Archive For செப்டம்பர் 6, 2022

குறுநாவல் : பகல் பத்து ராப்பத்து – தாய்டே சுண்ணாம்பு தடவிய டைப்ரைட்டர்

By |

குறுநாவல் : பகல் பத்து ராப்பத்து – தாய்டே சுண்ணாம்பு தடவிய டைப்ரைட்டர்

குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து;   அத்தியாயம் 4     ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார்.   டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி.   நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை.   ‘சூனாம் தே..’   தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான்.   கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது.  …




Read more »

பக்லவா ஆசை

By |

பக்லவா ஆசை

பக்லவா ஆசை ——————– நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நக்யுப் மஹ்ஃபுஸின் ’கெய்ரோ மூன்று நாவல் தொகுதி’ படித்தேன். எகிப்திய தி.ஜானகிராமன் என்று அவரை நான் சொல்லத் தயார். சிதறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள், சின்னச்சின்ன சோரங்கள், மனக் குமைச்சல், இசை மேல் விருப்பம் என்று பொதுவான நகாசும், கதை முடிச்சுகளும் தட்டுப்படுகின்றன. மாமியார் மருமகள் சண்டை மருமகளின் அப்பாவை வரவழைத்து நீதி கேட்பதில் நிற்கிறது. சிக்கலான பிரச்சனை. சிர்கேஸிய பாணி கோழிக்கறியை அவர்களில் யார் யாருக்குச்…




Read more »

குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து’ – அத்தியாயம் 3

By |

குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து’ – அத்தியாயம் 3

குறுநாவல்   பகல் பத்து ராப்பத்து             அத்தியாயம் 3     ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது.   விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி..   பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது.   ‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில்…




Read more »

பகல் பத்து ராப்பத்து – குறுநாவல் அத்தியாயம் 2 இரா.முருகன்

By |

பகல் பத்து ராப்பத்து – குறுநாவல் அத்தியாயம் 2 இரா.முருகன்

அத்தியாயம் 2   ’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’   சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன்.   பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள்.   இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின்  காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும், விக்டோரியா…




Read more »

பகல் பத்து ராப்பத்து – குறுநாவல் – கரிசனமும், எள்ளுப் பொடியும், பெருங்காயமுமாக மணக்க மணக்க அகிலாண்டம் செய்து கொண்டுபோய்க் கொடுத்தது போக மீந்ததை உருளியில் மூடி வைத்திருக்க வேண்டாம்

By |

பகல் பத்து ராப்பத்து – குறுநாவல் – கரிசனமும், எள்ளுப் பொடியும், பெருங்காயமுமாக மணக்க மணக்க அகிலாண்டம் செய்து கொண்டுபோய்க் கொடுத்தது போக மீந்ததை உருளியில் மூடி வைத்திருக்க வேண்டாம்

பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1   முன்னுரையாகச் சில சொற்கள் –   என் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’.   1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க…




Read more »

குறுநாவல் ‘விஷம்’

By |

குறுநாவல் ‘விஷம்’

விடிந்து கொண்டிருந்தது. கனவான்க்ள் அரை டிராயர் அணிந்து காலில் சராய்களோடு ரிங் ரோடில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அல்லது தலையில் கம்பளி முண்டாசும், கையில் கோலுமாகப் பால் வாங்கப் போய்க் கொண்டிருந்தார்கள். காக்கி நிக்கரும், கையில் குண்டாந்தடியுமாக மளிகைக் கடைக்காரர்களும் மற்றவர்களும் உடன்படாதவர்களை அடக்க வலிமை பெற உடற்பயிற்சி.செய்யப் போனார்கள். சௌத் எக்ஸ்டென்ஷன் வரை நடந்து வந்த பிறகு தான் கார் ஞாபகம் வந்தது. போக வேண்டும். போனால், திரும்பவும் சந்தேகமான போலீஸ்காரர்கள். கண்டிப்பான ஆஸ்பத்திரிப் பணியாளர்கள்,  பேரழகும்…




Read more »