Archive For டிசம்பர் 31, 2021
an excerpt from my forthcoming novel MILAGU இரவெல்லாம் கண் விழித்து இரு கோச் வண்டிகள் மாற்றி காலை ஒன்பது மணிக்கு அவர் மாளிகைக்கு வந்து சேர கதவு எல்லாம் அடைத்துச் சார்த்தி வைத்திருந்தது. மனைவி மரியா, குழந்தைகள் மற்றும் கஸாண்ட்ராவைக் காணவில்லை. அவர் வசம் மாளிகைத் திறவுகோல் இல்லாத காரணத்தால் வாசலில் நின்று காத்திருக்க, எதிரே முட்டை வணிகம் செய்யும் கிருஷ்ணப்பா, அவர்கள் இன்று ஞாயிறென்பதால் தேவாலயம் போயிருப்பதாகத் தெரிவித்தான். ஞாயிற்றுக்கிழமை பரமபிதா அண்ட…
An excerpt from my forthcoming novel MILAGU மிளகு அத்தியாயம் எழுபத்தேழு 1606 உள்ளால் போர்த்துகீஸ் படை வந்து சேர்ந்தது. எங்கே வரவேண்டும் என்று தெரிவிக்கப் படாததால் உள்ளால் துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்ட பத்து சிறு கப்பல்களில் வந்த ஐநூறு பேர் படகுகளை அமர்த்திக்கொண்டு கரைக்கு ஏக கோலாகலமாக வந்து சேர, அப்பக்கா மகாராணிக்கு உடனடியாகச் செய்தி அறிவிக்கப்பட்டது. அப்பக்கா உடனே போர்த்துகல் அரசின் தலைமைப் பிரதிநிதியான சின்ஹோர் இம்மானுவல் பெத்ரோ அவர்களை துரிதமாக உள்ளாலுக்குப்…
An excerpt from my forthcoming novel MILAGU எதிரணி போர் நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் பில்கி அரச்ர் திம்மராஜுவும் கலந்து கொண்டதை நேமிநாதனும் வகுளாபரணனும் சிலாகித்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு முக்கியமான பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது. வேறுவேறு இடங்கள், சூழலில் இருந்து வரும் எதிரணிப் படையில் ஒற்றுமை அருகி வருவதை தினசரி அறிக்கை சுட்டிக்காட்டியது. முக்கியமாக கேலடி படை வீரர்கள் அணியின் தளவாய் ராஜசேகரனின் அதிகாரத்தை மதிக்காமல் தாந்தோன்றியாகச் செயலபடுவது பலவீனமாகச் சுட்டிக் காட்டப்பட்டது. கூட்டத்துக்கு நாளை…
An excerpt from my forthcoming novel MILAGU காவல் படையில் கூடுதல் சேதம் ஏற்பட, எதிரணியில் பில்கி மாநில அரசர் திம்மராஜு அனுப்பி வைத்த முதல் நூறு பேர் சேர்ந்து போரணியைப் பலப்படுத்தினார்கள். அனுபவம் வாய்ந்த அந்த வீரர்கள் நேமிநாதனை மகிழ்ச்சியடைய வைத்தார்கள். பிற்பகல் போரில் முதல் தடவையாக குதிரை ஏறிவந்த ஓர் அரசு காவல்படை வீரரை நோக்கி குறுவாளை வீசி எறிந்தான் எதிரணி வீரன் ஒருவன். அது காவல் படை வீரர் நெஞ்சில் ஆழப்பதிய…
An excerpt from my forthcoming novel MiLAGU முதல் நாள் யுத்தம் கோட்டை முற்றுகையாக ஆரம்பித்து நாள் முடிந்தபோது அரசு தரப்பில் ஏழு பேருக்கும் எதிரணியில் பதினேழு பேருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாக ஒற்றர் படை மகாராணிக்குத் தகவல் அறிவித்தது. உயிரிழப்பு இரு தரப்பிலும் இல்லை என்றும் இரு தரப்பிலும் அறிவிப்பு பதிவிட்டிருந்தது. ராத்திரி கோட்டை அரசாங்க மாளிகை மண்டபத்தில் சென்னபைரதேவி தலைமையில் பிரதானிகளும் தளவாய், ஒற்றர் படைத் தலைவர் ஆகியோரும் கூடி அன்றைய யுத்த…
an excerpt from my forthcoming novel MiLAGU எழுபத்தாறு 1606 மிர்ஜான் கோட்டை யுத்தம் ஆரம்பித்து விட்டது. மகாராணி சென்னபைரதேவி தொடங்கி வைக்கவில்லை. நேமிநாதன் தொடங்கினானா, தொடங்கினான் என்றால் எப்போது என்று அவனுக்கே தெரியாது. என்றாலும் அடிதடி ஆரம்பமாகியிருக்கிறது. மிர்ஜானுக்கு வெளியே நூறு பேரைக் கையில் வாளெடுத்து அணிவகுத்து இப்படியும் அப்படியும் கோட்டைக்கு வெளியே பிரதட்சணமாக நடக்க வைத்தபோது அந்தக் கூட்டத்துக்கும் கோட்டைக்குள்ளே வழக்கமான பாதுகாப்புக்காகப் பணிபுரியும் அரசு காவல் படைக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும்…