Archive For ஆகஸ்ட் 12, 2022
அடுத்த நாவல் ‘தினை’ ஏழு அத்தியாயங்கள் நிறைவடைந்து எட்டாவது அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்ன ழானர்? No Magical Realism, surrealism, historical fantasy … Not plain vanilla post modernistic by any stretch of imagination.. Let us categorize it as Hysterical Realism -recherché postmodernism. This is how the novel begins – நாவல் தினை பூர்வாங்கம் மலைப் பிரதேசம் பறவைக்…
விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1 ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம். பிறகு ‘விஷ்ணுபுரம் தேர்தல்’. இந்தக் குறுநாவலே ’பயோபிக்ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாகிப் பின்னர் நூல் வடிவமும், குறும்பட வடிவமும் பெற்ற ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’வுக்கு ஊற்றுக்கண். என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில்…
ஒரு வழியாக அடுத்த நாவல் (பெரு நாவல்?) ‘தினை’ எழுதத் தொடங்கி விட்டேன். வடக்கே போகும் நதி என்று ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞர் பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். நான் சந்தித்த எழுத்தாள நண்பர்களில் குறைந்தது ஐந்து பேராவது இந்துஸ்தானி இசை பற்றி எழுத உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்திருப்பதால், என் எழுத்து நதி வடக்கே ஓடாது, அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளால் தினை மளமளவென்று விளையட்டும்
இது 15 வருடம் முன் நடந்தது. என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுதியில் இடம் பெற்ற கட்டுரை. காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம் சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன். இங்கே எழுத வந்தது ஒரு அவஸ்தையைப் பற்றி. வெங்கடசாமிநாதன் பேச வந்தார். க.நா.சு, அமிதாப்பச்சன், ஜோதிபாசு, மிதுன் சக்கரவர்த்தி, வண்ணநிலவன், சிமெண்ட் டால்மியா, சோ என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே…
ருஷியாவிலே ராஜாங்கப் புரட்சி என் ராயர் காப்பி கிளப் கட்டுரைத் தொகுதியில் இருந்து ருஷிய – ஜப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே ருஷியாவில் உள்நாட்டுக் குழப்பங்கள் தொடங்கி விட்டன. அது முதல் ராஜாங்கப் புரட்சிக் கட்சியாருக்கு நாள்தோறும் பலமதிகரித்துக் கொண்டு வருகிறது. அப்பால், மேற்படி யுத்தத்திலே ருஷியா தோற்றுப் போய்விட்ட பிறகு ருஷிய ராஜ விரோதிகள் துணிவு மிகுந்தவர்களாகி, வெட்ட வெளியாகக் கலகம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இதுவரை பெருங் கலகங்களும், சிறு குழப்பங்களுமாக எத்தனையோ நடந்தன….
உச்சி வெய்யில் பட்டை உரிக்காத அபூர்வமான ஒரு மத்தியானப் பொழுதில் வடக்கு உஸ்மான் வீதிப் போக்குவரத்துக்குக் குறுக்கே நீந்திக் கடந்து போனால் இரண்டு பெயர்ப் பலகைகள் அருகருகே இருந்து வா, வா என்று காலைப் பிடித்து இழுக்கின்றன. மோர்க்கூழும், கொழுக்கட்டையும், புளி உப்புமாவும் மணக்க மணக்க விருந்து படைக்கும் ‘சக்கரப் பொங்கல்’ உணவு விடுதி ஒரு பக்கம். பா.ராகவன் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோது இந்த ஓட்டலைப் பற்றி முதல் பக்கத்தில் நேர்த்தியான வாழையிலை லே-அவுட்டோடு எழுதி…