Archive For செப்டம்பர் 10, 2021

ஷராவதி நதியில் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் – மிளகு நாவலில் இருந்து

By |

ஷராவதி நதியில் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் – மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவலில் இருந்து – ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி ஷராவதியை மடை மாற்றி கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது. கட்டத்தின் படிகளில் ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற…




Read more »

நடந்தாய் வாழி ஷராவதி

By |

நடந்தாய் வாழி ஷராவதி

மிளகு நாவலில் இருந்து சிறு பகுதி காவேரியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதி மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும். அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து…




Read more »

மருமக்கள் தாயம் என்ற அலிய சந்தான நடைமுறை 1604-ம் ஆண்டு

By |

மருமக்கள் தாயம் என்ற அலிய சந்தான நடைமுறை 1604-ம் ஆண்டு

மிளகு நாவல் – ஜெருஸுப்பா, ஹொன்னாவர், எட்டாக்கனி வீட்டு வளாகத்தில், வீடு நிற்கும் இடத்துக்குப் பின்னால் இன்னும் நாலு வீடு கட்ட முடியுமளவு நிலம் இருந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு நேரே தெற்கில் இருந்த இந்த நிலப்பரப்பும் சுத்தம் செய்யப்பட்டு பந்தல் வேய்ந்து கல்யாணத்துக்கான போஜனசாலை ஆனது. இன்றிலிருந்து நாளை மறுநாள் கல்யாணம் முடிந்து, அதற்கடுத்த நாள் முளைப் பாலிகை கரைத்து முடியும்வரை இனி விருந்து இங்கேதான். அப்புறம் மாப்பிள்ளை, மருமக்கள் தாயம் என்ற அலியசந்தான நடைமுறைப்படி பெண் வீட்டுக்குக்…




Read more »

மிளகு நாவலில் இருந்து நழுவி விழுந்த மீன்

By |

மிளகு நாவலில் இருந்து நழுவி விழுந்த மீன்

“வேம்பு அண்ணாவரே, நேற்றைக்கு கடையிலே காணோம் எங்கே போயிருந்தீங்க?” மீன் தலைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் இட்டு வேம்புவிடம் கொடுக்கப் போனபோது அவர் அடுப்பு பக்கம் நகர்ந்திருந்தார். “நானா, ஊரே ஓடிக்கிட்டு இருக்கே, நானும் அங்கே தான் போனது. சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன். ரொம்ப நேரமாயிடுச்சு’ என்றார், தலைகளை வெண்ணெய் விட்டுப் பொறிக்க கூடுதல் வெப்பம் உண்டாக்க ஒரு விறகைத் அடுப்பில் திணித்தபடி. ”நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக…




Read more »

சதுர்முக பசதி என்ற சமணக் கோவில் – மிளகு நாவலில் இருந்து

By |

சதுர்முக பசதி என்ற சமணக் கோவில் – மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவலில் இருந்து ”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது எண்ணங்கள் உருவாக்கிய இலக்கியமும், ஓவியமும், சிற்பமும், கடவுளும்…




Read more »

முகத்தில் பூசிய மிளகு விழுது -மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

By |

முகத்தில் பூசிய மிளகு விழுது -மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

குட்டி, நானே மொளகு விழுது எடுத்து தட்டுலே போட்டுக்கணுமா? அதுக்கு முன்னாடி அது நல்லா அரைச்சிருக்கான்னு பார்த்து சொல்லு கொஞ்சம். சொல்லியபடி லூசியாவின் தலையை மிளகு விழுதுக் கிண்ணத்துக்குள் அமிழ்த்தினான் அவன். ஓவென்று குரல் எடுத்து அலறினாள் லூசியா. ஐயோ கண்ணு எரியுதே.. ஒண்ணும் பார்க்க முடியலியே. குருடாகிட்டேன். இருட்டிட்டு வருது.. நெஞ்செல்லாம் எரியுதே.. கண்ணை கழுவிக்கணுமே தண்ணீ ஆல்வாரிஸ் சின்ஹோர் ஐயோ எரியுதே அவள் பக்கத்தில் அல்வாரிஸ் நடந்து மெல்ல அவளை அருகில் ஒரு நாற்காலியில்…




Read more »