Archive For அக்டோபர் 30, 2021
ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஒவ்வொரு மனையிலும் இருக்கப்பட்ட ஆண்கள் கிட்டத்தட்ட பிரதி தினமும், காலை ஏழிலிருந்து பிற்பகல் அல்லது சாயந்திரம் வரை காணாமல், முப்பது கல் சுற்றளவில் ஏதாவது கிரஹத்தில் மங்கலமான, அல்லாத சடங்கு நிறைவேற்றித்தரப் போயிருப்பதால், அக்ரஹாரத்தில் ஆண் மூச்சு ஆகக் குறைவாகவே இருக்கும். எழுபது வயதில் ஓய்வு பெற்ற சாஸ்திரிகள் கூட குரல் நடுங்காமல் ஸ்பஷ்டமாக எழும் வரை வேதபாடசாலையில் பாடம் நடத்தப் போய் விடுவார்கள் பெரும்பாலும். வாரம் ஏழு நாள், மாதத்துக்கு ஒரு சுக்ல…
ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஆண்கள் யாரும் தட்டுப்படாத காலை நேரம் அது. பிறந்து மருத்துவச்சி கையில் விழுந்த சிசுவுக்கு காலுக்கு நடுவே குஞ்சாமணி தட்டுப்பட்டால், சுபஸ்ய சீக்கிரம் என்றபடி, கூடிய சீக்கிரம் சுபமுகூர்த்தத்தில் காது குத்தல், நாமகரணம், சோறூண், அப்புறம் பூணூல் கல்யாணம். முப்புரி நூல் அணிந்த பய்யன்கள் வேத அத்தியாயனம் செய்து கொண்டிருக்கும்போதே வாழ்க்கைக்கு அவசியமான மந்திரங்களை ஓதப் பயிற்சியோடு, சடங்குகளை நிறைவேற்றித் தரவும் பயிற்சி அளிக்கப்படுவர். உதாரணமாக காதுகுத்தலையே எடுத்துக் கொள்ளலாம். எளிமையான சடங்கு,…
சரி உடஞ்சாச்சு ஒட்டுமோ ஒட்டாதோ திரும்பி. காலம் தான் பதில் சொல்லணும் கோகர்ணம் கணபதி சொல்லாட்டாலும். அது இருக்கட்டும், உனக்கு அரசாட்சி கைக்கு வர நானும் திம்மப்பனும் ஏன் உதவி செய்யணும் சொல்லு. திம்மப்பன் கிட்டே கேட்டதை ஒரு சௌகரியத்துக்காகத் தனியா நிறுத்திட்டு என் கிட்டே வந்திருக்கியே உனக்கு உதவி பண்ணனும்னு. செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? நேமிநாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். அவன் சொன்னது – நான் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டறதை நிறுத்தி உங்களுக்கு அந்தத்…
ஆக இந்த கார்டெல் ஜீவனோட இருந்தா இதெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். போர்த்துகல்லுக்கு ஒரு அரசர் இருக்கார். ஒரு அரசவை இருக்கு. அவர்கள் ஒரு கையசைத்தால் கார்டல் இருந்த இடம் தெரியாமல் போயிடலாம். அப்புறம் எதை நம்பி நாம ஆற்றிலே இறங்கறதாம்? யோசிச்சுப் பாரு நேமி. நான் சொல்றது தப்பா? இல்லையென்று தலையாட்டினான் நேமிநாதன். எது சரி என்றுதான் தெரியவில்லை அவனுக்கு. அது இருக்கட்டும். நூறு வருஷமா கார்டெல் வேறே வேறே ரூபங்கள்லே செயல்பட்டு வருது. ஆனா…
நேமிநாதன் தனக்குப் பரிமாறப்பட்ட அக்காரவடிசல், இட்டலிகள், குழாய்ப் புட்டு, கடலை என்னும் விஸ்தாரமான காலை ஆகாரத்தைப் பார்த்தபடி ஒரு வினாடி இருந்து பின் சொன்னான் – மகாராஜா தயை செய்து என்னை ஒருமையில் நீ என்றே அழைக்க வேண்டுகிறேன். தாங்கள் என் அன்னை சென்னபைரதேவி மகாராணிக்கும் தகப்பன் போல். ஒருமையில் அவரையே அழைக்கும்போது நேமிநாதனை அவனுடைய அப்பா வயசு அப்பாவின் சிநேகிதர் அப்படிக் கூப்பிடக்கூடாதா என்று கேட்டான் நேமிநாதன். நாயக்கர் ஒருமையிலா, அல்லது முழு மரியாதையோடு பன்மையிலா…
நேமிநாதன், நாலு அடி நடந்தவன் திரும்ப அறைக்கு வந்து மேசை மேல் வைத்திருந்த அனுமதி இலச்சினையை எடுத்துக் குப்பாயத்தில் வைத்துக்கொண்டு நடந்தான். அவன் போய்ச் சேர்வதற்குள் போஜனசாலையில் வேலைப்பாடமைந்த சொகுசு நாற்காலியில் நீலமும், பச்சையும், சிவப்புமாக பட்டு உத்தரீயம், குப்பாயம், அரையில் மொகலாய முழு நிஜார் என்று அணிந்து காத்திருந்தார் கெலடி மன்னர் வெங்கடபதி நாயக்கர். அவர் கண்கள் மூடியிருக்க கை விரல்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்தன. உடல் உபாதை ஏதாவது பற்றியிருக்குமோ. நேமி பயப்பட்டான். ”ஒன்றுமில்லை,…