Archive For ஜூன் 30, 2022
மழை ஓவியர் ‘மழைநாள் திவசம்’ கவிதை எழுதிய ஞானக்கூத்தன் ‘மழைநாள் கலை இலக்கியக் கூட்டம்’ என்று இன்னொன்று எழுதாததற்குக் காரணம், இப்படியான கூட்டங்கள் அபூர்வமாகவே நடக்கின்றன என்பதே. கொட்டும் மழையில் இலக்கியக் கூட்டத்தை, அதுவும் சென்னைப் புறநகர் பகுதியில் ஏற்பாடு செய்து விட்டு எப்படியோ ஆட்டோ பிடித்து அன்றைய பேச்சாளரான முதுபெரும் இலக்கிய விமர்சகர் சி.சு.செல்லப்பாவோடு விருட்சம் பத்திரிகை ஆசிரியர் அழகியசிங்கர் போய் இறங்கினார். நாலே நாலு பேர் வந்த அந்த மழைக் கூட்டத்தைப் பார்த்து…
ஆப்பிள்காரர் வாழ்க்கை வரலாறுகள் படிக்க சுவாரசியமானவை – அவற்றில் மெயின் கதாபாத்திரமாக வருகிறவர்களுக்கு. சுயசரிதம் இன்னும் விசேஷமானது. உயிரோடு இருக்கும்போதே கடியாரத்தின் முள்ளைப் பின்னால் நகர்த்தி, பழைய காலண்டரை சுவரில் ஆணியடித்து மாட்டி, ஏற்கனவே நடந்ததை எல்லாம், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கிற படி மாற்றி அமைப்பது. இங்கே ஒரு காந்தி, அங்கே ஒரு லூயி பாஸ்டர் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் நேர்மையான சுயவரலாறுகளின் எண்ணிக்கை, வாழ்க்கை வரலாற்று…
இருபத்தைந்து பைச வரை இருக்கிற நாணயங்கள் டீ-மானிடைஸ் செய்யப்பட்டு, பணப்புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டதாக வெளியான செய்தி துக்ககரமானது. ஓட்டைக் காலணாவைப் பார்த்த ஞாபகம் தேசலாக இருக்கிறது. சாளூரில் இருந்து வெள்ளரிக்காயும், பச்சைக் கத்திரிக்காயும் விற்க வருகிற அப்பத்தாக்கள் தாலியில் கோர்த்துப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதைத்தவிர அறுபதுகளில் அந்தக் காசுகளுக்கு ஒரு பயனும் இருந்ததாகத் தெரியவில்லை. நிக்கல் காசு புழக்கத்தில் வந்ததும், அரசாங்கத்தில் அழகியல் ரசிகரான யாரோ அதிகாரி ரொம்ப யோசித்து குட்டியூண்டு சதுரமாக ஒரு பைசாவை…
மிளகு பெருநாவல் அறிமுகம், சிறப்புரை, கருத்தரங்கம் நிகழ்வுகள் 18 ஜூன் 2022 சனிக்கிழமை அறிமுக உரை திரு காளிப்ரஸாத் சிறப்புரை டாக்டர் திரு வ.வே.சுப்ரமணியன் திரு மந்திரமூர்த்தி அழகு திருமதி உமா ஸ்ரீதரன் திரு ஸ்ரீநிவாசராகவன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் காணொளி இங்கே https://www.facebook.com/ERA.MURUKAN/videos/316603194018031
நேற்று (17 ஜூன் 2022 வெள்ளிக்கிழமை) நண்பர் திரு கமல்ஹாஸன் அவர்களை சந்தித்து ‘மிளகு’ பெருநாவலை அன்பளித்து உரையாடிக் கொண்டிருந்தேன்.
மகாலிங்கய்யன் சமர்ப்பித்த கருணை மனுவிலிருந்து (கீழ்க்கண்ட சம்பவங்கள் நடந்தது டிசம்பர் 3,4 1899 விகாரி வருடம் கார்த்திகை 19, 20 புதன்கிழமை, வியாழக்கிழமை எனக் கருதப்படும்) திருக்கழுக்குன்றத்தில் தொழுதுவிட்டு, கழுகுகளின் தரிசனமும் முடித்துவர உத்தேசித்து நான் மாத்திரம் கிளம்பியது என் பூஜ்ய பிதாவின் சிரார்த்தம் முடிந்த தேய்பிறையில் திரயோதசிக்கு அடுத்த சதுர்த்தசியன்றைக்கு. அமாவாசைக்குக் கடையடைப்பு. முந்தின ரெண்டு தினமும் கடையில் ரஜா சொல்லியிருந்தேன். சிரார்த்த தினத்தில் விஷ்ணு இலையில் சாப்பிட்டு சோமனும் தட்சிணையுமாக புரோகித…