Archive For பிப்ரவரி 5, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – A levitating hermit and a plunderer

By |

Excerpt from my forthcoming novel MILAGU அடுத்த தெருவில் தேளோ பாம்போ தட்டுப்படும் முன்னால் மரக்கட்டைகளும் கயிறுகளும் மரப்பெட்டிகளும் இல்லாததை அவசரமாகச் சோதித்தார்கள். திண்ணையில் நின்று கதவை உடைக்கும்போது ஏற்கனவே திறந்திருந்த கதவு வழியாக உள்ளே இருந்து வவ்வால்களும் ஆந்தை ஒன்றும் நான்கு மெலிந்த பாம்புகளும் அவசரமாக வெளியே வந்தன. இந்த வீட்டையும் நிராகரித்து கெலடிப் படையினர் வெளிவந்தபோது எதிர்வீடு ஒரு கல்லோ மண்ணோ இல்லாமல் இருந்ததைப் பார்த்து இங்கே இருந்து அங்கே நாய் மாதிரி…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – The vaulted treasure and a nest of scorpions

By |

An excerpt from my forthcoming novel MILAGU சதுர்முக  பஸதியின் வெளித் திண்ணைகள் நான்கு பக்கக் கதவுகளையும் ஒட்டி உயரமும் தாழ்வுமாக சாய்ந்து நிறுவப்பட்டிருந்தன. கதவை உள்ளே இருந்து திறந்ததும் வலமும் இடமும் நிற்கும் திண்ணைகள் இவை. வழிப்போக்கர்கள் வாசலுக்கு வந்து, கதவு அடைத்திருந்தாலும் திண்ணையில் நீட்டிப் படுத்து ஓய்வு கொள்ளலாம். கதவுக்கு வலமும் இடமும் திண்ணை இருப்பதால் இரண்டு வழிப்போக்கர்கள் ஒவ்வொரு கதவையும் ஒட்டிப் படுத்துக் கிடந்து ஓய்வு கொள்ள முடியும். ஓய்வு எடுப்பவர்கள்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – The old order changeth

By |

An excerpt from my forthcoming novel MILAGU சென்னபைராதேவியின் இந்த ஆட்சி தொடர வேண்டாம் என்பது விஜயநகரப் பேரரசின் விருப்பமும் ஆகும். சென்னபைராதேவி மகாராணி இனி என் மற்றும் பில்கி அரசர் திம்மராஜு கவனத்தில் ஓய்வெடுப்பார். எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கெருஸொப்பா நாடு ஒரு பெரும் பகுதியாகவும் ஒரு சிறு பகுதியாகவும் நிர்வாகச் சீரமைப்பு நிமித்தம் பிரிக்கப்படும். நானும் பில்கி அரசர் திம்மராஜுவும் அந்த சீரமைப்பை எடுத்துக்கொண்டு நிறைவேற்ற சோமேஷ்வர் கோணேஸ்வர் மகாவீரர்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – This is how Keladi Venkatappa usurped Gerusoppa throne

By |

An extract from my forthcoming novel – வெளி மண்டபத்தில் ஓவென்று பெரும் சத்தம். கெலடி மாநிலப் படைத் தலைமைத் தளபதிகளும், சேனாதிபதிகளும் மிடுக்காக நடந்து வர, நடுவே கம்பீரமாக நரை மீசையை நீவிக்கொண்டு கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் வந்து கொண்டிருந்தார். அத்தனை பேரும் உள்ளே நுழைந்தபின் வாசல் கதவுகள் உள்ளிருந்து தாளிடப்பட்டன. கெலடிப் படைகள் கோட்டைக்குள் அரச மாளிகை வாசலில் அணிவகுந்து நின்றதை உள்ளே இருந்து பார்க்க முடிந்தது. அவர்கள் சத்தத்தையும் கேட்க…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Chennabadhradevi held in captivity in her own fort

By |

an excerpt from my forthcoming novel MILAGU அகநாசினி நதிநீர் நிரம்பிய குளத்தைப் பார்த்தபடி இருந்தது விருந்தினர் அறை. போர்த்துகீஸ் இளவரசர், கோழிக்கோட்டு சாமுத்ரி மகாராஜா, மதுரை  மன்னர், நிர்மல முனிவர், உள்ளால் மகாராணி அப்பக்கா என்று கெருஸொப்பாவின் அதிமுக்கிய விருந்தாளிகள் வந்து வெவ்வேறு கால கட்டத்தில் தங்கியிருந்த அழகான, பெரிய அறை அது. முழுக்கவோ வரிசையாகப் பாதி கவிழ்த்தோ ஜன்னல் கண்ணாடிகள் வெனீஷியன் ப்ளைண்ட் அடுக்காக ஒவ்வொரு ஜன்னலும் வடிவெடுத்திருப்பது இந்த அறையிலும், அரசியின்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – உத்தேசமான முன்னுரை – A probable foreword

By |

the first draft of the foreword of my forthcoming novel MILAGU கொங்கணக் கடற்கரைப் பயணம் போய் வருடக் கணக்கில் ஆகிவிட்டது. மிளகு, ஏலம், கிராம்பு, லவங்கம் என்று மணக்கும், மழை ஓய்ந்த ஈரமண் அந்தக் கடலும் கடல் சார்ந்த நெய்தலும், பசுமை கொஞ்சும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும். மிளகு, அதுவும் மிகத் தரமான மிளகு விளைவித்து, ஐரோப்பிய நாடுகளைக் கவர்ந்திழுத்துக் கூட்டிவந்து, என்ன விலையும் கொடுத்து வாங்க வைத்த நிலப் பிரதேசம்…




Read more »