Archive For நவம்பர் 20, 2021
An excerpt from my forthcoming novel MILAGU இன்று காலை நடந்ததுதான் பின்னும் வேடிக்கை, பெரும் வேடிக்கை. காலையில் ரதவீதி மிட்டாய்க்கடைக்கு வேலைக்குப் போவது எட்டு மணிக்கு பிரதி தினமும். வீட்டில் இருந்து புறப்பட்டு சுமார் முக்கால் மணி நேரம் நடந்து கடைக்கு வந்து சேருவேன். உடலுக்கு தேகப் பயிற்சி என்பதோடு, கால் இருக்கறதாலே கிடைக்கும் சந்தோஷத்தை எல்லாம் உடனே அனுபவிக்க ஆசையும் கூட. இந்தக் காலத்தில் இருந்து பம்பாய், தில்லி, நாகபூர், ரயில், விமானம்…
An excerpt from my forthcoming novel MiLAGU முந்தாநாள் நடுராத்திரி கூடத்திலே தரையிலே பத்தமடைப் பாய் விரித்து சின்னதா ரெண்டு தலைகாணி தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணுன்னு வழக்கம்போல் வச்சு தூங்கிண்டிருந்தேன். தலைமாட்டுலே கொஞ்சம் தள்ளி சுவர்லே குழிச்ச மாடப் புறையிலே அகல் விளக்கு ராத்திரி முழுக்க சின்னதாக இருந்தாலும் நந்தாவிளக்காக, வெளிச்சம் வந்துண்டே இருக்கறது எல்லா வீட்டிலும் ராத்திரி நடவடிக்கை ஆச்சே. இல்லேன்னா தேளும், ஜலமண்டலியும், பூரானும் செவியனும் வீட்டுக்குள்ளே ராத்திரி வந்து ஜீவிதத்தை…
இலக்கிய நிகழ்வு, நாடக விழா என்று பாரதி மணி அவர்களோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் அவ்வப்போது சந்தித்து அளவளாவி இருக்கிறேன். அவருடைய புகைக்குழலில் எழும் மிதமான புகையிலை வாடையாகத்தான் அவரை நினைவு வைத்திருக்கிறேன். வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கோவையில் அளிக்கப்பட்ட விழாவில் அமர்வுகளுக்கு இடையே நிறைய உரையாடினோம். வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் சாரல் விருது சென்னையில் வழங்கப்பட்டபோது பேசியது படமாக நினைவு இருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி அவர்களைச் சந்தித்து உரையாடியபோது ஒரு முறை சொன்னார் – என் ‘மழை’…
An excerpt from my forthcoming novel MILAGU சாரி டாக்டர் பிஷாரடி, பேசிண்டே இருந்தபடி உறங்கிட்டேன். ஏசி போட்ட ரூம்லே இப்படி சௌகரியமான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போட்டு உக்கார்ந்தேன்னும் இல்லாம படுத்தேன்னும் இல்லாம அரைத் தூக்கத்திலே கிடக்கறது பாக்யம். தலையசைத்தபடி மனதில் பெயர்களை பட்டியல் போட்டார் – மஞ்சுநாதன் இல்லே மஞ்சுநாத், நேமிநாதன், ரோகிணி, ஜெருஸூப்பா, ஹொன்னாவர். அவருக்குப் புரிகிறது நானூறு வருடம் முந்தி ஹொன்னாவரில் ஜீவித்திருந்தவர்கள் இவர்கள். பரமன் அந்தக் காலத்தில் போய் வாழ்ந்திருக்கிறார்…
நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி குழந்தை என்னோடு அவ்வளவாக ஒட்டவில்லை. எப்போதும்போல்தான் இது. அப்பாவை பிரிந்த துக்கம். அவனுக்கு அப்பா என்பது பரமன் என்று பேசத் தெரிந்த காலத்திலேயே சொல்லிக் கொடுத்தாகி விட்டது. நேமிநாதனுக்கு அவன் மகன் என்பதில் அக்கறை இல்லை. அவனுக்கு நேமி தான் தகப்பன் என்பது இன்றுவரை தெரியாத உண்மை. அது தெரிய வரும்போது அவனும், நானும், நேமியும் பரமனும் என்ன ஆகியிருப்போமோ. ஞாயிறு முழுக்க அப்பா அருகில் இல்லாத துக்கத்தை அழுது தீர்த்தான்…
Excerpt from my forthcoming novel MILAGU பரமன் என்ற பரமேஸ்வர ஐயர் அறையின் மூலையில் வசதியான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அறை நல்ல வெளிச்சத்தில் இருந்தது. பரமனுக்கு எதிரே இன்னொரு நாற்காலியிட்டு பிஷாரடி வைத்தியர் உட்கார்ந்திருந்தார். அவர் மடியில் ஒரு சிறிய கேஸட் டேப் ரிக்கார்டரை வைத்திருந்தார். பரமன் சட்டை காலரில் இருந்து மிகச் சிறிய ஒலிவாங்கி டேப் ரிகார்டரோடு இணைத்திருந்தது.பரமனின் கண்கள் மூடியிருந்தன. பிஷாரடியும் மைக் கொண்டு தன்னையும் டேப் ரிகார்டரோடு பிணைத்திருந்தார். பத்து…