Archive For ஜூலை 5, 2021

நாவல் ‘மிளகு’ சொல்வனம் இணைய இலக்கிய இதழில் இனி

By |

நாவல் ‘மிளகு’ சொல்வனம் இணைய இலக்கிய இதழில் இனி

மிளகு – கஜானன் கண்பத் மோதக் என்ற மராட்டியர் மலையாளி ஆனபோது ————————————————————————— எர்ணாகுளம் ஜங்க்ஷன் வரும்போதே மோதக் மலையாளி ஆகிவிடுவார். பைஜாமாவையும் குர்த்தாவையும் களைந்து மடித்து வைத்துவிட்டு எட்டு முழ வேட்டியும் கருப்பு நிறத்தில் டீ ஷர்ட்டுமாக வேஷம் மாறிவிடும். மலையாளி போல நெற்றியில் சந்தனம் அணிந்து கொள்ள அவருக்கு ஆசைதான். ஆனாலும் நகரும் ரயில் கம்பார்ட்மெண்டில் சந்தனத்துக்கு எங்கே போக? கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில்…




Read more »

நாவல் மிளகு – 1596ஆம் ஆண்டில் ஓர் அதிகாலை

By |

(ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை) நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று மணி அடிக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த மனைவியும் அரசிக்குத் தாதியுமான சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி வழுவழுத்த கனமான கால்களால் வைத்தியரை மடக்கித்…




Read more »

மண் பானைகளிலும் தாழிகளிலும் இரவில் பறக்கும் சிறு பூச்சிகள் இறந்து கிடக்கும், போதை மிகத்தரும் தேறல் பருகக் கிடைக்கிறது. அது வடிகட்டாமல் பருகப்படுகின்றது.

By |

வளரும் நாவல் ‘மிளகு’ :1596 இரவு – சில காட்சிகள் —————————————————————— நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள். வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன. அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு…




Read more »

உணவுத் தட்டுகளாகக் குழிக்கப்பட்ட கல் பாளங்கள் -விஜயநகர உணவுச்சாலை

By |

உணவுத் தட்டுகளாகக் குழிக்கப்பட்ட கல் பாளங்கள் -விஜயநகர உணவுச்சாலை

1596-ஆம் ஆண்டில் ஒரு நாள் :வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து இன்னும் சில காட்சிகள் ——————————- இருபத்திரண்டரை நாழிகை. காலை ஒன்பது மணி. வெதுவெதுப்பான வெந்நீரில் வாசனாதி திரவியங்கள் கலந்து அரபுப் பொடி தேய்த்து நீராட சென்னபைரதேவிக்கு தாதி மிங்கு உதவ, ஸ்நானம் முடித்து மடிப் பிடவை உடுத்தி மிர்ஜான் கோட்டை பூஜை மண்டபத்துக்கு வருகிறாள் மகாராணி. தாதிகள் செலுவியும் மங்காவும் இன்னும் ஒருத்தியும் குளித்து மடி உடுத்து கூந்தலை வெண்பட்டுக் கட்டி மறைத்தபடி நானாவித…




Read more »

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள்

By |

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள் பதினேழரை நாழிகை காலை ஏழு மணி ஹொன்னாவர் நகரின் சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து வந்த காய்கறிகளும், ஷராவதி நதித்தடத்தில் தூண்டிலிட்டுப் பிடித்துப் புதியதாக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களும் பிரப்பங்கூடைகளில் வைத்து விற்கும் சந்தைக் கடைகளில் சத்தமாக உள்ளது. தினமும் வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவதில் உள்ள சந்தோஷத்துக்காக குடும்பப் பெண்கள் கூடைகளோடு அடுத்த பேரத்துக்காக…




Read more »