Archive For நவம்பர் 8, 2022
விரல் – சிறுகதை இரா.முருகன் சந்தன் என்ற சந்தான கோபாலன் அரங்கத்துக்குள் நுழைந்த போது, ’மாதே மலயத்வ பாண்டிய சம்ஜாதே’ கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் வர்ணம். மத்ய ஸ்தாயியில் ஜலஜலவென்று ஒன்றுக்கு இரண்டு சிட்டை ஸ்வரமாகப் பாடும்போது நர்மதை நதிப் பாலத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் முன்னேறிக் கொண்டிருப்பது போல் பிரவாகம். அதுவும் ராஜாராமன் பாடினால். பாடிக் கொண்டிருக்கிறார். முதலிலிருந்து கேட்கக் கொடுத்து வைக்கவில்லை சந்தனுக்கு. வர்ணத்தில் கச்சேரி ஆரம்பித்திருப்பாரா அல்லது வாதாபி கணபதியிலா?…
‘தினை’ நாவல் கிட்டத்தட்டப் பாதி எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரியில் நிறைவடையும். எடிட்டிங்க் நிறையத் தேவைப்படும் புதினம் இது.
கடற்கரை. சென்னை கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய, அழகிய கடற்கரை. நாங்கள் சென்னைக்கு இன்பச் சுற்றுலா சென்றபோது, கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சமாதி என்று பல இடங்களுக்குப் போனோம். கலங்கரை விளக்கம் என்பது கப்பல்களை வழிப்படுத்தும் விளக்கு அமைந்த, கடற்கரையில் உயர்ந்து நிற்கும் கட்டிடமாகும். அங்கே யாரும் குடியிருக்க முடியாது. வாசலில் எருமை மாடு கட்டிப் பால் கறக்க முடியாது. முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டை மூடி வைத்துவிட்டுக் கடற்கரை மணலில் நடக்கிறாள். கையில்…
ராவுத்தர் பேக்கரி ஸ்லைட். தம்பிக்கு ராவுத்தர் பேக்கரி பன்ரொட்டி ரொம்பப் பிடிக்கும். முத்தம்மா டீச்சர் முதல் மாதச் சம்பளத்தில் அவனுக்குப் பன்னும் கேக்கும் வாங்கிப் போனாள். எடுத்துச் சாப்பிடச் சாப்பிடப் பரிவோடு பார்த்துக் கொண்டு.. ‘அக்கா.. பன்னு சாப்பிடறியா?’ பின் வரிசையிலிருந்து தம்பி குரல். ‘சும்மா இருக்க மாட்டீங்களா.. பிள்ளைக்குன்னு வாங்கியாந்திருக்கேன்.. அக்கா அக்கான்னு உசிரை விடறீங்களே.. எங்கே…நம்ம புள்ளைக்கு அரை பவுன்லே மோந்திரம் பண்ணிப் போடச் சொல்லுங்க பார்ப்போம்…
லண்டன் மாநகரில் இருக்கும் போது பணிக்குப் போக வேண்டாத ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியான நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வேன். அதன் கண்ணிகள் ட்யூப் என்ற பாதாள ரயில் சேவை சார்ந்தவை. கார்டியன் தினசரிப் பத்திரிகை வராத தினம் என்பதால், சண்டே அப்சர்வரை மேய்ந்து விட்டு கென்சிங்க்டன் கார்டனில் காலாற நடந்து, எர்ல்ஸ் கோர்ட்டில் வண்டி ஏறி, ஸ்ட்ராண்டிலும் கோவண்ட் கார்டனிலும் சுற்றி அலைந்து, ஈஸ்ட் ஹாம் சரவண பவனில் தென்னிந்திய உணவு உண்டு, பிக்கடலி வீதி வந்து…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 6 கடைசி ஒத்திகைக்கான ஞாயிற்றுக் கிழமை, காலையிலிருந்தே ஜோதி அக்கா அழுது கொண்டிருந்தாள். புகுந்த வீட்டிலிருந்து பிரசவத்துக்கு வந்து ஒரு மாதமாகிறது. வீட்டுக்காரனோ வேறு யாருமோ வந்து பார்க்கவில்லையாம். சீர் செனத்தியில் குறைச்சலாம்.. ‘பொம்பளைப் புள்ளே… சின்னவ இவ தலையெடுத்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கு..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா பொறுத்துக்குங்க சம்பந்தி.. அடுத்த மாசம் லோன் போடப்…