Archive For பிப்ரவரி 28, 2022
Awesome! Fascinating! எழுதுவது தவமோ என்னமோ, வாசிப்பதையும் தவமாக நிகழ்த்தும் வாசக நண்பர்களை அளித்த இறைவனுக்கு நன்றி. திருமதி உமா ஸ்ரீதரன் அவர்கள் 1189 பக்கங்கள் கொண்ட ‘மிளகு’ நாவலை 3 நாளில் வாசித்து முடித்திருக்கிறார். மற்ற அலுவல்களுக்கு இடையே 49 மணி நேரமும் சில மணித்துளிகளும் செலவழித்து இந்த வாசிப்பை முழுமையாக்கியுள்ளார். ————————————————————————————————— Uma Sridharan 2 மிளகு. புத்தகத்தை இஷ்டப்படி எல்லாம் வைத்துக் கொண்டு படிக்க முடியாது. ஒரு மேஜையில் வைத்து மரியாதையாக படிக்க…
ராத்திரியில் உறங்கும் முன் ஒரு கதை சொல்ல யாராவது வேணும். அது பரமனப்பாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றான் குழந்தை . கறுப்பன் என்பதால் கோச் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்ட ஒரு உயரமான மெலிந்த மனிதனைப் பற்றி நிறையக் கதை சொல்லியிருக்கிறார் பரமன் அப்பா. சமுத்திரத்தில் இருந்து உப்பு எடுத்துக் காய்ச்சி உபயோகிக்க வரி ஏன் தர வேண்டும், மாட்டேன் என்று அமைதியாக யுத்தம் செய்தவனாம் அவன். அரை நிர்வாணப் பக்கிரியாம். அவனையும் அவன் சகாக்களையும்…
நண்பர் திரு காளிபிரசாத் ரங்கமணி ஆரம்பித்த வேகத்தில் கடகடவென நூறுபக்கங்கள் கடந்தன. பழைய காலக் கதையில் திடீரென முன்னோக்கி வந்து ஏற்கனவே நன்கு பரிச்சயமான திலீப், அகல்யா, கொச்சு தெரசா பரமேஸ்வரனின் நினைவுகள்… அது ஒரு சர்ப்ரைஸ்.. போகிற வேகத்தில் மூன்று நாட்களில் படித்து விடுவேன் என நினைக்கிறேன். .. மிளகோடு துவங்கியுள்ளது இவ்வருட புத்தக கண்காட்சி புது வரவுகளின் வாசிப்பு நண்பர் மீனாட்சிசுந்தரம் முரளி நானும் வாங்கி வாசிக்க ஆரம்பித்து உள்ளேன். மனதிற்கு உகந்த எழுத்தாளர்….
ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. நாவல் சென்னை புத்தகக் கண்காட்சி 2022 கிழக்கு பதிப்பகம் அரங்கில் கிடைக்கும் முரட்டாண்டி சாவடி வந்தாகி விட்டது. அடங்கொப்.. துயுப்ளே பேட்டை வந்தாச்சு. ”துரை உங்களை உக்கார சொன்னார்” என்று பாரா காவல் வீரர்களின் தலைவன் கிரிமாசி பண்டிதன் சொல்லி விட்டுத் திரும்பிப் போனான். துரை விடிகாலையிலேயே இங்கே கிளம்பி வந்துவிட்டார் போல. கோயிலுக்குப் போய் பூசை வைக்கிற சீலத்தை என்ன காரணமோ இந்த வாரம் வேண்டாம்…
an excerpt from my novel RAMOJIUM – novel available in Kizhakku Padhipagam stall in Chennai Book Fair 2022 முரட்டாண்டி சாவடி என்று சொல்லாதே என துரை கட்டளையிட்டால் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே. வீட்டுக்குள் வேணுமானாmல் முரட்டாண்டி, வரட்டாண்டி, பரட்டாண்டி எதுவும் சொல்லிக் கொள்ளட்டும். வெளியே வந்து, ஊர்ப் பெயரைத் துரை கேட்டால் அவன் ஆணைப்படி தியூப்ளே பேட்டை என்று சொல்ல மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? அந்த மனுஷனைப் பாவம்…
பெரு நாவல் ‘மிளகு’ வெளியாகியுள்ளது, நேற்று சென்னை புத்தகக் கண்காட்சி 2022-இல். எழுத்து பிரசுரம் – ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் வெளியீடு. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். 10% தள்ளுபடி விலைக்கு வாங்கலாம்.