Archive For நவம்பர் 29, 2021
An excerpt from my forthcoming novel MILAGU பைத்யநாத வைத்தியருக்கு சித்தம் கலங்கிப் பித்தம் தலைக்கேறி விட்டது. அவரோடு பழகாதவர்கள் பார்த்தால் அப்படித்தான் சொல்வார்கள். பின் என்ன? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, சிப்பம் சிப்பமாகக் கட்டி வைத்திருந்த உலர்ந்த வேரும் இலையுமான மூலிகையை அலமாரிக்கு உள்ளும், மருத்துவப் பெட்டியில் இருந்தும் எடுத்துத் தரையில் போட்டுக் காலால் மிதிக்கிறார். அவருக்கு உள்ளே இருந்து ஒரு வெறி அவரைக் கொண்டு செலுத்துகிறது. அவருடைய மருந்துப் பெட்டியில் இருந்து,…
ஏண்டி பொண்ணே, எதுக்கு அவளோட ஈஷிக்கறே. கோவிலுக்குப் போயிட்டு சமையல்கட்டுலே எல்லாம் போகணும் அவளானா. நீ மேலே பட்டா தீட்டாகி, அவ ராத்திரியிலே கிணத்துலே எறைச்சு விட்டுண்டு குளிக்கணுமாக்கும், பாவம். இப்படி ஜோசியர் மாமி அந்தச் சின்னப் பொண்ணு கிட்டே சொல்றா. நான் என்ன தெரியுமோ பண்ணினேன். அந்தச் செறிய குட்டியை சேர்த்துக் கட்டிண்டேன். கோவில் நந்தவனம்னா என்ன. பிரியத்தைக் காட்டக் கூடாதா. அவ தலையிலே இதமா வருடி, வாடீன்னு கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போனேன்….
Excerpt from my forthcoming novel MILAGU சென்னா தரையில் அமர்ந்திருந்தவள் இந்தப் பெண் தன்னை நோக்கிக் கொலைப்படுத்தும் நோக்கத்தோடு பாய்ந்து வருவதைக் கண்டாலும், மூப்பு காரணம் எழுந்து நிற்க, ஓரமாக ஒதுங்க, அவளிடமிருந்தும் அவள் குறுவாளில் இருந்தும் உடனே தப்பி பாதுகாப்பான தூரத்துக்கு விலக முடியாமல் போனது. குறுவாள் பெண் அதற்குள் சென்னா தலையில் குறுவாளால் ஓங்கிக் குத்திப் பிளப்பவளாக பாய்ந்தாள். ராணி பக்கம் ஆடிக் கொண்டிருந்த மிங்கு சட்டென்று சென்னா மகாராணியின் தலையைத்…
Excerpt from my forthcoming novel MILAGU அடுத்து யார்? காசிரை கேட்க, மகாராணி கையமர்த்தி முதலில் பலகாரம் அப்புறம் ஆட்ட பாட்டம் அதற்கு அப்புறம் கலந்துரையாடல். பகல் பனிரெண்டு மணி வரை இதற்கான நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்று பெரும் கரகோஷத்துக்கு இடையே கூறினாள். அடுத்த மணி நேரம் அந்தப் பெண்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி என்ன பலகாரம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று, சங்கோஜம் இல்லாமல் கேட்டு வாங்கி, அவசரப்படுத்தி விழுங்க வைக்க யாரும் இல்லாமல்…
எல்லாரும் கேட்கற கேள்வியா எதுவும் நான் கேட்கப் போறதில்லே. நான் கேட்க நினைச்சது இதுதான். நீங்க எங்க எல்லார் மாதிரியும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆகி, ராணியாகவும் இருந்தால் இப்போ ராஜாங்கம் நடத்தற மாதிரி தான் செய்வீங்களா இல்லே அது வேறு விதமா இருக்குமா? ஒரு வினாடி அமைதி. வேறு விதம்னா, அரண்மனை சமையல்கட்டுலே வாழைக்காய் புளிங்கறி பண்ணிக்கிட்டு சபைக்கு கரண்டியோட ஓடி வந்து, ’மிளகு விக்கற விலையை படிக்கு காலே அரைக்கால் வராகன் கூட்டி…
An excerpt from my forthcoming novel MILAGU போஜனசாலையில் அவர்கள் குழுமியிருந்தார்கள். முன்னூறு பேர் இருந்து ஆகாரம் பண்ணும் அந்தப் பெரிய மண்டபத்தில் இவர்கள் முப்பது பேர் மட்டும் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே இரண்டடி இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாக இவர்கள் யாரோ வரக் காத்திருந்தார்கள். கோட்டை மடைப்பள்ளி ஊழியர்கள் இருவர் பெரிய குவளைகளில் மாம்பழச் சாறை ஒவ்வொரு விருந்தாளி முன்னும் வைத்துப் போக, இரண்டு பக்க வரிசையிலும் கோடியில் இருந்த குவளைகளுக்கு…