Archive For பிப்ரவரி 10, 2022
An excerpt from my forthcoming novel MILAGU ஹொன்னாவரில் இருந்து பிற்பகல் நாலு மணிக்குக் கிளம்பியாகி விட்டது. காடும் மலையுமாகக் குறுகத் தரித்த பாதை. சட்டென்று முகம் காட்டிய சிறு அருவியைத் தொட்டு நனைந்து போகிறது அது. வலமிருந்து இடமும் இடமிருந்து வலமும் செங்குத்தாகத் திரும்பி உடனே பாறையை எதிர்கொண்டு அடுத்த உடனடி திருப்பத்தை நிகழ்த்தி காரின் சக்கரங்களுக்குக் கடினமான வேலை தரும் பாதை. எதிரில் வரும் வாகனத்தைப் பிரித்தறிய ஒட்டாமல் சதா பெய்யும் சன்னமான…
An excerpt from my novel MILAGU அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம் ஈலோக கோளம் திரியுன்ன மார்க்கம் அதின்கலெங்காந்து ஓரிடத்திருந்நு நோக்குன்ன மர்தயன் கதயெந்தறிஞ்சு (நாளப்பாட்டு நாராயண மேனோன்) ராத்திரியில் கேட்கும் கவிதை இது. நகர்ந்தபடி சொல்லப்பட்ட கவிதை. வேம்பநாட்டுக் காயலில் இரவு நேரத்தில் அந்த மோட்டார் படகு நிதானமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பிஷாரடி வைத்தியர் என்ற எழுபது வயதான பேராசிரியரும். அவருக்கு அடுத்ததற்கு அடுத்த தலைமுறை இளையோரான கல்பா, மருது, பகவதிக்குட்டி ஆகியோரும், திலீப் ராவ்ஜி,…
An excerpt from my forthcoming novel MILAGU சென்னாவுக்கு அரசவை வரவேற்பு அளித்தபோது மாலை ஆறு மணிக்குக் கூட்டம் முடித்துத் திரும்ப பல பிரதானிகள் மும்முரமாக இருந்தார்கள். சிறுத்தைப் புலி நடமாடும் ராத்திரியாம். ஊருக்குள் சிறுத்தை வருமோ. சென்னா கேள்விக்கு ஒரே பதில் வந்தது. அவர்கள் ஓரிருவரைத் தவிர கெருஸொப்பாவில் வசிக்கவில்லை. ஹொன்னாவரில் வீடும் மாளிகையுமாக இருப்பவர்கள். ஒருவர் கோகர்ணத்திலிருந்து வந்தவர். இத்தனை பேர் ஹொன்னாவரில் இருந்து கெருஸொப்பாவை நிர்வகிக்க முயற்சி செய்வதை விட, சென்னாவுக்கு…
An excerpt from my forthcoming novel MILAGU போன மாதம் உள்ளாலில் இருந்து சென்னபைராதேவியின் சிநேகிதி அப்பக்கா மகாராணி பத்தே பத்து நிமிடம் வந்து சந்தித்து விட்டுப் போனாள். வெங்கட லெட்சுமணனும் வகுளாபரணும் அப்பக்காவோடு வந்து அவளுக்கு மரியாதை செலுத்தி ஏதோ வினோதப் பிராணியைப் பார்க்க வந்ததுபோல் சென்னாவைப் பார்த்துத் திரும்பினார்கள். நீ நல்லா இருக்கியா, ஊர்லே மழை பெய்யுதா, நான் நல்லா இருக்கேன், காலையிலே இட்டலி சாப்பிட்டேன் என்று மிகப் பொதுவான வார்த்தைகளோடு அந்த…
An excerpt from my forthcoming novel MILAGU சென்னபைராதேவி அணிலுக்காகக் காத்திருந்தாள். ராத்திரியில் வரும் அணில் அது. சென்னோவோடு தான் இங்கே எங்கேயோ தங்கி இருக்கிறது. இந்த அணிலோடு அதன் பெண்டாட்டி ஒரு பெண் அணில் உண்டு. பொழுது சாய்ந்த பிறகு வெளியே வராது அது. சதா கர்ப்பத்தில் வயிறு புடைத்து ஊர்ந்து கொண்டிருக்கும் பெண் அணில் பிரசவித்துக் கொஞ்ச நாள் குழந்தை அணில்கள் ஒன்றிரண்டு அப்பா அணிலோடு கூடவே வால் பிடித்துப் போகும். அவையும்…
An excerpt from my forthcoming novel MILAGU ஏமாற்றத்தோடு நடு ராத்திரியில் மைதானத்துக்குத் திரும்பிய கெலடிப் படையினர் மைதானத்தை அடுத்த கோவில் தெருவில் பெரிய வீட்டில் விளக்கு ஒளியும் மனுஷ நடமாட்டமும் இருப்பதைக் கவனித்து அங்கே போக முற்பட்டார்கள். மஞ்சு மஞ்சு என்று கூவியபடி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த ரோகிணி ஓட்டமும் நடையுமாக ஒவ்வொரு அறையிலும் மஞ்சுநாத்தைத் தேடினாள். அவனுக்குத் தெரிந்த இடம் என்பதால் வேறு எங்கேயும் யாரும் தட்டுப்படவில்லை என்றால் இங்கே தான் வந்திருப்பான்…