Archive For ஜனவரி 26, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Thus Reached Ambalapuzha through Gerusoppa across time space continuum

By |

An excerpt from my forthcoming novel MILAGU ரயில் நின்று தாமதித்து மறுபடியும் நகரும் முன் இந்தப் பரமனும் அந்த ரயில்பெட்டியில் ஏறிக் கொள்கிறார். வந்த பரமன் கம்பார்ட்மெண்டில் கூட்டத்துக்கு நடுவே  நின்றுகொண்டு மேலே தொங்கும் வாரை இழுத்துப் பிடித்தபடி கால் மாற்றும் போது லெனின் கடிதங்கள் தரையில் விழுகின்றன. பக்கத்தில் நின்ற வயதான மராட்டியர் குனிந்து அதை எடுத்துத் தலைப்பைப் படித்து விட்டு வந்த பரமனிடம் கொடுக்கிறார். லெனின் வீட்டை விட்டு வெளியே போயிருந்தாரா?…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Paraman meets Paraman who meets Paraman who is himself who..

By |

An longish extract from my forthcoming novel MILAGU காட்சி கலைந்து சதுர்முக பசதி சுழல்கிறது. ஓரமாக அடித்துச் செல்லப்பட்ட பரமன் சுவரை ஆதரவாகப்  பற்றிக்கொண்டு எழுந்து நிற்கப் பார்க்கிறார். காட்சி நிலைக்க, ஆப்பிரிக்க நாட்டு அரசாங்க அலுவலகம். வெளியே பெயர் எதுவும் போடாத அங்கே வாசலில் கடைசிப் படியில் உட்கார்ந்திருப்பதும் பரமன் தான். இரண்டு தாங்குகட்டைகள் நிறுத்தி வைக்க அவற்றை ஊன்றி நடக்க முயலும் அந்த இன்னொரு பரமன் தத்தித் தத்தி நடக்கத் தொடங்க,…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Paramans of the Multiverse, line up. You have nothing to lose

By |

An excerpt from my forthcoming novel MILAGU பரமன் வெளியே வரும்போது யோசித்தபடி ஓடத் தொடங்கினார்.  தெருக் கோடி பெரிய மைதானத்தில் விரிந்தது. பிரகாசமாக தீபம் இன்னும் எரியும் சதுர்முக பசதி வெற்றிடத்துக்கு நடுவே பிரதானமாக எழும்பியிருந்தது. அது ஆடவில்லை. சுழன்று கொண்டிருந்தது. பரமனுக்கு திடீரென்று தோன்றியது இந்த பசதியிலும் இதன் சுழற்சியிலும் தான் பரமன் திரும்ப அவர் காலத்துக்கும் வசித்த பூமிக்கும் போக வழி இருக்கும். அது எந்தப் பிரபஞ்சத்தில்? அவர் தான் பரமனா,…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – a poignant farewell and the Colonel’s retreat

By |

An extract from my forthcoming novel MILAGU வீராயி ஓரமாகக் கிடந்த பிடவையை உடுத்திக் கொண்டு பரமனிடம், போகலாம் என்றாள்.  யாரும் இல்லே எல்லாரும் போய்ட்டாங்க என்று இன்னொரு தடவை சொன்னார் காரியகர்த்தா. பரமன் வெளியே கிளம்பியபோது வீராயியும் அவரோடு நடந்தாள். மனதே இல்லாமல் அவள் கூட வரச் சம்மதித்தார் பரமன். எல்லோரும் வந்தாங்க யாரும் இல்லே இப்போ என்றார் காரியகர்த்தா கடைசியாக. வேட்டி வேணாமா என்று பரமனிடம் கேட்டாள் வீராயி. ஒன்றும் பதில் சொல்லவில்லை…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Veerayee makes a comeback only to bid goodbye

By |

An extract from my forthcoming novel MILAGU வயதான சத்திரக் காரியகர்த்தா மட்டும் வாசல் படியில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு சந்தோஷம் ஏற்பட்டது பரமனுக்கு. மகாதேவரே, தனியாக என்ன செய்யறீங்க இங்கே? பரமன் கேட்டபடி கிழவரின் சிலீர் எனக் குளிர்ந்த விரைத்த கையைப் பற்ற அவர் பதற்றத்தோடு தன் கரத்தை உதறி யாரும் இல்லே போங்க போங்க என்று திருப்பித் திருப்பிச் சொல்கிறார். உள்ளே சோறு இருக்கா, நேத்து வடிச்சதுன்னாலும் சரிதான். பரமன் கேட்க, காரியகர்த்தா மறுபடியும்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Child’s day out in a deserted town

By |

An excerpt from my forthcoming novel MILAGU ஜெருஸூப்பா பிற்பகல் மஞ்சுநாத். மஞ்சுநாத் ஓடி விளையாடிய தெருதான் இது. சதா பாட்டுச் சத்தமும் பேச்சொலியும் கேட்டுக் கொண்டிருக்கும் பெரிய வீடுகளும், அங்கங்கே ஜவுளித் துணியும், சந்தனமும் அத்தரும், மாமிசமும், பழங்களும் விற்கும் கடைகளும் அம்மாவின் இனிப்பு மிட்டாய்க்கடையும் இருக்கும் ராஜவீதி இது. பழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்ததில் மஞ்சுநாத்துக்கு ஒரு சின்ன உற்சாகம் ஏற்பட்டது. இதோ வெற்றிலைக்கடை. அதற்கு அடுத்து மிட்டாய்க்கடை. மிட்டாய்க்கடை படி ஏறும்போது…




Read more »