Archive For செப்டம்பர் 3, 2021
மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி மிளகு தின்னும் போட்டியோடு ஒரு வசந்த விழா சீனாவும் தைவானும் அடுத்த வாரம், தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப் போகும் வசந்த விழா என்ற சீனப் பண்டிகைக்கு மிளகு தேவை. பெருமழையால் ஏற்பட்ட யாங்ட்ஸீ நதியின் வெள்ளப் பெருக்கு காரணம் நதிக்கரை கோடவுண்களில் சேமித்து வைத்திருந்த இந்திய இறக்குமதி மிளகில் பாதிக்கு மேல் கெட்டுப் போய்விட்டதாக சீன அரசாங்க யந்திரம் அறிவிக்கத் தாமதமாகிப் போனது. தைவான் சமாளித்துக் கொள்ளும்….
என் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறிய பகுதி லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்திப்போக வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கு ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கு அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள். இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, , மிளகு…
விரைந்து முன்னேறும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி லூசியா அபுசாலியின் கூடையிலிருந்து மீன்களை அள்ளியபடி எதிரே அலமாரியில் எதையோ தேடினாள் – மரவை எங்கே நாகு என்று இளைய மடையரைக் கேட்க அவன் சிவப்பு வண்ணம் பூசிய அகன்ற கும்பா போன்ற மரவையை எடுத்துவந்து கொடுத்தான். மரவையில் ஊற்றியிருந்த கல் உப்பு கரைத்த தண்ணீரில் கையில் இருந்த மீன்களை முழுக்கக் கழுவினாள். ஷராவதி ஆற்று மீன் ரொம்ப வழுக்குதே என்றபடி லூசியா தரையில் விழுந்த…