Archive For செப்டம்பர் 18, 2022
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 4 பிற்பகல். இன்றைக்கு இனிமேல் சித்ரன் வருவான் என்று தோன்றவில்லை. பகவதி, உலர்ந்து கொண்டிருந்த சோற்றுப் பாத்திரத்தைப் பார்த்தாள். சித்ரனுக்குப் பிடித்த மிளகூட்டான். இதுவும் இன்று குப்பைக்குத் தான். ஒரு பெருமூச்சோடு பகவதியின் கை பாத்திரத்தை எடுக்க நீண்டபோது, பின்னாலிருந்து ஒரு வலுவான கரம் இணைந்தது. ‘எனக்கு இல்லையா?’ சித்ரன் குரல். சட்டென்று இறங்கிய மழை போல பகவதிக்கு உடல்…
வாதவூரான் பரிகள் 2 இரா.முருகன் பயணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு, எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில் பயணிகள் ஆர்வத்தோடு அலைந்திருக்கிறார்கள். இபன் பதூதா, பாஹியான், மார்க்கோ போலோ, யுவான் சுவாங் என்று கிட்டத்தட்ட எல்லாப் பயணிகளும் பயணம் முடித்து ஊர் திரும்பி, உடுப்பைத் துவைக்கப்…
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 3 (இரா.முருகன் குறுநாவல்கள் நூலில் இருந்து) ——————————————————————————— மனை மத்தியான உறக்கத்தில் கிடந்தது. மூத்தவருக்கும், சித்ரன் நம்பூதிரிக்கும் இடைப்பட்ட நீலகண்டன் நம்பூதிரி, ராமச்ச விசிறியைத் தலை மாட்டில் வைத்துக் கொண்டு, முகப்பில், பளிங்குத் தரையின் குளிர்ச்சியில் நித்திரை போயிருந்தார். நாற்பது வயதில் இப்போது ஒரு மாதமாகப் புதிய உறவு வைத்துக்கொண்டு வாராவாரம் திருச்சிவப்பேரூர் போய்த் திரும்புகிற களைப்பு… இளசாக ஒரு பெண் கிடைக்கிறாள் என்றால் ஓணம் கேராத மூலையில்…
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 2 ‘நானாக்கும் இன்று..’ ‘நீ போடி தெம்மாடி.. இலையைத் தொடாதே..’ ‘நீ என்ன மோகினி என்று நினைப்போ.. கண்ணாடியில் உன் குரங்கு முகத்தைப் பார்த்ததே இல்லையா?’ ‘என் முகத்துக்கு என்னடி கிழவி? எனக்கு இன்னும் முப்பது வயது கூடத் திகையவில்லை… உன் மாதிரி தொங்கிப்போன மாரோடு திரிகிறேனா என்ன?’ ‘ஊருக்கெல்லாம் மாரைத் திறந்து போட்டு எடுக்கஞ்சேரி மனையிலிருந்து சவிட்டி இறக்கிய நாயில்லையா நீ…. கிழம்…
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 1 (’இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலில் இருந்து) ====================================================== இந்தக் குறுநாவல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தைப் பற்றியது. கதை நடக்கும் இடம் கேரளத்தின் வள்ளுவநாடு பிரதேசம் (இன்றைய மலைப்புரம் பகுதி). கதைக் களன் தான் மலையாள நாடே தவிர, கதை சுத்த சுயம்புவான தமிழ்க் கற்பனை. என் கற்பனையில் உருவானது. கதையில் நிஜங்கள் – 1) நம்பூதிரி சமுதாயப் பழக்க வழக்கங்கள்…
குறுநாவல் பகல் பத்து ராப்பத்து அத்தியாயம் 9 ’முன்னூற்று முப்பத்தஞ்சு ரூபாய்’. ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். மொட்டை மாடி அரை இருட்டு. காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தாண்டித் தவிர்த்தபடி. ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். நீளக் கட்டிய பிளாஸ்டிக் கயிற்றுக் கொடியில் உலர்த்தி எடுக்க மறந்துபோன மார்க் கச்சையின் கொக்கி காதில் பிறாண்ட .. யாரோடது…