Archive For மார்ச் 14, 2022
Manthiramoorthi Alagu is with Aathmaarthi RS and ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ குழுவின் சார்பாக நேற்று நடத்திய இணைய வழி கூகுள் மீட் இலக்கியச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் இரா.முருகன் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்கள் அருமையாக ஆய்வு செய்து பேசினார். அவரது உரையானது எழுத்தாளர் இரா.முருகனின் படைப்புகளை அவர் எப்படி அணுகுகிறார் என்பது குறித்தும், தனக்கு முந்தைய எழுத்தாளர்களை இரா.முருகன் எப்படி அவரது பாணியில் தாண்டிச் செல்கிறார் என்பது குறித்தும் விளக்குவதாக…
பெரு நாவல் ‘மிளகு’ அண்மையில் நிறைவு பெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி 2022-இல் முதல் நூறு பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. பதிப்பாளர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ராம்ஜி நரசிம்மன் தெரிவித்த தகவல் இது 1189 பக்கங்களில் விரியும் இந்த நாவல் குறித்த மதிப்பீடுகள் நல்லனவாக அமைந்துள்ளன. நன்றி.
இன்றைக்கு ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2022-இல் பிரமாதமாக அமைந்தது நந்தன் நிலேகனி பங்குபெற்ற The Art of Bitfulness அமர்வு. தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு வீட்டிலிருந்தே அலுவலகப் பணி செய்வது முதல், வீட்டிலிருந்தே உணவுவிடுதியிலிருந்து சுவையான உணவு வரவழைப்பது வரை கைகொடுக்கிறது. சௌகரியம் அதிகமாக அதிகமாக நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் நம் வாழ்க்கையை, நம் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றதும் கூடிக் கொண்டே போகிறது. எப்படி கருவிகளிலிருந்து விடுதலை அடையலாம்? நந்தன் இந்தப் பொருள் குறித்து எழுதிய…
மிளகு மிளகு நாவல் வழி துவங்கியது இவ்வருடத்தின் புத்தக கண்காட்சிப் புதுவரவுகளுக்கான வாசிப்பு. இரா. முருகன் அவர்களின் சிறுகதைகளில் அவர் காட்டும் கணிப்பொறி உலகம் மற்றும் பழைய காலக் கதைகளில் தொடர்ந்து வரும் ஐயனை என்கிற கதாபாத்திரம் பற்றிய சித்தரிப்புகள் நினைவில் நிற்பவை. ஆனால் அவரை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தது அரசூர் வம்சம் நாவல் வழியாகத்தான். ‘அரசூர் வம்சம்’ முதல் ‘வாழ்ந்து போதீரே’ வரை தொடர்ச்சியான வாசிப்பு. இதில் துவக்கமான அரசூர் வம்சம் நாவல் ரகளையானது. அதன்…
நண்பர் ஆர் வி எஸ் எழுதிய ஹரித்ரா நதி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை. 1960-களில் கலைமகள் மாத இதழில் ’எங்கள் ஊர்’ என்ற தலைப்பில் பல துறை சார்ந்த சாதனையாளர்கள் எழுதிய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தபோது அவை வாசகர்கள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. பிறந்து வளர்ந்த ஊரையும், அங்கே என்றோ ஆடி ஓடி ஓய்ந்த பிள்ளைப் பிராயத்தையும் நினைவு கூரும் இந்தக் கட்டுரைகள் பின்னர் புத்தகமான போதும் பெரும் வரவேற்பை அந்நூல் பெற்றது. நாஸ்டால்ஜியா…
மிகுந்த மகிழ்ச்சியோடு இதைப் பதிவிடுகிறேன். என் உற்ற நண்பர் ஜெயமோகன், மிளகு பெருநாவல் குறித்து இந்த மூன்று நாட்களில் இரண்டாம் முறையாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். Very positive, and as a good friend and a discerning peer. அவருக்கு என் நன்றி. eramurukan.in இணையத்தளம் user friendly ஆக இல்லாதது குறித்து அவர் சுட்டிக் காட்டிய குறைகளுக்கு முழுமையாகப் பொறுப்பேற்கிறேன். இணையத் தளம் விரைவில் புது வடிவமைப்பு பெறுகிறது. மிளகு தமிழில் வெளிவந்திருக்கும் குறிப்பிடத் தகுந்த நாவல்களில்…