Archive For ஆகஸ்ட் 31, 2021
ஐ ஏ எஸ் கோச்சிங் போனோமே ஞாபகம் இருக்கா? ஜெயம்மா புன்சிரிப்போடு கேட்டாள் சங்கரனை. சங்கரன் ஞாபக மறதியோடு சிரித்தார். “நீயும் அந்த சோழ பிரம்மஹத்தி தைனிக் ஜாக்ரன் எடிட்டர் குப்தாவும் க்ளாஸுக்கு முதல்லே வந்து பேக்கு பேக்குன்னு உட்கார்ந்திருந்தீங்க. என்ன வயசு இருபத்துமூணு இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். ஆனா பாரு பகவான் ஆகிருதியை ரெண்டு பேரை ஒண்ணாக்கி நீட்டி நிமித்தினமாதிரி ஆக்கிட்டான்” என்றாள் ஜெயம்மா. சங்கரன் மணலுக்குள் ஜெயம்மா கையை இழுத்து வைத்து மேலே மணலால்…
வளர்ந்து வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ராத்திரியில் மன்னரோடு சந்திப்பு மிக சுவாரசியமானது என்றேன் மதுரை மகாராஜா முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்களிடம், இட்டலியை கோழிக் குழம்போடு வாயில் இட்டுக் கொண்டு. விஜயநகர அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எங்கும் மெலிந்த இட்டலிகள் உண்ணக் கிடைக்கும். அவற்றின் நான்கு சேர்ந்து ஒன்றாக மதுரை அரண்மனையில் உண்டேன். நல்ல வெள்ளை நிறம், சற்றே அதிகம் உப்பு இட்டு வேகவைத்த, சூடான இட்டலிகள் அவை. அடுத்து இரண்டு தோசைகளை கொத்திச்…
2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 கண்ணன் பிறந்த நாளில் நான் என் வேம்பநாட்டுக் காயல் blog-இல் எழுதியது இது – கோகுலாஷ்டமி வாழ்த்துகள் ———————————— கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் சென்னை மகாலிங்கபுரம் கிருஷ்ணன் அம்பலத்தில் சற்று நேரம் முன் தொழுது வந்தேன். செத்தி மந்தாரம் துளசி பிச்சக மாலகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம். நான் போன நேரம் கண்ணனுக்குத் திருமஞ்சன வேளை. தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்துபோய் பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ….
வேகமாக முன்னேறி வரும் மிளகு நாவலில் இருந்து அரசூர் சங்கரனும் அடல்ட் டயாபரும் வசந்தி கையை இறுக்கமாகப் பிடித்தபடி சங்கரன் இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ள முடியாது என்று குழந்தை மாதிரி பிடிவாதம். விமானத்துக்குள் ஓட வேண்டியிருந்தது என்றால் இப்படிக் கட்டிப் போட்டபின் செய்ய முடியாது என்பது அவர் வாதம். உயிர் முக்கியமில்லியா என்று தெரிசாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் விசாரிப்பது போல் கேட்டபோது அவர் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் எல்லாவற்றையும் மறந்து…
an excerpt from my forthcoming novel MILAGU அடக்கியும் அன்றியும் மிளகுராணி சென்னபைரதேவியும் அபயராணி அப்பக்கா தேவியும் இருக்கும்வரை டச்சுக்காரர்களின் ஏகாதிபத்யமோ இங்கிலீஷ் ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் குள்ளநரித் தந்திரங்களோ இங்கே எடுபடாது என்றார் ஸாமுரின். போர்த்துகீசியர்களும் இந்தப் பட்டியலில் உண்டு என்பதை அவர் தற்காலிகமாக மறந்திருந்தார். பெத்ரோவும் தான். திடீரென்று ஸாமுரின் எழுந்தார். எல்லோரும் எழுந்து வணங்கித் தலை தாழ்த்தி இருக்க அவர் பின் அரங்கத்துக்கு நடந்தார். போகும்போது யாரிடமோ காதில் ஏதோ சொல்லிப்…
”ஜனவரியில் புறப்பட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா? அல்லது மாட்ரிட் முதலில் வருவீர்களா?” ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார். “இருங்கள் சின்ஹோர் இமானுவல் பெத்ரோ. இந்தப் பயணம் உடனே முடிவெடுத்து அடுத்த நாள் நாலு துணிமணியை மடித்து சஞ்சியில் வைத்துக்கொண்டு கிளம்பி விடுகிற சமாசாரம் இல்லையே. நான் இல்லாதபோது இங்கே காரியங்கள் நான் இல்லாதது குறையாகத் தெரியாமல் நடந்தேறத் திட்டமிட வேண்டும். பயணம் போனால், எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறேனோ…