Archive For மே 14, 2022
என் வாசகர்களும் நானும் என் புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்த ஒரு வாசகர் சொன்னார், ‘ரெண்டு நாளா இந்த புத்தக வேலையிலே தான் இருந்தேன்’. பதிப்பாளரின் அலுவலகத்தில் அவரைப் பார்த்த நினைவு இல்லாததால், ‘என்ன மாதிரி வேலை?” என்று கேட்டேன். ‘இது வாராவாரம் திண்ணை பத்திரிகையோட இண்டர்நெட் தளத்திலே வந்துச்சு இல்லே? நூற்று நாலு அத்தியாயமும் தேடி எடுத்து அதே ஆர்டர்லே கட் அண்ட் பேஸ்ட் செஞ்சு எம்.எஸ் வேர்ட் ஃபைல் ஓப்பன் பண்ணி சேர்த்து வச்சுக்கிட்டேன்….
மே 2022 அந்திமழை மாத இதழில் பிரசுரமாகியுள்ளது கர்லா இரா.முருகன் போன வாரம் கர்லாக்கட்டை கந்தசாமி வாத்தியார் கைலாசம் புகுந்தார் என்று கலிபோர்னியா சான் ஒசே நகரத்தில் இருந்து செய்தி வந்தது. அனுப்பியவன் வெங்கி. எழுபது வயதில் என்னைப் போல செய்திகளுக்காகக் காத்திருந்து வந்ததும் இன்னும் பத்து பேருக்கு ஒலிபரப்பி, பேசி, சமூக ஊடகத்தில் பகிர்ந்து ஒரு நாள் முழுக்க வாட்ஸ் அப் அரட்டை அடித்து உறங்கி அடுத்த நாளுக்குக் கடந்து போகிறதைச்…
’புரவி’ இலக்கிய மாத இதழ் இரா.முருகன் நேர்காணலில் இருந்து – (மே 2022 இதழ் -நேர்கண்டவர் காளிபிரசாத்) : இன்றைய இலக்கிய போக்கு குறித்த உங்கள் பார்வை / விமர்சனம் என்ன? உங்களுக்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார் யார்? இரா.முருகன் எழுபதுகளில் தமிழ்ச் சிறுகதையின் இரண்டாம் பொற்காலம் வந்த பிறகு (1940களின் மணிக்கொடிக்காலம் முதல் பொற்காலம்) இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறுகதைகள் வரவு குறைந்திருந்தது. இப்போது மறுபடி…
‘இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை jeyamohan60 blog-இல் பிரசுரமாக இருக்கிறது. இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல
இன்று சுஜாதா சார் பிறந்தநாள். சாஹித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ‘சுஜாதா’ நூலுக்கான முதல் வடிவத்திலிருந்து – ——————————————- சந்திப்பு – சென்னை 1995 அவர் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை முடிந்து வந்திருந்த நேரம். காலில் நீளமாக வடு. அறுவை சிகிச்சைக்காக அவரைக் குத்திக் கிழித்திருந்ததைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. ரெண்டாம் பைபாஸ் வெற்றிகரமாக முடிந்து அதற்கப்புறம் ரகளையாக இருபது வருடத்துக்கு மேல் அட்டகாசம்…
வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s lover who happens to be the mistress of the Spanish dictator and his lust for Achilles, the Greek warrior revived from the pages of an…