Archive For நவம்பர் 28, 2022

நண்டுமரம் சிறுகதைத் தொகுதியிலிருந்து ‘கூப்பிடறாங்க சார்’

By |

நண்டுமரம் சிறுகதைத் தொகுதியிலிருந்து ‘கூப்பிடறாங்க சார்’

கூப்பிடறாங்க சார்   நீங்க இதை நம்பப் போறது இல்லேன்னு தெரியும். வருஷம் 2000 ஞாபகம் இருக்கா? அப்போ நான் அமெரிக்கா வாசி. கலிபோர்னியாவிலே இருந்தேன். கால் இல்லாமக் கூட கலிபோர்னியாவிலே இருந்துடலாம். கார் இல்லாம முடியாது. கார் இல்லாதது தானே என் பிரச்சனை.   எனக்கு கம்ப்யூட்டர் புரகிராமிங் சுமாரா வரும். தெக்ககத்தி ஆளு. ஏதோ படிச்சு ஏதோ எழுதி பாஸ் செஞ்சு, காரைக்குடி காலேஜ்லே பி.ஈ வாங்கி கையில் எடுத்துக்கிட்டு, கம்ப்யூட்டர் கம்பெனியிலே செருப்புத்…




Read more »

பரபரப்பான ப்ரஸீல் – ஸ்வீடன் கால்பந்தாட்டப் போட்டி

By |

பரபரப்பான ப்ரஸீல் – ஸ்வீடன் கால்பந்தாட்டப் போட்டி

பந்து   கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது. விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தி, வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா? ஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு சங்கடம்….




Read more »

வாளி

By |

வாளி

                  வாளி             குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது.   செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே இரைச்சலும், வியர்வையும் பக்கத்தில் நின்றவன் மூச்சில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த பூண்டு நெடியும் அவனைக் குழப்பமடைய வைத்திருந்தன. போதாக்குறைக்கு நடத்துனர்.   மீசை மழித்த அவர் முகம் கண்டிப்பையும், எந்த ஒழுங்கீனத்தையும் பொறுத்துக் கொள்ளத் தன்னால் முடியாது…




Read more »

கருப்பு வெள்ளையில் ஒரு படம் – சிறுகதை (நண்டுமரம் தொகுப்பில் இருந்து)

By |

கருப்பு வெள்ளையில் ஒரு படம் – சிறுகதை (நண்டுமரம் தொகுப்பில் இருந்து)

கருப்பு வெள்ளையில் ஒரு படம்                             நாயர்.   யாரோ கூப்பிட்டார்கள். அவனைத்தான்.   நாயர் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று இந்தப் பட்டணத்தில் குடியேறும் எல்லா மலையாளிகளையும் பழக்கியிருக்கிறார்கள். அல்லது அவரவர்களாகவே வந்த நாலைந்து நாளில் புரிந்து கொள்கிறார்கள்.   ‘டீ வேணுமா, நாயர்?’   கூப்பிட்ட சின்னப் பையன் கையில் இரும்பு வளையத்தில் தூக்கு மாட்டித் தொங்கிய டீ கிளாசுகளும், அலுமினியத் தட்டில் எண்ணெய் மினுக்கோடு வடையுமாக நின்றான்.   ‘அப்படிப் போடு….




Read more »

இன்னொரு குதிரை – சிறுகதை

By |

இன்னொரு குதிரை –  சிறுகதை

இன்னொரு குதிரை   குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான்.  அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்.   வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.   கங்கையூரில் நகரசபை தேர்தல்…




Read more »

சகர் – சிறுகதை

By |

சகர் – சிறுகதை

சகர்   எதிர் ஃப்ளாட் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கும் முன்பே வாசல் கதவு மூடி விட்டது.  சலிப்பு. ஆபீசுக்குக் கிளம்பும் அவசரம். சமையல்கட்டில் கத்தரிக்காய் வதக்கல் கரிந்து போகிற பயம். இதுவரைக்கும் எத்தனை பேர் கதவைத் தட்டித் திறந்து கருகின வதக்கலை குப்பையில் போட வேண்டி வந்ததோ.   எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால் வருகிறவர்கள்…




Read more »