Archive For ஏப்ரல் 14, 2022

இரண்டாம் உலக மகாயுத்தம் – ஜப்பான் குண்டுமழை பீதியில் மதறாஸ் 1944

By |

ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ்   கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும்.   தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.   பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட  பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு வாசலில், திண்ணையில் தடுப்பு எழுப்பி வைத்துப்…




Read more »

பித்தளைக் குடம் தொலைந்து போன 1964 தமிழ்ப்பட அரங்கம்

By |

குடம்   ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன்  சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ.   எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு வயசா என்ன? சுதந்திர தினம், குடியரசு…




Read more »

நான் உபதேசங்கள் செய்யறவன் இல்லை, என் கதைகளும்

By |

நான் உபதேசங்கள் செய்யறவன் இல்லை, என் கதைகளும்

எழுத்தாளர் இரா.முருகன் – ஒரு உரையாடல்  கேள்வி : காளிப்ரசாத் 1) தகவல் தொழில் நுட்ப துறையின் பணியாளர்கள் மீது ஒரு புரிதல் உண்டானது மிகச் சமீபத்தில்தான். அதுவரை அவர்கள் மீது ஒரு விலக்கத்தைத்தான் ஊடகங்கள் /திரைப்படங்கள் பதிவு செய்திருந்தன. பொதுமக்களிடமும் அவர்கள் மீது அமெரிக்க மாப்பிள்ளை போன்ற ஏளனமும், மனதளவில் ஒருவித எதிர்ப்பும் இருந்தன.  இன்று அந்த சூழல் மாறியுள்ளது.  உங்களுடைய ஆரம்பகால கதைகளில் (உதாரணமாக சிலிக்கான் வாசல்) அது உருவாக்கும் மன அழுத்தம் அங்கு…




Read more »

ஊருணிக்குள் விழுந்த பாதரட்சை – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

By |

செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டிருக்கும்போது பெரும் கூச்சலாக எதிர்த் திண்ணையி இருந்து எழுந்தது. ‘லேஞ்சியும் வேணாம். மசிரும் வேணாம். எளுந்து போலெ ‘ மொட்டையன் தலையைப் பின்னால் வலிக்க, யாரோ அவனுக்கு முன்னால் பரிதவிப்பும் பதட்டமுமாக நின்று அவன் தலையில் பரிவட்டம் கட்ட முனைந்து கொண்டிருந்தான். தம்பி, நான் வரத் தாமதமாயிடுச்சு. நெசந்தான். பாளாப் போன வயித்துக் கடுப்பு. நெலப் படி தாண்டினாலே வேட்டி நனைஞ்சு போய் நாய் மாதிரிக் கிடந்தேன் மூணு நாளா. மருதையன் போய்ச்…




Read more »

லேஞ்சி கட்ட வந்தவர்கள் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

By |

காலையில் ஆரம்பித்தது உச்சிப் பொழுதுக்கு அப்புறமும் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பங்காளிகளை புஸ்தி மீசைக் கிழவன் சம்பாதித்து வைத்து விட்டுப் போயிருக்கிறான். புதுசாக மொட்டை போட்ட தலையில் நரம்பு புடைத்துத் தெரிய காதெல்லாம் முடியோடு கிழவனினின் மூத்த மகன் உட்கார்ந்திருந்தான். மீசையை மழித்து, மொட்டைத் தலையோடு அவன் ராஜாவின் அன்ன சாத்திரத்தில் ராத்திரிச் சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் பரதேசி போல் இருந்தான். அவனா பரதேசி ? தாமிரவருணிப் பக்கம் காணி காணியாக நிலம் நீச்சும் தென்னந்தோப்பும், வாழைத்தோட்டமும்…




Read more »

ஆலப்பாடு சுவதேசி வயசன் பறந்து போன வர்த்தமானம் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

By |

அப்போ நானும் சிநேகாம்பா தோப்பனார் போலப் பறக்கட்டுமா ? விசாலாட்சி திரும்பச் சிரித்தாள். அந்த வயசன், குப்புசாமி அய்யன் ஊருக்குப் போய்த் திரும்பி வந்த இந்த நாலு வாரத்தில் ஒரு தொந்தரவாக மாறியிருக்கிறான். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தது. நேற்றைக்கு மதியம் வீட்டில் நுழைந்தபோதே குப்புசாமி அய்யன் பார்த்தது தான் அது. என்ன கிரகசாரமோ என்று யோசித்தபடி செம்பில் தண்ணீர் சேந்தி உடம்பு கழுவிக் கொண்டிருந்தபோது, வயசன் தோட்டக் கோடியில் மிதந்தபடி சுற்றி மூத்திரம் ஒழித்துக் கொண்டிருந்தான்….




Read more »