Archive For ஜூன் 6, 2022
புத்தக வாடை சமீபத்தில், 1921-ம் வருட டயரி ஒன்று கிடைத்தது. பரண் உபயம்தான். வக்žல் குமாஸ்தாவாக இருந்த இரண்டு தலைமுறைக்கு முந்திய உறவுக்காரருடையது அது. இண்டு இடுக்கு விடாமல் வாய்தா, வக்காலத்து நாமா , சிரஸ்ததார் பெண் கல்யாணத்துக்குப் போனது, முன்சீப் கோர்ட் கிளார்க் அம்மா சிவலோக பதவி அடைந்தது என்று கலந்து கட்டியாகப் பதிவு செய்து வைத்திருந்த டைரியில் அந்தக் கால தஞ்சாவூர் அத்தர்க்கடை விளம்பரமும் கண்ணில் பட்டது. “நானாவித பரிமள கந்தங்களும், இங்கிலீஷ் தேச…
அற்ப விஷயம்-8 கல்யாணம் கச்சேரி உல்லாசம் எல்லாமே ‘இந்தத் தேதியில் கல்யாணம். ரிசப்ஷன். வந்து வாழ்த்தவும்.’ ஆடி பிறந்து ஆத்தா கோவில்களில் ஒலிபெருக்கி கட்டி எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு போட ஆரம்பிக்கும்வரை தொடர்வது திருமண அழைப்புகளின் படையெடுப்பு. மனசு நிறைய அன்பும், வாழ்த்த வாயில் வார்த்தையும் இருக்குது தான். ஆனாலும் ஒரு கல்யாணப் பந்தல் விடாமல் ஏறி இறங்கினால் ஆபீசில் லீவும் பர்ஸில் பணமும் கரைந்து போகும். செருப்பு அடிக்கடி காணாமல் போகும். டிவிடி மாதிரி…
அற்ப விஷயம் -17 குங்குமம் பத்திரிகை பத்தித் தொகுப்பில் இருந்து ‘திரு.அ இறந்துவிட்டார்’. மொபைல் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் தகவல். இந்த மாதிரியான செய்திகள் பெரும்பாலும் தூங்கப் போன பிற்பாடு வந்து படுக்கைக்குப் பக்கத்தில் பொறுமையாகக் காத்திருக்கும். விடிந்ததும் படிக்கக் கிடைத்து அன்றைய தினத்தையே தடம் புரட்டிப் போட்டுவிடலாம். யார் காலமானார், அனுப்பியவருக்கு என்ன உறவு அதைவிட முக்கியமாக நமக்கு யார் என்பதைப் பொறுத்த பாதிப்பு இது. முதல் எதிர்வினை…
அற்ப விஷயம்-29 ஆண்கள் மற்றும் சம்சாரிகள் இரண்டு தலைமுறை முன்னால் கேள்விப் பட்டிருக்க முடியாத விஷயங்களைப் பட்டியல் போடு என்று ரொம்ப அக்கறையாக யாராவது வீட்டுக் கதவைத் தட்டி விசாரித்தால், இண்டர்நெட், டெலிவிஷன் மெகா சீரியல், மினரல் வாட்டர், பிட்சா என்று விரலை மடக்கலாம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு இந்த லிஸ்டில் ஆணுறையையும் சேர்க்கலாமா? மகா மகா தப்பு. அதை எடுத்து விடவும். 1937-ம் வருடத்துப் பத்திரிகை ஒன்றை மேய்ந்து…
நேர்கண்டவர் எழுத்தாளர் காளிப்ரசாத் புரவி மிளகு நாவலின் அடிப்படை பற்றி… இரா.முருகன் 54 வருடம் சென்னபைரதேவி அரசாட்சி செய்தாலும் சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் கூட மிகச் சில மொழிதல்கள் உள்ளதேயன்றி அவரைச் சுற்றிப் போகும் வரலாற்றெழுத்து ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். கிட்டத்தட்ட சமகாலத்தவரான உள்ளால் பிரதேச மகாராணி அப்பக்கா தேவி பற்றிக்கூட குறிப்புகள் உண்டு – அப்பக்கா என்று மூன்று தலைமுறையாக பாட்டி, அம்மா, மகள் மூன்று பேருக்கும் குழப்பமாக ஒரே பெயர் இருந்தாலும்! கெருஸொப்பா…
என் ‘அற்ப விஷயம்’ மின்நூலிலிருந்து அற்ப விஷயம் -11 நாக்கு மூக்கு காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி. காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக்…