Archive For அக்டோபர் 29, 2022
‘என்ன டீச்சர், இன்னும் எத்தனை நோட்டு பாக்கி இருக்கு?’ கதிரேசன் வாத்தியார் குரல். மேசைப் பக்கம் மசங்கலாகத் தெரியும் முகம். இவரெங்கே வந்தது? உயிரோடு தான் இருக்கார.. இல்லே, மாப்பிள்ளை மாதிரி… முத்தம்மா டீச்சர் அவசரமாகப் புடவைத் தலைப்பைச் சரி செய்யக் கையை வைத்து, சும்மா விட்டுவிட்டு, புன்சிரிப்போடு, திருத்தி முடித்த நோட்டில் இனிஷியல் போட்டாள். ஓரமாக, சிவப்பு மையால் ‘நன்று’ என்று எழுதினாள். ‘முத்தம்மா டீச்சர் கையெழுத்தும் முத்து…
‘பினாங்குலே என்னடா யாவாரம்.. பேதியிலே போறவனே..’ அம்ம குரல் திரும்பப் படத்தில் இருந்து வருகிறது. ‘தோசைக் கடை.. எலக்டிரிக் அடுப்பிலே தோசை சுடறது.. ஒரே கல்லுலே ஆறு தோசை போடலாம்..’ ‘மட்டன் கவாப்பு கூட போடறோம்..’ எலிசபெத் முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள். ‘கடையை வேலையாளுங்க கிட்டெ விட்டுட்டு வந்திருக்கோம்.. அடுத்த வாரம் திரும்பிடணும்..’ முத்தம்மா திருத்தி முடித்த காம்போசிஷன் நோட்டுகளை ஓரமாக நகர்த்தினாள். ‘இன்னும் ஒரு…
இயற்கை மனிதனுக்கு அளித்த செல்வங்களில் மகத்தானவை நிலமும் நீரும் ஆகும். நிலத்தில் வளரும் செடிகொடிகளும், மரங்களும், மனிதனின் பசியைப் போக்க உணவையும், சுவாசிக்க நல்ல காற்றையும் வழங்குகின்றன. நிலத்தின் அடியிலும் இயற்கை பல்வேறு கனிம, படிவ வளங்களை வெகுமதியாகக் கொடுத்துள்ளது. நான் அவற்றில் ஒன்று. என் பெயர் நிலக்கரியாகும். முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டு திருத்திக் கொண்டிருந்தாள். ஏழாவது வகுப்புப் பாடம். முப்பத்தாறு நோட்டுகளில் நிலக்கரி தன் வரலாறு கூறுகிறது. கண் மெல்ல…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 4 எல்லோருக்கும் நாற்காலி டிக்கெட். அலமேலம்மாக் கிழவி கூட கதவோரம் நாற்காலியைக் கோணலாக இழுத்துப் போட்டுக் கொண்டு வாயில் புகையிலைக் கட்டையைக் குதப்பியபடி கெத்தாக உட்கார்ந்திருந்தாள். ஒரு பெரிய பொட்டலம் நிறைய மட்டன் கவாப்பும், மீன் கவாப்பும் வாங்கி வந்து, படம் ஆரம்பிக்க முன்னால் எல்லோருக்கும் கொடுத்தார் மாப்பிள்ளை. ‘கொடுங்க..கொடுங்க.. நாளைக்கு ராசாத்தி கஜானாவைப் பிடிச்ச பிறகு சுக்கு…
முத்தம்மா டீச்சர் அடிக்கக் கை ஓங்கினாள் செல்லமாக. ‘இதைச் சொல்லத்தான் வந்தீங்களா?’ முத்தம்மா சோப்புத் துண்டை வயிற்றோடு அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். ‘அதில்லே.. ஞாயித்துக்கிழமையாச்சே.. கவிச்சி ஏதும் சமைக்கலியா?’ மாப்புள்ளைக்குக் கவிச்சி ரொம்ப இஷ்டம். அதுவும் மட்டன் கவாபு. ‘கவிச்சியா? சமைச்சா என்ன கொடுப்பீங்க?’ பின்னாலிருந்து தழுவ வருகிற கைகள்.. கண்ணாடியில் நீராவி படிந்து உடம்பு தெரிய மாட்டேன் என்கிறது. ‘சாயந்திரம் படத்துக்கு கூட்டிட்டுப் போறேன்.. உனக்குப்…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 3 முத்தம்மா டீச்சர் வென்னீரை எடுத்து வைத்துக் குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்டபோது அங்கே ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளை ராஜு… ஆலங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டு .. காறிக் காறி உமிழ்ந்து கொண்டு.. குறக்களி காட்டுகிறது மனது. பின்னால் வந்து புஜத்தைப் பற்றும் கைகள் நாற்பது வருஷம் முந்திய வலுவோடு ‘முத்தம்மா.. முத்துன்னு கூப்பிடணும் இல்லே.. என்ன…