Archive For செப்டம்பர் 17, 2021
காசிரையின் புன்முறுவலும் அழகிய பெரிய விழிகளும் அதிகாலை வெளிச்சத்தில் அழகாகத் தெரிய சாரட் வண்டி தண்ணீர்த் துறைக்கு வந்து நின்றது. தேரோட்டி அருகமகாவீரன் குதித்து இறங்கினான். ”காசக்கா, நீங்க சொன்னபடி வெளிச்செண்ணெய், அரப்புப் பொடி, வாசனைப்பொடி, மல்லிகைப் பூ, கருந்துளசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் பிரம்பு கடகத்துலே தனித்தனியாகப் போட்டுக் கொண்டு வந்திட்டேன். சரியா இருக்கா பாருங்க” என்றான் அவன். ”சரி நான் பார்த்துக்கறேன். நல்ல காரியம் செய்திருக்கே. உன்னை அருகதேவரும் மகாவீரரும் சேர்ந்து ஒரு மாசம்…
“நேற்று நான் ஒரு கனவு கண்டேன். எல்லா தீர்த்தங்கரர்களும் சிற்பமாக உருவாகும் ஒரு சமணக் கோவில்.பஸதி. வாசலில் கழிவுநீர் ஓடை. அதன் நடுவே கழுத்து வரை மூழ்கியபடி ஒரு சிறுமி துணி பொம்மையை அசுத்த நீரில் நனைத்து சிரிக்கிறாள். தேங்கிய சாக்கடை இது. நான் பஸதிக்குள் போகிறேன். பாதி உருவான தீர்த்தங்கரர்கள் சுவர்ப்பக்கம் பார்த்தபடி திரும்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் – எங்களுக்குப் படைக்க நீ எடுத்து வந்திருக்கும் இனிப்புகளும் பழங்களும் எங்களுக்கு வேண்டாம். அந்தச் சிறுமியை…
உளிகள் விடிந்தது முதல் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது. பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது. சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப போய், சலிக்காமல் அந்த ஒரே…
“கஸ்ஸி, வா, வா, உன் மலர்ப் பாதங்களை தாங்கிக் கிடக்க என் வீட்டுப் படிகளுக்கும் வாசல் தரைக்கும் என்ன அதிர்ஷ்டம்”. போர்த்துகீசிய மொழியில் மிகை நாடகம் ரசிக்கப்படுவது அதிகம் என்பதை மனதில் நினைத்தோ என்னமோ எழுபது வயது கவுடின்ஹோ மிகையான கையசைவு, கண் உருட்டல், வாயைக் கிழித்துத் தொங்கவிட்டதுபோல் புன்னகை, அசட்டுப் பேச்சு என்று கூத்து நிகழ்த்த, பொறுத்துக்கொண்டு வல்லூறு எங்கே கொத்தப் போகிறது என்று ஊகித்தபடி உள்ளே வந்தாள் கஸாண்ட்ரா, அவர் கூப்பிட்டது போல் கஸ்ஸி…
மிளகு நாவலில் இருந்து விடிந்து கொண்டிருக்கும்போது அந்தப் பெண்கள் நடக்கத் தொடங்கினார்கள். சிறுபறை கொட்டிப் பாடிக்கொண்டே நடந்தால் நடக்கும் தொலைவு தெரியாதென்று பாட ஆரம்பித்தது, நடையும் தீரவில்லை, பாட்டும் ஓயவில்லை. எல்லோரும் பதினைந்து வயதிற்கு உட்பட்ட கன்யகைகள். எல்லோரும் பதினைந்து வயதுக்காரிகள் என்றோ சொன்னது? இந்தக் கூட்டத்தைத் தலைமை வகித்து நடத்திச் சென்றவள் காசிரை. அப்படித்தான் தன் பெயரைச் சொல்லிக்கொள்கிறாள் கஸாண்ட்ரா சில நேரம். பல நேரமும் அவள் தன் போர்த்துகீசிய தந்தை ரொனால்டோ பத்ரோஸின் மகளாக…
வீடு அமைதியில் கிடந்தது. காஸண்ட்ரா கதவுகளைச் சாத்தித் தாழிட்டு பின்னறையிலிருந்து எடுத்த பெரிய பீங்கான் ஜாடியோடு சமையலறைக்கு நடந்தாள். ஜாடிக்குள், இரவு முழுவதும் வெள்ளை ஒயினில் ஊறிய பன்றி மாமிசத் துண்டுகள் தனி வாடையைக் கிளப்பிக்கொண்டிருந்தன. ஓலைக் கடகத்தில் அடுமனையில் இருந்து வந்திருந்த ரொட்டியை எடுத்து சீரான சதுரத் துண்டுகளாக சீய்த்து சமையலறை மேடை மேல் பித்தளைத் தட்டில் இட்டாள். ரொட்டியும் பெத்ரோவின் மாளிகையில் தான் முன்பெல்லாம் செய்து வந்தார்கள். ரொட்டி செய்யலாம் என்று ஆரம்பித்தால் வேறெதெல்லாமோ…