Archive For மே 30, 2022

அற்ப விஷயம் – முன்கூட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை

By |

அற்ப விஷயம் – முன்கூட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை

அற்ப விஷயம் மின்நூலில் இருந்து அற்ப விஷயம்-4          எட்டு பெட்டிகள்   வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் சேகரிப்பது இந்தப் பிரபலங்களின் ‘காலமானார்’ செய்திகள்.   மேல் நாட்டுப் பத்திரிகைகளில் இரங்கல் குறிப்பு எழுதுவதற்கு என்றே தனியாக சிறப்புச் செய்தியாளர்கள்…




Read more »

என்ன படிக்கிறேன்?

By |

என்ன படிக்கிறேன்?

எகிப்திய எழுத்தாளர் நக்யுய்ப் மஹ்ஃஃபவுஸ் (Naguib Mahfouz) எழுதிய ‘கெய்ரோ மூன்று நாவல்’களைப் படித்து முடித்து ஆப்ரிக்க மூன்று நாவல்களை வாசிக்க எடுத்திருந்தேன் அல்லவா? நைஜீரிய எழுத்தாளர் சின்வா அச்சூபி (Chinua Achebe) எழுதிய இவற்றில் முதலாவது நூல் Things Fall Apart இரண்டு நாளில் வாசித்து முடித்தேன். மற்ற இரு ஆப்பிரிக்க நாவல்களைப் படிக்கும் முன், நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பமுக் எழுதிய ‘இஸ்தான்புல்’ நாவலை அடுத்து வாசிக்க இப்போது எடுத்திருக்கிறேன்.




Read more »

மிளகு – பெரும் நாவல் மதிப்புரை – திரு.சரவணன் மாணிக்கவாசகம்

By |

மிளகு – இரா.முருகன்: இரா.முருகன் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தவர். வெளிநாட்டில் வசித்தவர். 1977ல் கணையாழியில் ஆரம்பித்த இலக்கியப் பயணம் ஐம்பதாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முப்பதுக்கும் மேல் நூல்கள், புனைவின் எல்லா வகைமைகளிலும் எழுதியவர். எல்லாவற்றுக்கும் மேல் முகமில்லாதவரையும் சமமாக நடத்தும் அந்த Humbleness தமிழில் ரொம்ப அரிதான சரக்கு. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் மிர்ஜான் கோட்டையில் சென்னபைராதேவியின் அறுபதாமாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ஆரம்பிக்கும் நாவல், இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரே தாவலாகத் தாவி, கடவுள் தேசத்தின் அம்பலப்புழையில், அகல்யாவின்…




Read more »

பகவதியின் டயரிக் குறிப்புகள் 1857 (அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து)

By |

பகவதியின் டயரிக் குறிப்புகள் 1857 (அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து)

பகவதியின் டயரியில் இருந்து ———————— அரசூர் பொங்கல் கழிந்து  நாலாவது சனிக்கிழமை இங்கிலீஷ் வருஷம் 1877   நான் பகவதி. பகவதிக் குட்டியாக்கும் முழுப் பெயர். அம்பலப்புழக்காரி. அங்கே பகவதிக் குட்டி என்றால் வெகு சகஜமான பெயர். இங்கே தமிழ் பேசுகிற பூமியில் குட்டி என்றால் கேலியும் கிண்டலும் பண்ணுவார்களாமே. அம்பலப்புழையிலிருந்து கல்யாணம் கழித்து இங்கே வந்தபோது என் புருஷன் அப்படித்தான் சொன்னார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.  மலையாளம் மட்டும் தெரிந்த எனக்கு தமிழ் சுமாராக…




Read more »

பெருநாவல் மிளகு – இருமை கரைந்து வரும் ஒருமை

By |

புரவி கலை இலக்கிய இதழ் மே 2022- இரா.முருகன் நேர்காணலில் இருந்து (நேர் கண்டவர் – காளிப்ரசாத்) கேள்வி வணிகமும் சமணமும் கலந்த ஒரு முரணாக ஒரு இழையை காட்சியமைக்கிறீர்கள்.. இது ஒருபக்கம் பொருள் ஈட்டும் பற்று மறுபக்கம் துறக்கும் திகம்பரம் என சமணத்தின் இரு பிரிவுகளை கூறுகிறது. சமண பஸதிக்குள் புத்திர பாசத்தில் சென்று விழும் பரமன் என இந்த duality பாத்திரங்கள் வரை நீளுகிறது. சமணம் மீதான உங்களுடைய பார்வைகளை கூற இயலுமா..? அது…




Read more »

என் வாசகர்களும் நானும்

By |

என் வாசகர்களும் நானும்

என் வாசகர்களும் நானும் என் புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்த ஒரு வாசகர் சொன்னார், ‘ரெண்டு நாளா இந்த புத்தக வேலையிலே தான் இருந்தேன்’. பதிப்பாளரின் அலுவலகத்தில் அவரைப் பார்த்த நினைவு இல்லாததால், ‘என்ன மாதிரி வேலை?” என்று கேட்டேன். ‘இது வாராவாரம் திண்ணை பத்திரிகையோட இண்டர்நெட் தளத்திலே வந்துச்சு இல்லே? நூற்று நாலு அத்தியாயமும் தேடி எடுத்து அதே ஆர்டர்லே கட் அண்ட் பேஸ்ட் செஞ்சு எம்.எஸ் வேர்ட் ஃபைல் ஓப்பன் பண்ணி சேர்த்து வச்சுக்கிட்டேன்….




Read more »