Archive For செப்டம்பர் 26, 2021

மிளகு நாவலில் இருந்து – I, Neminathan

By |

மிளகு நாவலில் இருந்து – I, Neminathan

நான், நேமிநாதன்…. ரஞ்சனாவை வெளியே வந்த கூண்டுக் கிளியைப் பார்க்கிறது போல் கழுத்தில் கை வைத்து நோக்கிச் சொன்னேன் – ”முகம் கழுவிக்கொண்டு வாடி. வெளியே போகணும்”. நான் நடுராத்திரிக்கு வந்து அவளை எழுப்பிவிட்டது கூட அவளை வருத்தமும் கோபமும் அடையச் செய்யவில்லை. டி என்ற தொண்டச்சியை விளிக்கும் இழிவு தான் அவளை ரொம்பவும் பாதித்தது. ”மதுசாலைக்குப் போய் நிரம்ப மது பருகி தாறுமாறாக நடக்க வந்திருக்கிறீர்கள் என்றால், உடனே வெளியேறுங்கள். அம்மா மகாராணியிடம் புகார் அளிப்பேன்…




Read more »

Neminathan’s Soliloquy – மிளகு நாவல் சிறு பகுதி

By |

Neminathan’s Soliloquy – மிளகு நாவல் சிறு பகுதி

நான் நேமிநாதன். காற்றில் அலைக்கழிக்கப்பட்டு துடுப்புகள் தவறி விழுந்து கடலோடிய படகு போல் நாற்பது வயதிலும் இலக்கு இன்றிச் சுற்றிச் சுற்றி வருகிறேன். அலைகள் என்னைச் சுற்றிச் சீறிச் சினந்து எழும்பிப் படகைக் கவிழ்த்து என்னையும் நீர்ப்பெருக்கில் அடித்துப் போகவைக்க ஆடிவருகின்றன. நேமிநாதன் துரோகி என்று அவை ஏசலைக் குரலுயர்த்தி ஒரே குரலில் பாடுகின்றன. காதுகளைப் பொத்திக்கொள்ள வைக்கும் இரைச்சல். திட்டு. வசவு. துரோகி என்கின்றன அவை என்னைத் திரும்பத் திரும்ப. சென்னபைரதேவி மகாராணியின் மகன் என்ற…




Read more »

’மிளகு’ பெரும் நாவலில் இருந்து Buyer Beware – he bought a call option instead of a put option when the commodities market for pepper is bearish

By |

’மிளகு’ பெரும் நாவலில் இருந்து   Buyer Beware – he bought a call option instead of a put option when the commodities market for pepper is bearish

கம்ப்யூட்டர் அறையில் லேப்டாப்பை இயக்கியபடி ”உனக்கு ரொம்ப சிம்பிள் ஆக ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் சொல்லித்தரேன், வா”, என்றான் மருது. இரு வரேன் என்று உள்ளே ட்ராவல் பையோடு போய், நைட்டி அணிந்து வந்தாள் கல்பா. நைட்டி அணிந்த தேவதைகளின் ஆராதக தெய்வம் போல் இருப்பதாக மருது சொல்ல, போடா என்றாள் சீரியஸான முகத்தோடு. ”ஷேர் மார்க்கெட் பரிபாஷையிலே call கால் என்றால் கூப்பிடறது இல்லே வாங்கறேன்னு அறிவிக்கிறது. Put புட் அப்படீன்னா வைக்கறது இல்லே. விற்கறேன்னு அறிவிக்கறது….




Read more »

பெரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – An epistle to the Prudent Phillip, the Emperor of Portugal and Spain

By |

பெரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – An epistle to the Prudent Phillip, the Emperor of Portugal and Spain

எதுவும் எழுதாத மரப்பட்டை ஒன்றை எடுத்து விரித்து கடுக்காய் மசிப் போத்தலில் மயிலிறகை அமிழ்த்தி மரப்பட்டையில் எழுதலானார் இமானுவெல் பெத்ரோ. பிலிப்பைன் பெருவம்சத்தில் சூரியன் போல நற்பிறப்பு எய்தியவரும், எத்திசையும் புகழ அரசாண்ட மானுவேல் சக்கரவர்த்திகளின் நற்பேரனும், போர்த்துகீஸ் பேரரசரும், ஸ்பெயின் சக்கரவர்த்தியும், நேபிள்ஸ் மாமன்னரும், சிசிலி மாநிலத்தின் மன்னர் பெருமானும் ஆன, எங்கள் போர்த்துகீசிய வம்சத்தைத் தாயினும் சாலப் பரிந்து பாதுகாத்து வளர்த்து பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, கலை, இலக்கியச் செழிப்பு, மேன்மையான உணவு, சிறப்பான…




Read more »

He was born holding tight the midwife’s finger -மிளகு நாவலில் இருந்து

By |

He was born holding tight the midwife’s finger -மிளகு நாவலில் இருந்து

– குழந்தை மெல்ல தலை முதலில் வெளிவரப் பார்த்து நின்ற மருத்துவச்சி ஆச்சரியத்தைச் சொல்லும் குரல் எழுப்பினாள். எத்தனை தடவை பிரசவிக்கப் பண்ணினாலும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு அது ஆனந்தகரமும் ஆச்சரியமும் தான் என்று அவள் பார்வை சொன்னது. குழந்தை தலைமேல் கை வெச்சுக்கிட்டிருக்கு. பாருங்க மருமகனே. அதை அங்கே இருந்து இடுப்புக்கு கொண்டு வரணும் என்றபடி சிசுவின் கையைத் தலையில் இருந்து அகற்ற மருத்துவச்சி தன் கையை அதன் அருகே கொண்டு போ0னாள். பிஞ்சு விரல்கள்…




Read more »

‘மிளகு’ – பெரும் நாவலின் ஒரு பக்கம் A midwife and wife

By |

‘மிளகு’ – பெரும் நாவலின் ஒரு பக்கம் A midwife and wife

மிங்குவுக்கு இது மூன்றாவது முறை பிரசவ வலி கண்டது. ஒவ்வொரு தடவை வலிக்கும்போதும் உள்ளறையில் இருந்து வேதனை முனகல் கேட்டு மிங்குவின் கணவர் பைத்யநாத் வைத்தியர் உள்ளே ஓடிப் போய் நோக்குகிறார். அங்கே இருக்கும் மருத்துவச்சி ராஜம்மா அவரை வாசலுக்குக் கை சுட்டி மிதமான குரலில் சொல்கிறாள் – ”மருமகனே, நீங்க ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கலாம். ஆனா இப்படி வைத்தியர் பெண்டாட்டிக்கும் பிரசவம் பார்க்கறது இந்த மருத்துவச்சிதான். எப்போ உங்களை உள்ளே கூப்பிடணுமோ அப்போ கூப்பிடறேன். அதுவரை…




Read more »