Archive For அக்டோபர் 6, 2022
நண்பர்களுக்காக திரு கமல் ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் காட்சியாக நேற்று ‘பொன்னியின் செல்வன்’ பார்க்க வாய்ப்பு கிடைத்தது. குரசோவாவின் ’காகேமூஷா’ திரைப்படத்தை நினைவு படுத்தும் வெளிப்புற இரவு நிகழ்வாக செறிவான Mise-en-scène அடிப்படையில் தொடங்கி எழுந்து வருகிறது பொ.செ. திரையில் கால் இருட்டு என்றால் அரை இருட்டாக்கித் தோன்ற வைத்து, கூடவே, கிசுகிசுப்பு ஒலியையும் கூச்சலாகப் பெருக்கித் தரும் ஐமேக்ஸ் திரையரங்கு படத்துக்குக் கூடுதல் பரிமாணம் சேர்த்திருந்தது. திரைப்படம் பற்றி எல்லோரும் எழுதி…
‘அம்மா …. தினம் கஞ்சி தானா? நல்லாவே இல்லேம்மா….’ ‘நாளைக்கு சோறு பொங்கலாம்… அரிசி வருது…’ ‘அம்மா…’ ‘என்னடா?’ ‘இந்த எடத்தை ஏன் காடி கானாங்கறாங்க?’ ‘அந்தக் காலத்துலே சாரட் வண்டி நிக்குமாண்டா இங்கே..’ ‘யாரு அதிலே போவாங்க?’ ‘பெரிய வீட்டுலே இருக்கறவங்க’ ‘நாமளும் பெரிய வீட்டுலே போய் இருந்தா என்னம்மா?’ ‘ஏண்டா இந்த எடத்துக்கு என்னடா? நம்ம நிலமைக்கு இதாவது…
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 5 அ இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு சமைக்கவும் தெரிந்திருக்கிறது. கரணை கரணையாகக் கையும் காலும் இருக்கப்பட்ட மனுஷன். மனுஷர். அதை வைத்துக் கொண்டு பச்சைக் கொடியும் சிவப்புக் கொடியும் மாறி மாறிக் காட்டலாம். இப்படி குழம்பு செய்ய புளியை மய்ய மசியக் கரைக்கலாம். படம் எல்லாம் ஒண்ணும் போட வேண்டாம். சர்க்கார் வீட்டில் பெண்டாட்டிக்கு அலமாரியில் புடவை மடித்து வைக்கலாம். காணாமல் போன பவுடர் டப்பா மூடியைய்த் தேடி…
ராத்திரி வண்டி குறுநாவல் பகுதி 4 ஆ வீட்டைத் துறந்து போட்டுட்டு இவனையும் தனியா விட்டுட்டுப் போகணுமா… கணபதி இருந்தாலாவது.. அட நூறு வயசுய்யா உனக்கு கணபதி… ‘கொஞ்சம் சார் கூடப் பேசிக்கிட்டு இப்படி வாசல்லே இரு கணபதி… நான் இதோ வர்றேன்..’ கணபதிக்கு அந்த சித்திரக்காரனைப் பார்க்கும்போதே சிரிப்பு வந்தது. ஒரு மாதிரிப்பட்ட ஆள். குஷால் பேர்வழி..நாலு பேர் பார்க்கவே மொட்டக் கட்டயாப் பொம்பளை பட போடறவன் இன்னும் என்னவெல்லாம்…
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 4 அ சீவகன் எல்லாப் படங்களிலும் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்தான். மஞ்ச மசேல்னு, பச்சை மினுக்கிக்கிட்டு… நடுவிலே நடுவிலே கசாப்புக்கடை சுவர் மாதிரி சிவப்பு வேறே தெளிச்சு இருக்கு… சொல்லி வச்சாப்பிலே எல்லாம் இருளோன்னு கிடக்கு.. அப்புறம் எல்லாத்திலேயும் ஓட்டை உடசல் கடியாரம், மரப்பெட்டி, பிரம்பு பிஞ்சு தொங்கற நாற்காலி… ஒண்ணுலே ஒரு பொம்பளை முகத்தைத் தலை முடியாலே மறச்சுக்கிட்டு மாடி ஏறிட்டு இருக்கா. ஜன்னலுக்கு…
‘வடக்கே எல்லாம் டீத்தூளைஉம் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’. ’நல்லா இருக்குமா என்ன அது?’ ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான். ‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’ ‘வாரணாசின்னா காசிதானே? பெரிய கோயிலெல்லாம் இருக்கு இல்லே?’ ‘நான் அங்கே மசான கட்டத்தைத் தான் வரஞ்சுக்கிட்டிருந்தேன். எரிச்சு எரிச்சு கங்கையிலே விடுவாங்க. படிக்கட்டு எல்லாம் சாவு பூசிக்கிட்டு எப்பவும் வைராக்கியத்தோட கிடக்கும்’. ‘பார்க்க எப்படியோ…