Archive For நவம்பர் 12, 2021
Excerpt from my forthcoming novel MILAGU இணைப்பு போர்த்துகீசிய மகாமன்னர் ’பக்திமான்’ பிலிப் இந்துஸ்தானத்துக்கான போர்த்துகீசிய தலைமை அரசப் பிரதிநிதி சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அவர்களுக்கு விடுத்த உத்தரவு லிகிதம் (பகுதிகள்) இந்துஸ்தானப் பெருநிலத்துக்கு எம் தலைமைப் பிரதிநிதியாக நியமித்து அனுப்பிய சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அறிந்திடுக- மகாராணி சென்னபைரதேவி அரசாளும் ஜெர்ஸோப்பா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனை குறித்து பெத்ரோ ஆகிய நீர் அறிந்திருக்கலாம். இது குறித்து எமக்கு உடனே விரிவாகத் தகவல் தெரிவித்து…
Excerpts from my forthcoming novel MiLAGU யுத்தம் வருமா? தனக்குத்தானே பேசுகிற முணுமுணுப்பாகக் கேட்டாள். பெத்ரோ ஏதும் சொல்வதற்குள் சென்னபைரதேவி தொடர்ந்தாள் – போர் வரும். அரசாள ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருந்த என் வளர்ப்பு மகன் நேமிநாதன் சும்மா இருக்க மாட்டான். கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பில்ஜி அரசன் திம்மையாவும் அவனுக்கு உடனே ஆதரவு தருவார்கள். எனக்கு ஆதரவுக்கு யாருமில்லை. அப்பக்கா ராணியை எனக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து மாற்றிக்கொள்ளக் கட்டாயப்படுத்தி விட்டார்கள்….
Excerpt from my forthcoming novel சமணன் குற்றம் சொன்னா, பஸதியிலே பத்து திகம்பர தீர்த்தங்கருக்குப் பதிலா பதினைந்து பேர் சிலை. சொல்லப்போனா ஒரு தீர்த்தங்கரருக்கும் இன்னொருத்தருக்கும் வித்தியாசமே தெரியாமத்தான் சிற்பிகள் கொத்தி வச்சுட்டுப் போயிடறாங்க. பத்து பதினஞ்சாகிறதால் பெருசா ஒண்ணுமில்லே. மிளகு வித்தோம் லிஸ்பன்லே. வர்ற பணத்திலே கணிசமாக வரி எடுத்து மீதியை ஏற்றுமதி செஞ்சவங்களுக்கு வெகுமதி, வருமானமாக எடுத்துக்க விட்டுடறாங்க. அவங்க, அரண்மனை தவிர வேறே எல்லா இடத்திலேயும் வருமானம் குறைஞ்சிருக்கு. அரசாங்கத்திலேயே பணம்…
Excerpt from my forthcoming novel MILAGU சகோதரரே, ஹொன்னாவரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பொதுவாகக் கேட்டாள் சென்னபைரதேவி மகாராணி. நாட்டு நடப்பை ஹொன்னாவர் குடிமக்கள் எப்படி சீர்தூக்கி எடைபோட்டுப் பேசுகிறார்கள், நடக்கும் சம்பவங்கள், நடக்க வேண்டிய ஆனால் நடக்காத சம்பவங்கள் குறித்து மக்கள் கருத்தென்ன என்றுதான் ராணியம்மாள் கேட்கிறாள் என்று பெத்ரோவுக்குப் புரிந்தது. பெத்ரோ சற்று தயங்கினார். யோசிக்க வேணாம். உங்கள் காதில் விழுந்ததை விழுந்தபடி பகிர்ந்து கொண்டால் நன்றி. உங்களுக்கு கொங்கணி தெரியாது…
Excerpt from my forthcoming novel MILAGU பெத்ரோ நின்றபடி குனிந்து மரியாதையோடு சொல்லத் தொடங்கினார் – அம்மா, உங்களை சம்பிரதாயங்கள் மீறி அன்புச் சகோதரி என்று அழைக்கிறேன் இந்தச் சந்திப்பின் மிகுதி நேரத்தில் மட்டும். சகோதரி, நான் சந்திப்பு என்றதும் நீங்கள் லிஸ்பன் பயணத்தைத் தள்ளிப்போடுவது பற்றி பேசத்தான் அழைக்கிறீர்கள் என்று மனதில் பட்டது. நீங்கள் சந்தித்திருக்கும் இடர்களை ஒரு அரசரோ அரசரில்லாது தனியே வாழும், ஆளும் ராணியோ எப்படிச் சமாளிப்பார்கள் என்று வியப்படைகிறேன். உங்களுக்கு…
அசல் குட்டநாடன் சாப்பாட்டுக் கடை உண்டு. போகலாம் சாரே. ஆலப்புழை போகிற வழியில் அவன் நிறுத்திய இடத்தில் நாலு பெஞ்சுகளையும் மர ஸ்டூல்களையும் பரத்திப் போட்டு ஒரு விடுதி. ஓரமாகத் தூங்கிய நாய்களையும், வாசலில் கட்டி வைத்த செம்மறி ஆட்டையும், பீடி புகைத்தபடி ஓட்டல் வாசல் படிகளில் உட்கார்ந்திருந்த கைலி அணிந்த பெரியவர்களையும் எல்லா ஓட்டல்களிலும் தான் பார்க்க முடியும். ஆனால் வாசலில் நட்ட நடுவே கால் பரப்பி மண் தரையில் அமர்ந்து இருக்கும் ஸ்தூல சரீரப்…