகு நாவலில் இருந்து பறந்து வந்த ஒரு பக்கம்

By |

மிளகு நாவலில் இருந்து பறந்து வந்த ஒரு பக்கம்

“சென்ஹோர் கார்லோஸ், மிளகு ராணி தீர்க்காயுசாக நூறு வயதும் கடந்து சௌக்கியமாக இருப்பார்கள். நான் எங்கே ராஜாவாவது? இருக்கும் ராஜகுமாரன் பதவியை இன்னும் ஆயுசு இருக்கும் நேரம் வரை வகித்து விட்டுப் போய்ச் சேர வேண்டியதுதான்” என்றான் நேமிநாதன் உதிர்த்த லட்டை மென்றுகொண்டு. ”அது ஒரு வழிதான். ஆனால் வயதானவங்களை சற்றே ஓய்வெடுக்கச் சொல்லிட்டு அவங்க சார்பிலே ஆட்சியை நடத்தலாம். எவ்வளவு வருஷமா மிளகு விற்றுக்கிட்டு இருக்காங்க. கையே மிளகு மாதிரி கரடுமுரடா ஆகியிருக்குமே. கண்ணுக்குள்ளே மிளகுப்பொடி…




Read more »

ஒரு சிறு குறுமிளகு – எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் மிளகு-வில் இருந்து

By |

ஒரு சிறு குறுமிளகு – எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் மிளகு-வில் இருந்து

”ராஜா, நாங்கள் யாரென்று உங்களுக்கு ரோகிணி சொன்னாளா?” அகஸ்டின்ஹோ நேமிநாதனைக் கேட்டார். இல்லை என்று தலையசைத்தான் அவன். ஊர் சுற்றிப் பார்க்க லிஸ்பனில் இருந்து வந்திருக்கும் வர்த்தகர்கள். அது மட்டும் தெரியும். கார்லோஸ் சிரித்தார். ”வாயில் கட்டை விரலைப் போட்டுக்கொண்டு ஊர் உலகம் தெரியாமல் சுற்றும் முதிய சிறுவர்கள் என்றோ, ஆவிகளோடு இழைவதை உயிர்மூச்சாக உலகமெங்கும் பரப்ப முற்பட்ட மத்திய வயசுக் கிழவர்கள் என்றோ எங்களைப் பற்றி மாண்பு மிக்க மகாராஜா சமூகத்துக்குத் தோன்றினால், அடாடா, அடாடா,…




Read more »

மிளகுத் தெறிப்பு – நாவலில் ஒரு சிறு இழை

By |

மிளகுத் தெறிப்பு – நாவலில் ஒரு சிறு இழை

நேமிநாதன் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னான். போன வாரம் ஆவிகளோடு பேச வந்த இரண்டு போர்த்துகீசியர்களும் வணக்கம் என்று இருகை கூப்பி நின்றிருந்தார்கள். இவர் ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வர்த்தகர். நேமிநாதன் ஜோஸ் கார்லோஸை ஒரு கீற்றுப் புன்னகையால் வரவேற்றான். இவர் தோமஸ் அகஸ்டின்ஹோ. குடும்பத் தொழிலைக் கவனிக்கிறார் என்றாள் ரோகிணி. கொஞ்சம் அலட்சியத்தோடு தலையாட்டுகிறான் நேமி. நேமிநாதன் ரோகிணியை மங்கிய அறை வெளிச்சத்தில் பார்க்கிறான். போர்ச்சுகீசிய, இங்க்லீஷ், பிரஞ்ச், கிரேக்க அழகுத் தேவதை போல் இருக்கிறாள் அவள்….




Read more »