Archive For ஜூலை 24, 2021
கோகர்ணம் மகா கணபதி க்ஷேத்ரத்தில் கோவில் ஸ்தானிகர் சுருக்கமாக மந்திரம் சொல்ல, கஸாண்ட்ராவும், ரமணதிலகனும் ரோகிணிக்கும் பரமனுக்கும் மாலை எடுத்துத்தர, மாலை மாற்றித் திருப்பூட்டியானது. பிள்ளையார் சந்நிதி வெளிப் பிரகாரத்திலேயே ஓர் ஓரமாக கல்யாண விருந்தாகக் கொண்டு வந்த ஜெயவிஜயிபவ இனிப்பு, பிஸிபேளாஹூளியன்ன, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், ததியோன்னம் என்று இலைத் தொன்னைகளில் வழங்கப்பட்டு கடைசியாக பால் பாயசமும் பருகத் தந்து கல்யாணம் ஒரு வழியாக நிறைவேறுகிறது. சடங்குகள் நிகழும்போது கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரோடு…
எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து -‘ வாருங்கள், உள்ளே போகலாம் என்று அழைத்துப் போனார் பிரதானி நஞ்சுண்டையா. சந்தனத்திலேயே சதா மூழ்கி இருப்பாரோ என்று பெத்ரோவின் நாசி கேட்டது. இந்தியர்களுக்கு சந்தனத்தில் அப்படி என்ன பெருவிருப்பம் என்று அவருக்குப் புரியவில்லை தான். ஐரோப்பியனுக்கு மிளகில் விளக்க முடியாத ஒரு வசீகரம் இருக்கும்போது இந்தியனுக்குச் சந்தனம் பிடிக்கக்கூடாதா என்ன? அழகான ஜரிகை, பல நிறப் பட்டுத்துணி, தந்தப் பலகை கொண்டு இழைத்து, தைத்து, பளபளப்பாக்கி பன்னீரும் சந்தனம்…
மிளகு நாவல் – நாழிகைக் கணக்கு (ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை) நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று மணி அடிக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த மனைவியும் அரசிக்குத் தாதியுமான சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி…
“மிளகு சாகுபடி செய்யறதுக்குப் பதிலா பத்து நெருப்புக்கோழி வாங்கி மேய்க்கலாம். கூட்டிக் கழிச்சு பார்த்தால், கையில் தங்கறது ஒத்தை ரூபா” உன்னித்தன் கொஞ்சம் அதிகமாகவே பிரச்சனையை ஊதிப் பெருக்கித் தொடங்கி வைத்தார். பின்னே என்ன, மிளகு ராணி இருந்த உத்தர கன்னடத்திலே பத்து டன் மிளகு விளைஞ்சா அபூர்வம். பூச்சி அரிச்சு அதிலே பெரும்பாலும் பங்கு உதிர்ந்து போகுது. நம்ம கேரள பெப்பர், தலைச்சேரி வகையும் மலபார் வகையும் முக்கியமா நல்லா போகணும்னு போன வருஷம் நினைச்சது…
A page from the novel MILAGU I am writing now – சாரதா தெரிசா தன் மகன் மருதுவோடு தங்கி இருக்க லண்டன் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிப் போனது. குளிர்காலம் பனிப் பொழிவும் அதிகக் குளிருமாக மெல்லக் கடந்து போகும் வருஷம் இது. நேற்றைக்கு சாயந்திரம் கூட பனிமனிதன் வந்தான். ”அம்மா வெளியே பனி பெய்யுது. வாங்க, பொம்மை பண்ணலாம்”. நேற்று மருது வாசலில் இருந்து மூச்சுத் திணறச் சொல்லியபடி குழந்தை…
விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும்
பரமேஸ்வரன் நாக்பூரில் விமானத்தில் இருந்து இறங்கியிருக்கக் கூடாது. பத்து நிமிடம் தபால் வாங்க, கொடுக்க என்று பாசஞ்சர் ரயில் மாதிரி நாக்பூரில் நின்று வருவது இந்த விமான சேவையின் தினசரிப் பழக்கமாக இருக்கலாம். அப்படி இறங்கி மீண்டும் டேக் ஆஃப் ஆகும்போது யாராவது குறைகிறார்களா என்று பார்க்க வேண்டாமோ? ரயில் என்றால் கூட்டம் அதிகமாக, நெரிசலும் மிக அதிகமாக இருக்கக் கூடும். விமானத்தில் மிஞ்சிப் போனால் ஐம்பது பேர் பயணம் வந்தாலே அதிகம். இவர்களில், பாதி வழியில்…